Press "Enter" to skip to content

ஜோ பைடன் அமெரிக்க அதிபராவதை டிரம்ப் நீதிமன்றம் மூலம் நிறுத்த முடியுமா?

அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர்க் கட்சியான ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் பெரும்பான்மைக்கு தேவையான 270 தேர்தல் சபை உறுப்பினர்களைவிட அதிகமான எண்ணிக்கையைப் பெற்றுள்ளதாக பிபிசி கணிப்பு உறுதிசெய்துள்ளது.

பிற மாகாணங்களின் முடிவுகள் முழுமையாகக் கணிக்கப்பட்டு, அவற்றில் 253 தேர்தல் சபை உறுப்பினர்களைப் பெற்றிருந்த பைடன், பென்சில்வானியா மாகாணத்தையும் கைப்பற்றி 273 தேர்தல் சபை உறுப்பினர்களை பெற்றுள்ளார்.

சட்ட ரீதியான சிக்கல்கள் எதுவும் இல்லை என்றால், வழக்கமாக அமெரிக்க அதிபர்கள் பதவியேற்கும் ஜனவரி 20ஆம் தேதி, பைடன் அமெரிக்க அதிபராகப் பதவியேற்க முடியும்.

தற்போதைய அதிபர் தனது தோல்வியை இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை.

தற்போது பதவியில் இருக்கும் குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் டிரம்ப் கடந்த சில நாட்களாகவே தேர்தலில் மோசடி நடந்தது என்றும் அதற்காக தங்கள் தரப்பு உச்ச நீதிமன்றம் செல்லும் என்றும் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.

ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதையும் அவர் முன்வைக்கவில்லை. தேர்தல் மோசடி என்று அவர் எதை குறிப்பிட்டார் என்பதும் தெளிவாக வெளிப்படுத்தப்படவில்லை.

மிஷிகன், பென்சில்வேனியா உள்ளிட்ட பல முக்கிய மாகாணங்களில் தேர்தல் முறைகேடு நடந்துள்ளது என்றும், அதனால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று டிரம்பின் பிரசார குழுவினர் வழக்கு தொடுத்தனர்.

ஆனால் அந்த மாகாணங்களில் இருந்த நீதிபதிகள் டிரம்ப் தரப்பின் வழக்குகளை நிராகரித்தனர்.

வாக்குப்பதிவு நடந்த தேதியிடப்பட்ட, ஆனால் மூன்று நாட்கள் கழித்து தேர்தல் அதிகாரிகள் கைக்கு கிடைத்த தபால் வாக்குகளை என்ன பென்சில்வேனியா மாகாண அரசு முடிவு செய்தது.

இதனால் வாக்குப்பதிவை நிறுத்த வேண்டுமென்று டிரம்ப் தரப்பு நீதிமன்றத்தை அணுகியது. அதை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. தற்போது குடியரசுக் கட்சியினர் இது தொடர்பாக மேல் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Section divider

பைபார்டிசன் கொள்கை ரிசர்ச் சென்டர் எனும் சமூக ஆய்வு மையத்தின், தேர்தல் திட்ட இயக்குநர் மேத்யூ வெய்ல் இது ஒரு கவலைக்குரிய விஷயம் என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான சிக்கல் எடுப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் அரசால் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் ஏமி கோனே பாரெட். இவர் குடியரசு கட்சி சார்புடைய பழைமைவாதியாகக் கருதப்படுபவர். தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன் இவரை நீதிபதியாக நியமிக்க ஜனநாயகக் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.

“தாங்கள் வெளிப்படுத்தும் எதிர்ப்புகளில் தாமதமாகக் கிடைக்கப்பெற்ற தபால் வாக்குகள் விவகாரத்தைக் கையில் எடுப்பதாக டிரம்ப் தரப்பு குறிப்பால் உணர்த்துகிறது. தேர்தல் நாளன்று வாக்குப் பதிவு செய்யப்பட்ட ஆனால் வெள்ளிவரை தேர்தல் அதிகாரிகள் கைக்கு வந்து சேராத வாக்குச்சீட்டுகள் செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்படலாம். அப்படிச் செய்தால் அது தவறான தேர்தல் முடிவை தரும். ஆனாலும் சட்டரீதியாக அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட சாத்தியம் உள்ளது என்கிறார் வெய்ல்.

அந்த முடிவு தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்துவதற்கு டிரம்ப் மற்றும் பைடன் இடையிலான வேறுபாடு மிக மிகக் குறைவானதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே பைடன் 30 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று அதன் அடிப்படையிலேயே பென்சில்வேனியா மாகாணத்தைக் கைப்பற்றியுள்ளதாக நாம் கண்டிக்கிறோம் என்கிறார் அவர்.

Section divider

விஸ்கான்சின் மாகாணத்தில் தேர்தல் நாளன்று வழக்கத்துக்கு மாறான சம்பவங்கள் நடைபெற்றதாக கூறி மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்று டிரம்ப் தரப்பு கூறுகிறது. ஆனால் இது நிச்சயம் நடக்குமா என்று தெரியவில்லை.

ஏனெனில் உள்ளூர் அதிகாரிகள் வாக்குகளை மறு ஆய்வு செய்த பின்பு வழக்கமாக மறு வாக்கு எண்ணிக்கை நடக்காது.

அதுமட்டுமல்லாமல் வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடிப்பதற்கு விஸ்கான்சின் மாகாணம் நவம்பர் 17ஆம் தேதியை கடைசி தேதியாக நிர்ணயித்துள்ளது.

2016ஆம் ஆண்டிலும் விஸ்கான்சின் மாகாணத்தில் வாக்குகள் மறு எண்ணிக்கை செய்யப்பட்டன. ஆனால் இது சுமார் நூறு வாக்குகளைத்தான் மாற்றியது என்கிறார் கொலம்பியா பல்கலைக்கழக சட்ட பேராசிரியர் ரிச்சர்ட் ப்ளஃபால்ட்.

மறு வாக்கு எண்ணிக்கை என்பது வாக்குகள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகுமா என்பதை எதிர்ப்பதில்லை. எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை சரியானதாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவது மட்டுமே என்கிறார் அவர்.

Section divider

மிஷிகன் மாகாணத்தை 2016ஆம் ஆண்டில் 10,700க்கும் சற்று அதிகமான வாக்குகளை பெற்று கைப்பற்றினார் டிரம்ப்.

இந்த மாகாணத்தில் நேரில் வந்து வாக்களிக்க முடியாமல் முன்கூட்டியே வாக்களித்த நபர்களின் தபால் வாக்குகளை கையாள்வதில் முறைகேடு நடந்ததாக நவம்பர் நான்காம் தேதி டிரம்ப் தரப்பு குற்றம்சாட்டியது.

ஆனால் அப்போதே 96 சதவிகித வாக்குகள் உள்ளூர் தேர்தல் அதிகாரிகளால் மறுஆய்வு செய்யப்பட்டு இருந்தன. இதுதொடர்பான வழக்கை அந்த மாகாணத்தில் உள்ள நீதிபதி ஒருவர் தள்ளுபடி செய்து விட்டார்.

இதேபோன்றதொரு குற்றச்சாட்டின் பேரில் ஜோர்ஜா மாகாணத்தில் உள்ள சாத்தம் கவுண்டியில் எழுப்பிய டிரம் தரப்பினர் அங்கு வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் அதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறி நவம்பர் 5ஆம் தேதி அந்த வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிபதி.

Section divider

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் வாக்கு ஏன் சட்டபூர்வமாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதற்கு எந்தவிதமான தனி அதிகாரமும் இல்லை என்று கூறுகிறார் வெய்ல்.

அதிபர் டிரம்ப் புதன்கிழமை அன்று நாங்கள் உச்ச நீதிமன்றம் செல்வோம் என்றும் அனைத்து வாக்குப்பதிவும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆதாரங்கள் எதையும் முன்வைக்கவில்லை என்றாலும் தேர்தலில் முறைகேடு நடந்தது என்று அவர் கூறியிருந்தார். ஆனால் அப்போது ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்து இருந்தது.

ஒபாமா அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்த ஜோ பைடன்

பென்சில்வேனியாவில் இருப்பதுபோல தபால் வாக்குகள் மட்டுமே சில இடங்களில் வந்து சேராமல் இருந்தன.

தேர்தல் பிரச்சனைகளை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முறையான சட்ட நடைமுறை என்று எதுவும் இல்லை. இது வழக்கத்துக்கு மாறானது அப்படி செல்ல வேண்டுமானால், அது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த விவகாரமாக இருக்கவேண்டும் என்று கூறுகிறார் பேராசிரியர் ரிச்சர்ட்.

தேர்தல் முடிவுகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டால், அவை முதலில் மாகாண நீதிமன்றங்களில்தான் தொடுக்கப்பட வேண்டும்.

அப்படி ஒரு வேளை மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டுமென்றால் மாகாண நீதிபதிகள் அதற்கு உத்தரவிட வேண்டும்.

ஆனால் அந்த உத்தரவை ரத்து செய்ய அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது .

ஒருவேளை இரண்டு வேட்பாளர்கள் இடையிலான வாக்கு எண்ணிக்கையில் வேறுபாடு மிகவும் குறைவானதாக இருந்தால் அதிகாரிகளே மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான சட்ட விதிகளும் உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »