Press "Enter" to skip to content

ஆய்வகங்களில் உருவாக்கப்படும் தாய்ப்பால்: உண்மையான தாய்ப்பாலுக்கு மாற்றாக அமையுமா?

  • சேன்டிரைன் லுங்கும்பு
  • பிபிசி உலக சேவை

உங்களுக்குக் குழந்தைகள் இருந்தால், அல்லது நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்வதாக இருந்தால், “தாய்ப்பால் கொடுப்பதே நல்லது” என்று உங்களுக்குச் சொல்லி இருப்பார்கள். ஆனால், தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில், தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் என்ன நடக்கும்?

ஊட்டச்சத்துக்கு சிறந்த ஆதாரமாகவும், பிறந்தநிலையில் உள்ள குழந்தைகளுக்கு சக்தி தருவதாகவும், தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பதாகவும், உடல்பருமன் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க உதவுவதாகவும், வாழ்வின் பிற்காலத்தில் ஐ.க்யூ. திறனை அதிகரிக்கச் செய்வதாகவும் தாய்ப்பால் இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

தாய்ப்பால் கொடுக்க முடியாத அல்லது கொடுக்க விரும்பாத தாய்மார்களுக்கு, வாய்ப்பாடு பால் தான் மாற்று ஆதாரமாக உள்ளது. ஆனால் டர்ட்டில் ட்ரீ ஆய்வகம் மற்றும் பயோமில்க் போன்ற புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்) நிறுவனங்கள், மார்பகங்கள் இல்லாமல் உருவாக்கப்படும் நிஜமான தாய்ப்பால் மூலம் அதற்கு மாற்றை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.

`எனக்குப் பால் சுரக்கவே இல்லை’

தீபா குல்கர்னி

தன் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முயற்சித்தபோது ஏற்பட்ட சிரமங்களை இரண்டு குழந்தைகளின் தாயான தீபா குல்கர்னி நினைவுகூறுகிறார். “எனக்கு முதல் குழந்தை பிறந்தபோது எனக்கு சீம்பால் சுரந்தது. அவன் குடித்தான். ஆனால் அதன்பிறகு எனக்கு பால் சுரக்கவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

சீம்பால் என்பது குழந்தை பிறந்த முதல் சில தினங்களுக்கு மார்பகத்தில் உருவாகும் திடமான திரவம். அதன் அடர்வு அதிகமாக இருக்கும், வழக்கமாக பொன் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

“ஒரு மாத காலம் நாங்கள் முயற்சி செய்தோம். ஒரு நாளுக்கு அரை அவுன்ஸ் கூட சுரக்கவில்லை. சில நாட்களில் பால் வற்றிவிட்டது. அப்படியே நிலைமை தொடர்ந்தது. அவனுக்கு தாய்ப்பால் கிடைக்காமல் போனது” என்றார் அவர்.

முதல் குழந்தை பெற்ற ஒரு தாயாக, தீபா மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால் ஆரம்பத்தில் சமூக எதிர்பார்ப்புகளுக்கு எதிராக சிரமப்பட்டார்.

“நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்றாக இது உள்ளது. உங்களிடம் குறைபாடு இல்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்” என்றார் அவர்.

ஒரு புதிய அணுகுமுறை

பிறந்து சில தினங்களே ஆகியிருக்கும் குழந்தைக்கான வாய்ப்பாடு பால் பெரும்பாலும் பசுவின் பாலில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன. அந்தக் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு ஏற்புடையதாக இருக்கும் வகையிலும், குழந்தையின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் வகையிலும் அது தயாரிக்கப்படுகிறது. ஆனால், தாயின் பாலில் இருக்கும் அனைத்து பயன்களும் அதில் கிடைக்காது. அதுதான் இந்த நிறுவனங்களுக்கு புதிய உத்வேகத்தைத் தருவதாக அமைந்தது.

டர்ட்டில் ட்ரீ ஆய்வக நிறுவனம், தானமாக பெறப்பட்ட தாய்ப்பாலில் உள்ள ஸ்டெம்செல்களைப் பயன்படுத்துகிறது. அந்த செல்களை பயோ ரியாக்டரில் வைத்து, பால் சுரக்கும் செல்களாக வளரச் செய்யப்படுகின்றன.

பால் சுரக்கும் செல்கள் சிறப்பு பார்முலாவில் சேர்க்கப்படுவதால் அவை பால் சுரக்கின்றன. அதை வடிகட்டி இறுதி பால் தயாரிக்கப்படுகிறது.

ஏட்டளவில் பார்த்தால், எந்த ஒரு பாலூட்டியின் ஸ்டெம்செல் கிடைத்தாலும், அதைக் கொண்டு இதுபோல பால் தயாரிக்க முடியும்.

உணவுத் துறை விஞ்ஞானி மிச்செலி எக்கர் மற்றும் செல் உயிரியல் நிபுணர் லெய்லா ஸ்ட்ரிக்லேண்ட் ஆகியோரால் நடத்தப்படும் பயோமில்க் என்ற புத்தம்புதிய வணிக நிறுவனம் (புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்)) பாலூட்டி செல்களைப் பெறுவதற்கு வேறு நுட்பத்தைக் கையாள்கிறது. இது அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம்.

மனித இனத்தின் பாலில் புரதங்கள், கொழுப்பு அமிலங்கள், ஹார்மோன்கள், பாக்டீரியா மற்றும் சர்க்கரைச்சத்துகள் என ஆயிரக்கணக்கான சேர்மானங்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த அளவுக்கு ஏராளமான பொருட்கள் சேர்ந்திருப்பதால் தான் தாய்ப்பாலை போன்ற பாலை உருவாக்குவது சிரமமாக இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

“தாயின் ரத்தம், செரிமாண மண்டலம், நோய் எதிர்ப்பு மண்டலம், மார்பக நோய் எதிர்ப்பு மண்டலம் போன்ற பல இடங்களில் இருந்து உருவாகும் சேர்மானங்களில் இருந்து மனித இனத்தின் பால் உருவாகிறது.கொழுப்பு அமிலங்கள் சிதைக்கப்பட்டு தாயின் பாலில் சேர்கின்றன” என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியில் தாய்ப்பால் ஆராய்ச்சியாளராக இருக்கும் மருத்துவர் நட்டாலி ஷென்கெர் கூறுகிறார்.

தாய்ப்பால் ஊட்டுதலுக்கு ஆதரவான மனிதர்கள் பால் அறக்கட்டளையின் இணை நிறுவனராகவும் இவர் இருக்கிறார். தாய்ப்பால் தேவைப்படும் மற்ற தாய்மார்களுக்கு, தாய்ப்பால் உள்ள தாய்மார்கள் தானம் தருவதற்கான பிரிட்டன் பால் வங்கிகள் இல்லை.

நிஜமானதைப் போல அது இருக்குமா?

மனித இனத்தில் பாலில் உள்ள சில சேர்மானங்களை மட்டுமே, ஆய்வகத்தில் உருவாக்கப்படும் பாலில் காண முடியும். குறிப்பாக நோய் எதிர்ப்பாற்றல் என்று வரும்போது, பாலில் உள்ள சேர்மானங்களைப் பொருத்து ஒவ்வொருவருக்கும் அது மாறுபடுகிறது. தாய்ப்பாலுக்கு மாற்றான பாலை தயாரிப்பது தங்களுடைய நோக்கம் அல்ல என்று பயோமில்க் மற்றும் டர்ட்டில் ட்ரீ ஆய்வகம் ஆகியவை கூறியுள்ளன. வாய்ப்பாடு பால்களைவிட சிறந்ததாக, நீடித்த நன்மைகள் தருவதாக, அதிக ஊட்டச்சத்து மிகுந்த ஒரு பாலை உருவாக்குவதுதான் தங்கள் நோக்கம் என அந்த நிறுவனங்கள் கூறுகின்றன.

“தாய்ப்பால் தான் மிகச் சிறந்தது, யாராலும் அதற்கு மாற்றாக இன்னொன்றைத் தயாரிக்க முடியாது. எந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும் அது சாத்தியமாகும் என ஒருபோதும் நான் நம்பவில்லை. ஏனெனில் அது தனிப்பட்ட கலவையாக உள்ளது. தாய்மார்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப, அவர்களின் ஊட்டச்சத்திற்கு ஏற்ப தனித்துவமானது” என்று டர்ட்டில் ட்ரீ ஆய்வக இணை நிறுவனர் மேக்ஸ் ரியே கூறியுள்ளார்.

“சந்தையில் இருக்கும் மாற்று பொருட்களைவிட சிறந்த ஒன்றை உருவாக்குவதில் தான் நாங்கள் முயற்சி மேற்கொண்டிருக்கிறோம். இப்போது அவர்கள் காய்கறிகளின் சாறுகள் மற்றும் பல பொருட்களை பசுவின் பாலுடன் கலந்து தயாரிக்கிறார்கள். அவை தாய்ப்பாலின் குணாதிசயங்களைவிட பல, பல, பல மடங்கு குறைந்த தன்மைகளைக் கொண்டவை” என்கிறார் அவர்.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்ற நிலையில் தனித்துவமாக தாய்ப்பால் உற்பத்தி ஆகிறது என்று கடந்த சில தசாப்த காலங்களில் அறிவியல் ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது.

தாயின் பாலில் நோய் எதிர்ப்புத் தன்மை மற்றும் மரபணு நிலையில் மாறுபாடுகள் உள்ளன. பாலில் சேரும் சர்க்கரைச் சத்தின் அளவுகூட ஒவ்வொரு தாய்க்கும், குழந்தைக்கும் வெவ்வேறு மாதிரியாக இருக்கின்றன.

“தாயின் பால் என்பது கைவிரல் ரேகையைப் போன்ற தனித்துவமானது. அந்தக் குழந்தை மற்றும் குழந்தைக்கான உணவுக்கான தனித்துவ அடையாளம் கொண்டதாக இருக்கிறது” என்று மருத்துவர் ஷென்கெர் கூறியுள்ளார்.

“அது இருவழி செயல்முறையாக இருக்கிறது. தாம் வாழும் சுற்றுப்புற சூழலில் தாய் என்ன உணர்வுகளைப் பெறுகிறார் என்பதைப் பொருத்து அது அமைகிறது. அந்த உணர்வுகளுக்கு ஏற்ற சூழ்நிலைகள் அமைவதும் உண்டு. ஒரு தாய் பாக்டீரியா மற்றும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சூழலை எதிர்கொண்டால், நோய் எதிர்ப்பு மண்டலம் நோய் எதிர்ப்பு அணுக்களை உருவாக்கும். அவை மார்பகத்தை நோக்கி செலுத்தப்பட்டு, தாய்ப்பாலுடன் சேர்க்கப்படும். அந்தக் குறிப்பிட்ட கிருமிக்கு எதிராக குழந்தையைப் பாதுகாப்பதாக அது இருக்கும்” என்று அவர் விளக்குகிறார்.

முறையான பரிசோதனைகள் இல்லாமல் இவை சந்தைகளுக்கு வராது

தாய்மார்கள் குறைந்தபட்சம் முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. உலக அளவில் 6 மாதங்களுக்கும் குறைவான வயதில் உள்ளவர்களில் 40 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே தாய்ப்பால் கிடைக்கிறது.

டெல்லியில் தன் குடும்பத்தினருடன் தற்போது வாழும் தீபா, வாய்ப்பாடு பால் கொடுத்ததால் தன் குழந்தைகளுக்கு எதிர்வினை பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறுகிறார்.

“இப்போது 18 ஆண்டுகள் ஓடிவிட்டன. என் மகள் அல்லது மகனுடன் உள்ள பாசத்தில் எந்த மாற்றத்தையும் என்னால் காண முடியவில்லை. அவர்களின் ஆரோக்கியத்திலும் எந்த வித்தியாசத்தையும் காண முடியவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

அது சாத்தியமா?

வாய்ப்பாடு பால் மற்றும் தாய்ப்பாலுக்கு மாற்றாக ஒன்றை உருவாக்குவதில் நிறைய சவால்கள் உள்ளன என்று மருத்துவர் ஷென்கெர் கூறுகிறார். அது வணிக ரீதியில் சாத்தியமாக இருக்கும் என்பதும் அந்த சவால்களில் ஒன்றாக இருக்கும் என்கிறார் அவர்.

“திரவம் என்ற வகையில் ரத்தமும் பாலும் உண்மையில் மாறுபட்டவை அல்ல” என்று அவர் கூறியுள்ளார்.

“பல மில்லியன் ஆண்டுகளாக ஊட்டச்சத்துக்கான ஆதாரமாகவும், நோய் எதிர்ப்பாற்றலுக்கு ஆதரவானதாகவும், குழந்தையின் உறுப்புகள் வளர்ச்சிக்கு உகந்ததாகவும் பால் இருந்து வருகிறது. எனவே ரத்தத்தைக் காட்டிலும், மிகவும் சிக்கலான சேர்மான அமைப்புகளைக் கொண்டதாக இருக்கிறது.”

“ரத்த தானத்தில் உள்ள சவால்களை முறியடிக்க 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சிகள் நடந்து வருகிறபோதிலும், பாதுகாப்பான மற்றும் செயல்திறன்மிக்க மாற்று ரத்தம் எதுவும் சந்தைக்கு வரவில்லை. தனியாக சிறிதளவு முயற்சிகள் நடந்தபோதும் சந்தைக்கு வரும் அளவிற்கு இல்லை.”

“அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், தாய்ப்பாலுக்கு நெருக்கமான ஒரு பொருளைத் தயாரிப்பதற்கான வாய்ப்பு என்பது சாத்தியமற்றது என்றே நான் சொல்வேன். ஆனால், தாய்ப்பாலில் உள்ள சில பொருட்களை, குறிப்பிட்ட அளவிக்கு உருவாக்க முடியாது என்று சொல்ல முடியாது” என்று அவர் கூறினார்.

ஜூன் மாதத்தில் பயோமில்க் நிறுவனத்திற்கு 3.5 மில்லியன் டாலரும், டர்ட்டில் ட்ரீ ஆய்வகத்துக்கு 3.2 மில்லியன் டாலரும் நிதி கிடைத்தது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு உதவிகரமான செயல்பாடுகள் மேற்கொள்ள அல்லது தாய்ப்பால் வங்கி சேவைகளை அளிக்க, இந்த நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் நிதி உதவ வேண்டும் என்று தாய்ப்பால் தருவதை வலியுறுத்தும் குழுக்களும், மருத்துவர்களும் கூறுகின்றனர்.

சிங்கப்பூர் அரசிடம் இருந்து நிதி பெற்ற டர்ட்டில் ட்ரீ ஆய்வகம், தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு ஆதரவு அளிக்கவும், தாய்பால் தர விரும்பாத தாய்மார்களுக்கு உதவிடமும் இன்னும் அதிக நிதி தேவைப்படுவதாகக் கூறியுள்ளது.

“அது தனிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று நான் கருதவில்லை” என்று ரியே தெரிவித்தார்.

“தாய்ப்பால் ஊட்ட முடியாத குழந்தைகளுக்கு நல்ல தரமான அல்லது உயர் தரத்திலான பால்முலா பால் கிடைக்கச் செய்வதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று கருதுகிறேன். அதேபோல தாய்ப்பால் ஊட்டுவது குறித்து தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருத்தலுக்கும் செலவு செய்யப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

டர்ட்டில் ட்ரீ ஆய்வகம் தங்கள் தொழில்நுட்பத்தை, வாய்ப்பாடு பால் தயாரிப்பாளர்களுக்கு விற்பதற்குத் திட்டமிட்டுள்ளது. பயோமில்க் நிறுவனம் நேரடியாக நுகர்வோரிடம் விற்க திட்டமிட்டுள்ளது.

“தொழில்நுட்பம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. நாம் எந்த அளவுக்கு வெற்றி காண்கிறோம் என்பதுதான் முக்கியம். இதில் சில பொருட்களை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கு நாங்கள் முயற்சிக்கிறோம்” என்று ரியே தெரிவித்தார்.

கட்டுபடியாகும் விலையில் அவற்றை விற்க வேண்டும் என்பது தான் நோக்கம் என்றாலும், ஆரம்பத்தில் விலைகள் அதிகமாக இருக்கும் என்று டர்ட்டில் ட்ரீ ஆய்வகம் தெரிவித்துள்ளது.

“முதலில் வரும் பொருட்களின் விலை எப்போதும் அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் ஓராண்டு அல்லது அதற்கும் மேலான காலம் சென்றதும், சந்தையில் பெருமளவு விலைகள் குறையும்” என்று ரியே கூறுகிறார்.

“இந்தப் பொருளுக்கும் அதே நிலைதான் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் ஆரம்பத்தில் அதன் விலை மிக அதிகமாக இருக்கும்” என்கிறார் அவர்.

`பாதுகாப்புதான் என் மிகப் பெரிய கவலை’

ஆய்வகங்களில் உருவாக்கப்படும் தாய்ப்பால்: உண்மையான தாய்ப்பாலுக்கு மாற்றாக அமையுமா?

ஷிரீன் ஃபிரைடே என்பவர் தன் முதல் குழந்தைக்கு முதல் 15 மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுத்தார். ஆனால் வேலை ஈடுபாடுகள் காரணமாக, இரண்டாவது மகளுக்கு அவ்வாறு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை.

“கனடாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு என் மகள் பிறந்தபோது, தாய்ப்பால் கொடுக்க வேண்டும் அல்லது வாய்ப்பாடு பால் தர வேண்டும் என்ற வாய்ப்புகள் மட்டுமே எனக்குத் தெரிந்திருந்தது” என்று அவர் கூறுகிறார்.

இளம் தாயாக இருந்த நிலையில், தாய்ப்பாலை எடுத்து சேமித்து வைப்பது போன்ற மற்ற வாய்ப்புகள் பற்றி தமக்குத் தெரிந்திருக்கவில்லை என்று ஷிரீன் ஒப்புக்கொள்கிறார். தாய்ப்பால் மட்டும் தரும் தாய்மார்களுக்கு அது ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையாக இருந்தது.

இரண்டாவது மகளுக்கு, ஆரம்பத்தில் இருந்தே வாய்ப்பாடு பால் தரும் நிலையில், மீண்டும் பணிக்குச் செல்வது சிரமம் இல்லாதிருந்தது. ஆனால் ஆறு மாதங்கள் ஆனதும் அந்தக் குழந்தை வாய்ப்பாடு பால் சாப்பிடுவதை நிறுத்திவிட்டது.

“நான் எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்த்துவிட்டேன். தாய்ப்பாலைத் தவிர வேறு எதையும் அவள் விரும்பவில்லை. எனவே முதன்முறையாக என் பாலை நான் எடுத்து சேமிக்க வேண்டியதாயிற்று. இப்போது அவளுக்கு 16 மாதங்கள் ஆகிறது. இப்போதும் தாய்ப்பால் தான் தருகிறோம்” என்று அவர் கூறினார்.

“நான் பாலை எடுப்பதற்கான வேலை கடினமானது; தனிமைப்படுத்துவதாக, மனதளவில் தளர்வு ஏற்படுத்துவதாக இருக்கும். பெரும்பாலான நேரங்களில் நீங்கள் அங்கே அமர்ந்திருக்க வேண்டும். உங்களிடம் எவ்வளவு பால் இருக்கிறது என்பதைப் பொருத்து 30 நிமிடங்கள் வரை கூட ஆகலாம். நேரடியாக தாய்ப்பால் தருவதைவிட, தாய்ப்பாலை வெளியே எடுப்பது அதிக வலி மிகுந்ததாக இருப்பதாக உணர்கிறேன். அது தொடர்ந்து இழுத்துக் கொண்டு இருப்பதைப் போல உள்ளது” என்றார் அவர்.

வாய்ப்பாடு அல்லது தாய்ப்பாலுக்கு மாற்றாக பயோ என்ஜினியரிங் செய்த பாலை பயன்படுத்துவதில் ஷிரீனுக்கு விருப்பம் இல்லை.

“ஒவ்வொரு தாயையும் போலத்தான் நான் யோசிக்கிறேன். பாதுகாப்பு பற்றி நிச்சயமாக எனக்கு கவலை இருக்கிறது. குறிப்பாக ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் பொருள் எதுவாக இருந்தாலும், அது எந்த அளவுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும் என்ற கவலை உள்ளது. பிறந்து சில நாட்கள் ஆன நிலையில் இருக்கும் குழந்தைகள் ஏற்கெனவே எந்த பாதிப்புக்கும் ஆட்படக் கூடிய நிலையில் இருப்பார்கள். எனவே அவர்கள் 100 சதவீதம் பாதுகாப்பானது என்று கூறினாலும், எனக்கு நம்பிக்கை வராது. பழையவர்களின் பார்முலாவை தான் நான் பின்பற்றுவேன்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்தப் பால் எப்படி தயாரிக்கப் படுகிறது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது தான் மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று டர்ட்டில் ட்ரீ ஆய்வகம் கூறியுள்ளது. செல்களை பெருகச் செய்வதற்கு நாங்கள் கடைபிடிக்கும் நடைமுறையில், செயற்கை ரசாயனங்கள் எதுவும் பயன்படுத்தப் படுவதில்லை என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

“செல்கள் வளர்வதற்கு நாங்கள் பயன்படுத்தும் திரவம், மனித உடலில் அல்லது பசுவின் உடலில் இருக்கும் அதேபோன்றது தான். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மனிதர்கள் அதை சாப்பிடலாம்” என்று ரியே தெரிவித்தார்.

புதிய பொருட்கள் மீதான ஒழுங்குமுறைகள் மற்றும் தயாரிப்பு நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மை குறித்து விமர்சகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பால் பற்றிய தகவல்களை மட்டுமே டர்ட்டில் ட்ரீ ஆய்வகம் அதிக தகவல்களைத் தெரிவிக்கிறது. இறுதிப் பொருள் பற்றியும், அது எப்படி உருவாக்கப்படுகிறது என்பது பற்றியும், பெற்றோர்கள் வாங்கும் நிலையில் பின்னர் தகவல்கள் வெளியிடப்படும் என்று சொல்லப்படுகிறது.

“விரிவான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மக்கள் பயன்பாட்டு சோதனைகள் இல்லாமல் இவை எதுவுமே விற்பனைக்கு வராது. குறிப்பாக, ஏற்கெனவே மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் பெரிய வாய்ப்பாடு நிறுவனங்களுடன் நீங்கள் பணியாற்றும் போது இவையெல்லாம் நடக்கும்” என்று அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »