Press "Enter" to skip to content

கொரோனா தொற்று பாதித்த பிறகு ஒருவரின் நோய் எதிர்ப்புத்திறன் குறையுமா?

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலுக்கு ஆட்பட்ட பிறகு “வெகு வேகமாக” நோய் எதிர்ப்புக் கிருமிகளின் அளவு குறைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் நோய் எதிர்ப்புக் கிருமிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)கள் நமது உடலின் செல்களில் நுழையாமல் அவை தடுக்கின்றன.

கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் உடலில் நோய் எதிர்ப்புக் கிருமிகளின் அளவு ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் 26 சதவீதம் குறைந்துள்ளது என்று பிரிட்டனில் உள்ள லண்டன் இம்பீரியல் கல்லூரி நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

நோய் எதிர்ப்பாற்றல் மெல்ல குறைவது போல தெரிகிறது, இதனால் பல முறை நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலுக்கு ஆட்படக் கூடிய ஆபத்து உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர். ரியாக்ட் -2 என்ற இந்த ஆய்வில் ஒரு பகுதியாக இங்கிலாந்தில் 350,000 பேருக்கும் மேற்பட்டவர்கள் இதுவரையில் நோய் எதிர்ப்புக் கிருமி பரிசோதனையில் பங்கேற்றுள்ளனர்.

ஜூன் மாத இறுதி மற்றும் ஜூலை மாத ஆரம்பத்தில் நடந்த முதலாவது சுற்று பரிசோதனையில் ஆயிரம் பேரில் 60 பேருக்கு, கண்டறியக் கூடிய அளவில் நோய் எதிர்ப்புக் கிருமிகள் இருந்தன.

Banner image reading 'more about coronavirus'
Banner

ஆனால் கடைசியாக செப்டம்பரில் நடந்த பரிசோதனையில் ஆயிரத்தில் 44 பேருக்கு மட்டுமே நோய் எதிர்ப்புக் கிருமிகள் இருந்தன.

அதாவது நோய் எதிர்ப்புக் கிருமி உள்ளவர்களின் எண்ணிக்கை கோடை மற்றும் இளவேனில் காலத்துக்கு இடைப்பட்ட காலத்தில் கால்வாசி அளவுக்குக் குறைந்துள்ளது.

“நோய் எதிர்ப்பாற்றல் வெகு வேகமாகக் குறைகிறது. முதலாவது சுற்று பரிசோதனைகள் முடிந்து 3 மாதங்கள் தான் ஆகின்றன. இதிலேயே 26 சதவீதம் குறைந்துள்ளது” என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஹெலன் வார்டு தெரிவித்தார்.

கோவிட்-19

கோவிட்-19 நோய் அறிகுறி இல்லாதவர்கள் மற்றும் இளவயதினருடன் ஒப்பிடும்போது, 65 வயதுக்கும் மேற்பட்டவர்களிடம் இந்தச் சரிவு அதிகமாக உள்ளது.

நோய் எதிர்ப்புக் கிருமிகள் உள்ள சுகாதார சேவை அலுவலர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக உள்ளது என்றும், தொடர்ந்து நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சூழலுக்கு ஆட்படுவதே இதற்குக் காரணமாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) மீது நோய் எதிர்ப்புக் கிருமிகள் ஒட்டிக் கொள்வதால், உடலின் செல்களில் நுழைவதைத் தடுத்து, மீதி நோய் எதிர்ப்பு மண்டலத்தின் கவனத்தை ஈர்க்கின்றன.

நோய் எதிர்ப்புக் கிருமி குறைவது, நோய் எதிர்ப்பாற்றலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. டி-செல்கள் (T-cells) போன்ற மற்ற பகுதிகளும் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் உள்ளன. இவை புதிய தொற்று செல்களை நேரடியாகக் கொல்வதுடன், உதவிக்கு மற்ற நோய் எதிர்ப்பு செல்களை அழைப்பதாகவும் இவை உள்ளன.

இருந்தபோதிலும், யாரெல்லாம் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை அனுமானிப்பதற்கு நோய் எதிர்ப்புக் கிருமிகள் உதவுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

“நோய் எதிர்ப்புக் கிருமிகளை நாங்கள் பார்க்க முடியும். அவை குறைவதைக் காண முடிகிறது. நோய் எதிர்ப்புக் கிருமிகள் தாமாகவே மிகவும் தற்காப்பானவை” என்று பேராசிரியர் வென்டி பர்க்ளே கூறியுள்ளார்.

``நோய் எதிர்ப்புக் கிருமிகளை நாங்கள் பார்க்க முடியும். அவை குறைவதைக் காண முடிகிறது

“ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தால், நோய் எதிர்ப்புக் கிருமிகள் குறைகிற அதே அளவுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலும் குறைவது போல தெரிகிறது. அது தான் நோய் எதிர்ப்பாற்றல் குறைவுக்கான அறிகுறி” என்று அவர் குறிப்பிடுகிறார்.

நமது வாழ்வில் நம்மை தாக்கும் வேறு 4 வகை மனித கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)களும் இருக்கின்றன. அவை சாதாரண சளி அறிகுறிகளை ஏற்படுத்தும். ஆறு அல்லது 12 மாதங்களுக்கு ஒரு முறை மீண்டும் அந்தத் தொற்றுக்கு நாம் ஆளாகக்கூடும்.

மிக சிலருக்கு மட்டுமே கோவிட் நோய் இரண்டாவது முறையாக தாக்கியுள்ளது. இருந்தாலும், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நோய் பாதிப்பு அதிகபட்சமாக இருந்த சமயத்திற்குப் பிறகு, நோய் எதிர்ப்பாற்றல் மெல்ல மெல்ல குறைவதால் தான் இரண்டாவது முறையாக தாக்கியிருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

முதலாவது நோய்த் தொற்றைவிட, இரண்டாவது பாதிப்பு லேசானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தாலும்கூட, முதலாவது பாதிப்பின் போது ஏற்பட்ட “நோய் எதிர்ப்பு நினைவாற்றல்” உடலுக்குள் இருக்கும், அதனால் இரண்டாவது தொற்றை எதிர்த்து எப்படி போராட வேண்டும் என்று உடலுக்குத் தெரியும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

தாங்கள் கண்டறிந்துள்ள விஷயங்கள், தடுப்பு மருந்து மீதான நம்பிக்கையைத் தகர்ப்பதாக இருக்காது என்றும், உண்மையான தொற்றுக்கு சிறந்த தீர்வாக அது அமையக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

“முதலாவது சுற்று பாதிப்பு ஏற்பட்ட பிறகு, பாதுகாப்பு எதிர்ப்பாற்றல் பெரும்பாலானவர்களிடம் இல்லை என்பது தான் பெரிய விஷயமாக இருக்கிறது” என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான கிரஹம் குக் தெரிவித்தார்.

“தடுப்பு மருந்துக்கான தேவை பெரிய அளவில் இருக்கிறது. இந்தத் தகவல்களால், தடுப்பு மருந்துக்கான தேவை மாறிவிடாது” என்று அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19

தடுப்பு மருந்தின் தாக்கம் குறித்து இந்த ஆய்வின்படி முடிவு எடுப்பது தவறாகிவிடும் என்று ரியாக்ட்-2 ஆய்வின் டைரக்டரான பேராசிரியர் பால் எலியட், கூறியுள்ளார்.

“இயல்பான நோய்த் தொற்றுக்கு எதிரான செயல்பாடுகளைக் காட்டிலும், தடுப்பு மருந்து வேறு வகையில் செயல்படுவதாக இருக்கலாம்” என்று அவர் தெரிவித்தார்.

சிலருக்கு காலப்போக்கில் குறையும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்துக் கொள்வதற்கு தடுப்பு மருந்தில் கூடுதலா பூஸ்டர் டோஸ் ஆக போட்டுக் கொள்ள வேண்டிய தேவை இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த தகவல்கள் பற்றி கருத்து கூறிய நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோனாதன் பால், “நோய் எதிர்ப்புக் கிருமி செயல்பாடுகள் பற்றிய சந்தேகங்களை இந்த ஆய்வு உறுதி செய்கிறது. குறிப்பாக எளிதில் பாதிப்புக்கு ஆளாக வாய்ப்புள்ள முதியவர்களிடம் காலப்போக்கில் இது குறைவதை ஆய்வு உறுதி செய்கிறது” என்று கூறினார்.

இருந்தபோதிலும், “தற்காப்பான நோய் எதிர்ப்பாற்றல் எப்படி இருக்கும்” என்பது குறித்து ஒட்டுமொத்தமான விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டியது முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

நோய் எதிர்ப்பாற்றல் நீடித்திருப்பதில்லை என்று அனுமானிப்பது “முன்கூட்டியே எடுக்கும் முடிவாக” இருக்கும் என்று எடின்பர்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் எலியனோர் ரிலே கூறினார். ஆனால் “இயல்பான நோய்த் தொற்றுக்கு எதிராக உருவாகும் நோய்க் கிருமிகள் குறைந்த காலமே உயிர்ப்புடன் இருக்கும் என்ற கவலையை அதிகரிக்கச் செய்வதாக இந்தத் தகவல்கள் உள்ளன. பருவநிலை மாற்றத்தில் ஏற்படும் மற்ற கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பின் போது நடப்பதைப் போல இது உள்ளது” என்று அவர் குறிப்பிடுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »