Press "Enter" to skip to content

கரைவெட்டி பறவைகள் சரணாலயம்: கண்டுகொள்ளப்படாத நிலையில் – இயற்கை ஆர்வலர்கள் வேதனை

கரைவெட்டி பறவைகள் சரணாலயம் கண்டுகொள்ளப்படாத நிலையில் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் இருந்து, 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் கரைவெட்டி. இங்குள்ள ஏரியை நம்பி 50 ஆயிரம் ஏக்கரில் பாசன நிலங்கள் உள்ளன.

இந்த ஏரி, பாசனத்துக்குப் பயன்படுவதோடு மட்டுமல்லாமல் பறவைகளுக்கும் புகலிடமாக விளங்குவதால், ஏரியை சுற்றியுள்ள வனப்பரப்பை இணைத்து கிட்டத்தட்ட, 20 கிலோமீட்டர் பரப்பளவில், அதாவது 442.37 ஹெக்டேர் இடத்தை, பறவைகள் சரணாலயமாக கடந்த, 1999ல் அறிவித்தது தமிழக அரசு.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »