Press "Enter" to skip to content

‘மரத்தை அணைத்து தழுவும் புலி’: சிறந்த வனவிலங்கு புகைப்படமாக தேர்வு

பூமியில் இருக்கும் ஒரு அரிதான விலங்கை புகைப்படம் எடுக்க திறமையும், கூடவே அதிஷ்டமும் தேவை.

அது இரண்டுமே புகைப்படக் கலைஞர் செர்கேய் கோர்ஷ்கோவுக்கு இருக்கிறது.

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள காடுகளின் உள்ளே இந்த புலியை படம் பிடித்துள்ளார் செர்கேய்.

இப்புகைப்படத்தால் அவருக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த புகைப்படக் கலைஞர் விருது கிடைத்துள்ளது.

சிறுத்தை தேசிய பூங்கா என்ற இடத்தில் இப்புலி மரத்தை கட்டித்தழுவி, தனது வாசனையை அந்த இடத்தில் விட்டுச் சென்ற படம்தான் அது.

“புகைப்படத்தில் இருக்கும் சரியான அளவு ஒளி, நிறங்கள், எடுக்கப்பட்ட விதம் – ஒரு ஓவியத்தைப்போல இருக்கிறது” என ஆண்டுக்கான சிறந்த புகைப்படத்தை தேர்வு செய்யும் குழுவின் தலைவர் ரோஸ் கிட்மேன்-காக்ஸ் தெரிவித்தார்.

“அந்த காட்டின் ஒரு பகுதியாக அப்புலி தோன்றியது. அதனுடைய வால், மரத்தின் வேருடன் ஒண்றினைந்தவாறு இருக்கிறது. இரண்டும் ஒன்றுபோல காட்சி அளிக்கிறது” என பிபிசியிடம் பேசிய கிட்மேன் கூறினார்.

இந்த புகைப்படம் எவ்வாறு எடுக்கப்பட்டது?

காட்டில் ஓரிடத்தில் ஒளிக்கருவி (கேமரா) பொருத்தப்பட்டிருந்தது. புலி வந்தால், படம் எடுக்கும்படியாக செட் செய்யப்பட்டிருந்தது.

படத்திற்கான ஃப்ரேம் எல்லாம் சேர்காய் செட் செய்திருந்தார்.

புலி

கிழக்கு ரஷ்யாவில் புலிகள் அதிகம் வேட்டையாடப்பட்டு, தற்போது அழியும் விளிம்பில் சில நூறு புலிகள் மட்டுமே அங்கு வசிக்கின்றன.

அதற்கு உணவாக இருக்கும் மான், காட்டுப்பன்றியும் அங்கு குறைந்துவிட்டன. அதனால் புலிகள் உணவுக்காக நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய நிலை இருக்கிறது.

இதனாலும் அங்கு புலிகளை படம் பிடிப்பதாக அவ்வளவு எளிதானது அல்ல.

புலி

இந்த புகைப்படத்திற்காக காட்டில் சுமார் 10 மாதங்கள் ஒளிக்கருவி (கேமரா) வைக்கப்பட்டிருந்தது.

சிறந்த வனவிலங்கு புகைப்படக்கலைஞராக பொறுமை என்பது மிகவும் அவசியமாகிறது. இந்த பரிசு லண்டன் நேச்சுரல் ஹிஸ்டரி ஆஃப் மியூசியம் நடத்திய நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »