Press "Enter" to skip to content

தங்கம் விலை: உலகில் வெட்டி எடுக்க இன்னும் எவ்வளவு தங்கம் எஞ்சியுள்ளது?

  • ஜஸ்டின் ஹார்பர்
  • வணிக செய்தியாளர், பிபிசி நியூஸ்

கடந்த மாதம் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $2,000 (£1,575) வரை உயர்ந்தது.

தங்க வியாபாரிகளால் தான் இந்த விலை உயர்வு முன்னெடுக்கப்பட்டது என்றாலும், மதிப்புமிக்க இந்த உலோகம் இன்னும் எவ்வளவு கிடைக்கும், இது எப்போது காலியாகும் என்ற கேள்வியும் எழுகிறது.

முதலீட்டுக்கு உகந்ததாக தங்கம் உள்ளது. அந்தஸ்தைக் காட்டும் அடையாளமாக இருக்கிறது. பல எலெக்ட்ரானிக் பொருட்களில் முக்கியமான பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் அதன் வளத்திற்கு ஓர் எல்லை உள்ளது. தோண்டி எடுக்க இனி தங்கம் கிடையாது என்ற நிலை ஒருநாள் வரப் போகிறது.

உச்சத்தில் தங்கம்

குறிப்பிட்ட ஓர் ஆண்டில் நாம் எவ்வளவு தங்கத்தைத் தோண்டி எடுத்திருக்கிறோம் என்பதைக் குறிக்கும் வகையில் உச்சநிலை தங்கம் என்ற கோட்பாடு பற்றி நிபுணர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே உச்சபட்ச நிலையை நாம் எட்டிவிட்டோம் என்று சிலர் நம்புகின்றனர்.

2019 ஆம் ஆண்டில் சுரங்கங்களில் இருந்து 3,531 டன்கள் அளவுக்குத் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. 2018ல் கிடைத்ததைவிட இது ஒரு சதவீதம் குறைவு. என்று உலக தங்கக் கவுன்சில் தெரிவித்துள்ளது. 2008க்குப் பிறகு கடந்த ஆண்டில் தான் உற்பத்திக் குறைவு ஏற்பட்டிருக்கிறது.

“வரக் கூடிய ஆண்டுகளில் சுரங்கங்களில் கிடைக்கும் தங்கத்தின் அளவு குறையக் கூடும். இப்போதைய கையிருப்பு வளங்கள் குறையும் நிலையில், புதிய ஆதார வளம் கண்டுபிடிக்கப் படுவது அபூர்வமானதாகவே இருக்கிறது. அதாவது ஏற்கெனவே அதிகபட்சமாக தங்கம் வெட்டி எடுக்கும் நிலையை நாம் எட்டிவிட்டோம் , அது சற்று முன்னதாகவே நடந்திருக்கிறது” என்று உலக தங்கக் கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஹன்னா பிரான்ட்ஸ்டேட்டர் தெரிவித்தார்.

உச்சபட்சமாகக் கிடைக்கும் நிலையை நாம் எட்டிவிட்டாலும், அதற்கடுத்த ஆண்டுகளில் பெருமளவு உற்பத்தி சரிவு இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மாறாக பல தசாப்த காலங்களில் படிப்படியாக, நமக்குக் கிடைக்கும் தங்கத்தின் அளவு குறைந்து கொண்டே போகும் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

“சுரங்கத்தில் கிடைக்கும் தங்கம் குறித்த வரைபடத்தின் கோடு கிடைமட்டமாகிவிட்டது. அநேகமாக அது கீழ் நோக்கித் திரும்பலாம். ஆனால் பெரிய அளவில் சரிவு இருக்காது” என்று MetalsDaily.com -ல் பணியாற்றும் நிபுணர் ரோஸ் நார்மன் கூறுகிறார்.

ஆகவே இன்னும் எவ்வளவு மிச்சம் இருக்கும்?

பூமிக்கு அடியில் இன்னும் எவ்வளவு தங்கம் மிச்சம் இருக்கும் என்பதை சுரங்க நிறுவனங்கள் இரண்டு வழிகளில் கூறுகின்றனர்:

தங்கப் படிமங்கள் – இப்போதைய தங்க விலையில் தோண்டி எடுப்பது பொருளாதார ரீதியில் சாத்தியமான வழிமுறை.

ஆதார வளங்கள் – மேலும் ஆய்வு செய்து கண்டறிந்து தோண்டி எடுக்கப்படுவது – இது அதிகமான விலை கொண்டதாக இருக்கும்.

ஆதாரவளங்களைக் காட்டிலும், தங்கப்படிமங்கள் எவ்வளவு இருக்கின்றன என்பதை, எளிதாக கணக்கிட்டுவிடலாம். ஆனால் அது எளிதான பணி கிடையாது.

பூமிக்கடியில் இப்போது 50 ஆயிரம் டன்கள் அளவுக்கு தங்கப் படிமங்கள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

இதுவரை எடுக்கப் பட்டுளள 1 லட்சத்து 90 ஆயிரம் டன்கள் தங்கம் அளவுடன் ஒப்பிட்டால், இது கணக்கீடுகள் மாறுபடலாம்.

தோராயமான இந்த எண்களின் அடிப்படையில் பார்த்தால், இன்னும் 20 சதவீதம் தங்கம் தோண்டி எடுக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால் இந்த இலக்கு மாறிக் கொண்டிருக்காது.

இப்போது பொருளாதார ரீதியில் லாபகரமானதாக இல்லாத சுரங்கங்களில், தங்கத்தைப் பிரித்தெடுக்க புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுதப்படலாம்.

பிக் தரவு, செயற்கைப் புலனறிதல், ஸ்மால் தரவு சுரங்கப் பணி ஆகியவை சமீபத்திய புதுமை நுட்பங்களாக உள்ளன. இவை நமக்கு அதிகபட்ச தங்கத்தைப் பிரித்துக் கொடுத்து, செலவுகளைக் குறைக்க உதவுகின்றன.

சில இடங்களில் ரோபோக்கள் ஏற்கெனவே பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. சுரங்கத் தொழிலில் தரநிலைப்படுத்திய தொழில்நுட்பங்களை உருவாக்கும் முயற்சிகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் தோண்டி எடுப்பது கடினமானதாகவும், அதிகம் செலவு பிடிக்கக் கூடியதாகவும் மாறியுள்ளது.ு

மிகப் பெரிய ஆதாரவளங்கள்

வரலாற்றில் மிகப் பெரிய தனிப்பட்ட தங்க ஆதார வள இடமாக தென்னாப்பிரிக்காவில் உள்ள விட்வாட்டர்ஸ்ராண்டு பேசின் பகுதி உள்ளது. இதுவரை தோண்டி எடுக்கப்பட்டதில் 30 சதவீத தங்கம் அந்தப் பகுதியில் இருந்து தான் கிடைத்துள்ளது.

சீனாவில் ஆழமான எம்போனெங் சுரங்கம், ஆக்ஸ்திரேலியாவில் சூப்பர் பிட் மற்றும் நியூமோன்ட் போட்டிங்டன் சுரங்கங்கள், இந்தோனேசியாவில் கிராஸ்பெர்க் சுரங்கம், அமெரிக்காவில் நெவாடா சுரங்கங்கள் ஆகியவை மற்ற ஆதார வள மையங்களாக உள்ளன.

அதிக தங்கச் சுரங்கங்கள் கொண்ட நாடாக இப்போது சீனா உள்ளது. கனடா, ரஷ்யா, பெரு ஆகிய நாடுகள் அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளாக உள்ளன.

நிறுவனம்கள் என்று பார்த்தால் நெவடா தங்கச் சுரங்கங்களில் பெரும்பாலானவற்றைச் சொந்தமாக வைத்திருக்கும் பார்ரிக் கோல்டு நிறுவனம் தான் உலகில் மிகப் பெரிய அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனம் ஆண்டுக்கு 3.5 மில்லியன் அவுன்ஸ் தங்கம் உற்பத்தி செய்கிறது.

புதிய தங்கச் சுரங்கங்கள் இன்னும் கண்டுபிடிக்கப் படுகின்றன என்றாலும், பெருமளவில் தங்கப் படிமம் இருக்கும் பகுதிகள் அபூர்வமாகத்தான் தென்படுகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதன் விளைவாக, பல தசாப்தங்களாக பயன்பாட்டில் இருந்து வரும் பழைய சுரங்கங்களில் இருந்து தான் பெரும்பாலான தங்கம் உற்பத்தி கிடைக்கிறது.

சுரங்கப் பணி கடினமானதா?

பெரிய அளவில் சுரங்கப் பணி மேற்கொள்வது அதிக முதலீடு தேவைப்படும் தொழிலாக உள்ளது. நிறைய இயந்திரங்கள் தேவைப்படும், பூமிக்கடியில் பரந்த பகுதியில் சுரங்கம் அமைப்பதற்கு நிபுணர்கள் ஆலோசனை தேவை.

இன்றைக்கு, உலகில் சுரங்க செயல்பாடுகளில் 60 சதவீதம், திறந்தவெளி சுரங்கங்களாக உள்ளன. மீதி உள்ளவை பூமிக்கடியிலான சுரங்கங்களாக உள்ளன.

“பெரிய அளவிலான, குறைந்த செலவிலான சுரங்கங்களும், தென்னாப்பிரிக்காவில் உள்ளது போன்ற பழைய சுரங்கங்களும் ஏறத்தாழ தங்கம் கிடைக்காத நிலையை நெருங்கிவிட்டன” என்று நார்மன் கூறுகிறார்.

“மாறாக சீனாவில் உள்ள சிறிய தங்கச் சுரங்கங்களில், தங்கம் எடுப்பதற்கு அதிகம் செலவாகிறது” என்று அவர் குறிப்பிடுகிறார்.

தங்கம் தோண்டுவதில் ஆய்வுக்கு உட்படுத்தாத சில பகுதிகள் உள்ளன. மேற்கு ஆப்பிரிக்கா போன்ற உலகின் அதிக ஸ்திரமற்ற பகுதிகளில், நம்பிக்கை தரக் கூடிய சில சுரங்கங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

முன் எப்போதும் இல்லாத உச்சங்கள்

தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டது என்றாலும், தங்கத்தைத் தோண்டி எடுக்கும் பணி அதிகரிப்பதாக அது அமையவில்லை.

உண்மையில் தங்கச் சுரங்க உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, தங்கத்தின் விலை பெரும்பாலும் மாறுபடுகிறது.

“இதில் தொடர்புடைய செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு பார்த்தால், தங்கத்தின் விலை போன்ற புறக்காரணிகளுக்கு ஏற்ப சுரங்கப் பணி திட்டங்களை மாற்றுவதற்கு கால அவகாசம் தேவை” என்று பிராண்ட்ஸ்டேட்டர் கூறுகிறார்.

கோவிட்-19 கட்டுப்பாட்டுக் காலத்தில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது என்றாலும், தங்கம் தோண்டி எடுப்பது சிரமமானதாக இருந்தது. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலைத் தடுக்கும் நோக்கில் சுரங்கங்கள் மூடப்பட்டன அல்லது பகுதியளவு மூடப்பட்டன.

பொருளாதார நிச்சயத்தன்மை இல்லாத சூழ்நிலையில் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது என, நோய்த் தொற்று காலத்தில் முதலீட்டாளர்கள் கருதியதால் விலைகள் உயர்ந்தன.

நிலவில் தங்கம் இருக்கிறது

வழக்கத்திற்கு மாறான வளங்கள்

பூமிக்கடியில் எவ்வளவு தங்கம் இருக்கும் என்பதைக் கணக்கிடுவது கஷ்டம் என்றாலும், அது மட்டும் தான் ஒரே ஆதாரவளம் என்பது கிடையாது. நிலவிலும் கூட தங்கம் இருக்கிறது.

இருந்தாலும், அங்கு சுரங்கம் அமைத்து தங்கம் எடுத்து, பூமிக்குக் கொண்டு வருவதற்கான செலவு மிக அதிகமாக இருக்கும்.

“அங்கே தங்கம் இருக்கிறது என்றாலும், அதை எடுத்து, கொண்டு வருவது பொருளாதார ரீதியில் லாபகரமாக இருக்காது” என்று விண்வெளி நிபுணர் சினீயட் ஓ,சுல்லிவான் கூறுகிறார். “அந்தத் தங்கத்தை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகையைவிட, அதிக அளவில் செலவு செய்ய வேண்டியிருக்கும்” என்கிறார் அவர்.

அதேபோல, அன்டார்ட்டிக்காவில் சிறிதளவு தங்கப் படிமங்கள் உள்ளன. அங்கு நிலவும் அசாதாரணமான வானிலை காரணமாக, அதைத் தோண்டி எடுப்பதும் பொருளாதார ரீதியில் சாத்தியமற்றதாக இருக்கும்.

பெருங்கடல்களின் தரைமட்டத்தில் தங்கப் படிமங்கள் சிதறிக் கிடக்கின்றன என்றாலும், அவற்றைச் சேகரிப்பதும் பொருளாதார ரீதியில் லாபகரமானதாக இருக்காது.

கச்சா எண்ணெய் போன்ற புதுப்பிக்கத்தக்க தன்மை இல்லாத ஆதாரவளங்கள் மறுசுழற்சி செய்யக் கூடியவை. தங்கம் அதுபோல கிடையாது. நாம் தோண்டி எடுக்காமல் போனாலும், தங்கம் இல்லாமல் போய்விடாது.

கைபேசிகள் போன்ற மின்னணு சாதனங்களின் உற்பத்தியில் பெருமளவு தங்கம் பயன்படுத்தப் படுகிறது. அவை பயன்பாட்டுக்குப் பிறகு தூக்கி எறியக் கூடியவை. ஒரு செல்போனில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு, சில பவுண்ட்கள் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

மின்னணுக் கழிவுகளில் இருந்து பிரித்தெடுக்கும் தங்கத்த மறுசுழற்சி செய்வதற்கான முயற்சிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »