Press "Enter" to skip to content

கணினிமய செக்ஸ் மன்னனுக்கு 40 ஆண்டுகள் சிறை – தென் கொரியா நீதிமன்றம் தீர்ப்பு

(உலக அளவில் இன்றைய நாளில் நடந்த முக்கய செய்திகளின் சுருக்கத்தை இந்த பக்கத்தில் வழங்குகிறோம்.)

தென் கொரியாவை சேர்ந்த, சோ ச்சூ பின் என்கிற 25 வயது பட்டதாரி இளைஞர், பல பேரை மிரட்டி அந்தரங்க காணொளி பதிவுகளை எடுத்து இருக்கிறார். அவருக்கு 40 ஆண்டுகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஜோ ச்சூ பின் பதிவு செய்த அந்தரங்க காணொளிகளால் 16 இளம் வயது பெண்கள் உட்பட 74 பேர் சுரண்டப்பட்டு இருக்கிறார்கள்.

அப்படி எடுக்கப்படும் விடியோக்களை, லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் டெலிகிராம் செயலியில் இருக்கும் சாட் ரூமில் ஜோ ச்சூ பின் பகிர்ந்து இருக்கிறார்.

இவரின் சாட் ரூமில் பணம் செலுத்தினால் அந்தரங்க விடியோக்களைக் காணலாம். இதற்கு அதிகபட்சமாக சிலர் 1,200 அமெரிக்க டாலர் வரை கட்டணம் செலுத்தி இருக்கிறார்கள். குறைந்தபட்சமாக 10,000 பேர் இந்த சாட் ரூமை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

பலரை மிரட்டியும், ஆசை வார்த்தைகளைச் சொல்லி மயக்கியும் எடுக்கப்பட்ட அந்தரங்க விடியோ காட்சிகளை, பரவலாக விநியோகித்து இருக்கிறார்கள் என சோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் குறிப்பிடுவதாகக் யோன்ஹாப் செய்தி ஏஜென்சியில் கூறப்பட்டு இருக்கிறது.

இந்த விவகாரம் தென் கொரிய அரசுக்கு தெரிய வர, அவரை கைது செய்து விசாரித்து அவர் குற்றம் செய்ததை உறுதி செய்து இருக்கிறது.

இந்த விவகாரத்தில் 124 பேரையும், 18 சாட் ரூம் மற்றும் சமூக வலைதளத்தை இயக்கி வந்தவர்களையும் கைது செய்து விசாரித்திருக்கிறார்கள்.

தற்போது சோ ச்சூபின்-க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி இருக்கிறது தென் கொரிய நீதிமன்றம். சோ ச்சூ பின்னுடன் தொடர்புடைய 5 பேருக்கு 7 – 15 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை வழங்கி இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »