Press "Enter" to skip to content

மலேசியாவில் உச்சம் தொட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): சிங்கப்பூரில் என்ன நிலவரம்?

மலேசியாவில் முதல் முறையாக ஒரே நாளில் பதிவாகும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 287 பேருக்கு அங்கு நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சகத்தின் தலைமை ஆணையர் மருத்துவர் நூர் ஹிஷாம் இன்று மதியம் தெரிவித்துள்ளார்.

இது மலேசியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவத் தொடங்கியது முதல் ஒரே நாளில் பதிவான உச்சபட்ச எண்ணிக்கை என்று அவர் சுட்டிக் காட்டுகிறார். இதையடுத்து அனைவரும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று மலேசிய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதே வேளை, மலேசியாவை விட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சிங்கப்பூரில் நேற்று புதிதாக 10 பேருக்கு மட்டுமே நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இது கடந்த மாதங்களில் அங்கு பதிவான அன்றாட பாதிப்பு அளவில் ஆகக் குறைந்த எண்ணிக்கை ஆகும்.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) விவகாரத்தில் சிறப்பாகச் செயல்பட்ட நாடுகளின் பட்டியலில் மலேசியாவும் இடம்பெற்றுள்ளது. அண்டை நாடான சிங்கப்பூரில் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்த போதும் மலேசியா ஊரடங்கு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளின் துணையோடு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் குறைவாக இருந்த நிலையில், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 170க்கும் குறைவாகவே இருந்தது. அதன் பின்னர் அன்றாடம் பதிவாகும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை ஒற்றை, இரட்டை இலக்கங்களிலேயே இருந்து வந்தது.

நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)

இந்நிலையில் மலேசியாவின் சபா மாநிலத்தில் புதிய நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகத் தொடங்கின. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு மத்தியில் அங்கு அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இதையடுத்து நாடு முழுவதிலும் இருந்து அரசியல் கட்சித் தலைவர்களும் நிர்வாகிகளும் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றனர். தேர்தல் முடிந்து அனைவரும் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ள நிலையில், நாட்டின் பிற பகுதிகளிலும் புதிய நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று சம்பவங்கள் பதிவாகத் துவங்கி உள்ளன.

தற்போது அனைத்து மாநிலங்களிலும் புது கோவிட்-19 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து மலேசியாவில் புதிய கோவிட்-19 அலை துவங்கியிருக்கக் கூடும் என மருத்துவர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

“தற்போதைய நிலையில் பாதிப்பின் அளவை குறைப்பது நம் கையில் தான் உள்ளது. நாம் ஏற்கெனவே இதைச் செய்துள்ளோம். கடந்த மார்ச் மாதத்தில் நம்மிடம் போதுமான அனுபவம் இல்லை. அன்றைய நிலையுடன் ஒப்பிடும்போது இப்போது நம்மிடம் அனுபவம் உள்ளது. அனைவரும் இணைந்து செயல்படும் பட்சத்தில் சாத்தியமே இல்லை என்று கூறப்படுவதையும் சாத்தியமாக்க முடியும்,” என்று நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

தேவையின்றி யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் ஒருவேளை வெளியே செல்ல நேர்ந்தால் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து மலேசியாவில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்படலாம் என்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. எனினும் அரசுத் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இது தொடர்பாக வெளியாகவில்லை.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,771 என்றும், 10,095 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போது 1,540 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை 136ஆக உள்ளது என்றும் அந்த அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர்

சிங்கப்பூர் நிலவரம்:

இதற்கிடையே சிங்கப்பூரில் நேற்று புதிதாக பத்து பேருக்கு நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றியது உறுதியாகி உள்ளது. கடந்த மார்ச் 12ஆம் தேதிக்குப் பிறகு அங்கு அன்றாடம் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கையில் இதுவே ஆகக் குறைந்தது என ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

சிங்கப்பூரில் இதுவரை கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 57,794.

இவர்களில் வியாழக்கிழமை வரையிலான நிலவரப்படி, 57,497 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 27ஆக உள்ளது. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் வேறு காரணங்களுக்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 பேர் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »