Press "Enter" to skip to content

பிரான்ஸ் இஸ்லாம்: அதிபர் உத்தேசித்த சாசனத்துக்கு உடன்பட இமாம்களுக்கு அரசு தரும் அழுத்தம்

  • லூசி வில்லியம்சன்
  • பிபிசி பாரிஸ் நிருபர்

பிரான்ஸில் அதிபர் எமானுவேல் மக்ரோங் உத்தேசித்துள்ள மதிப்பு நிறைந்த குடியரசு சாசனத்துக்கு அங்குள்ள இமாம்களுக்கு அழுத்தும் கொடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அதிபர் எமானுவேலை இந்த வாரம் சந்தித்துப் பேச முக்கிய இஸ்லாமிய அமைப்புகளின் இமாம்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.

பிரான்ஸின் குடியரசு மதிப்புகளில் வரையறுக்கப்பட்டுள்ள புதிய குடியரசு மதிப்புகளை ஏற்பது, இஸ்லாத்தை அரசியல் இயக்கமாக நிராகரிப்பது, அன்னிய தலையீடுக்கு தடை விதிப்பது ஆகியவற்றை ஏற்றுக் கொள்ள 9 தனித்தனி இஸ்லாமிய சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சி.எஃப்.சி.எம் என்ற கவுன்சிலுக்கு நிர்பந்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சி.எஃப்.சி.எம் மற்றும் பாரிஸ் பெரிய மசூதியின் தலைமை மதப்பெரியவர் செம்ஸ்-எடின் ஹஃபீஸ், “அதிபர் உத்தேசிக்கும் மதிப்புகள் சாசனம் என்ன, அதில் என்ன இருக்கும் என்பது தொடர்பாக நாங்கள் அனைவரும் உடன்படவில்லை” என கூறினார்.

ஆனால், “பிரான்ஸில் இஸ்லாமிய மதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தீர்மானிக்கும் வரலாற்றுப்பூர்வ திருப்பத்தில் நாம் இருக்கிறோம். இஸ்லாமியர்களான அந்த பொறுப்புகளை எதிர்கொள்கிறோம்,” என்கிறார் ஹஃபீஸ்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தையும் அவர் நம்மிடையை பகிர்ந்து கொண்டார்.

துலூஸில் இஸ்லாமியரான மொஹம்மது மேரா அப்போது (2012) பிரான்ஸில் துப்பாக்கி சூடு தாக்குதல்களை நடத்தியிருந்தார்.

அப்போது அதிபராக இருந்த சர்கோஸி தன்னிடம் பேச, அதிகாலை 5 மணிக்கே படுக்கையில் இருந்து எழச் செய்தார். நடந்த சம்பவத்தை அவர் விவரித்ததும் நான், “அவருடைய பெயர் மொஹம்மது ஆக இருக்கலாம். ஆனால், அவர் ஒரு குற்றவியல். அவர் இழைத்த குற்றத்தையும் எனது மதத்தையும் தொடர்புபடுத்த நான் விரும்பவில்லை” என அவரிடம் நான் தெரிவித்தேன்.

ஆனால், இன்று அவ்வாறு நான் செய்யும் நிலையில் இருக்கிறேன் பிரான்ஸில் உள்ள இமாம்களுக்கு நிறைய வேலை இருக்கிறது என்கிறார் ஹஃபீஸ்.

பிரான்ஸில் வாழும் இமாம்கள் தொடர்பான ஒரு பதிவேட்டை தயார்படுத்துவது தான் சி.எஃப்.சி.எம் என்ற கவுன்சிலின் திட்டம். அந்த இமாம்கள் அனைவரும் தங்களுக்கு அரசு தரும் அங்கீகாரத்துக்கு பதிலாக அது உத்தேசித்த சாசனத்தில் கையெழுத்திட வேண்டும்.

பிரான்ஸில் முஸ்லிம் தலைவர்களுக்கு கடுமையாக அழுத்தம் கொடுப்பது குறித்து கடந்த அக்டோபர் மாதத்திலேயே அதிபர் எமானுவேல் மக்ரோங் பேசினார். ஆனால் மதசார்பின்மை தழைக்கும் நாட்டின் இந்த பிராந்தியத்தில் அது சிக்கலாக இருந்தது.

மத நடைமுறைகள் மற்றும் பழக்க வழக்கங்களில் தலையிடாமல், ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையை தனிமைப்படுத்தப் பார்க்காமல், அரசியல் இஸ்லாத்தின் பரவலைத் தடுக்க முயற்சிக்கிறார் பிரான்ஸ் அதிபர் மக்ரோங்.

அனைத்து இஸ்லாமிய குழுக்களையும் பிரெஞ்சு சமுகத்தில் இணைப்பது சமீபத்திய ஆண்டுகளில் ஒரு முக்கியமான அரசியல் பிரச்னையாக மாறியுள்ளது. ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய எண்ணிக்கையில் இஸ்லாமிய சிறுபான்மையினர்கள் வாழும் நாடு பிரான்ஸ் தான். பிரான்சில் ஐந்து மில்லியன் இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர்.

France Islam: Muslims under pressure to sign French values charter

இந்த சாசனம் இரண்டு சிக்கல்களை எழுப்புகிறது. ஒன்று பாகுபாடு, ஏனெனில் அது முஸ்லாமிய மத போதகர்களை மட்டுமே குறிவைக்கிறது, மற்றொன்று மத சுதந்திரத்திற்கான உரிமை என்கிறார் பிரெஞ்சு இஸ்த்தில் நிபுணரான ஆலிவர் ராய்.

“நீங்கள் உங்கள் நாட்டின் சட்டங்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். ஆனால் அதன் மதிப்புகளைக் கொண்டாட வேண்டிய அவசியமில்லை. உதாரணத்துக்கு, எல்ஜிபிடி மீது நீங்கள் பாகுபாடு காட்ட முடியாது. ஆனால், கத்தோலிக்க திருச்சபைகள் ஒரே பாலின திருமணத்தை ஏற்றுக் கொள்ள கட்டாயப்படுத்தப்படவில்லை,” என்கிறார் ஆலிவர் ராய்.

கடுமையான இஸ்லாமிய சட்ட திட்டங்களை பின்பற்றுபவர்கள், தன் பிராண்டின் தலைப்பாகைகள் எப்போதும் பெண்களின் தலை முடியை போதுமான அளவுக்கு மறைப்பதில்லை என தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்கிறார் ஆடை வடிவமைப்பாளர் இமான் மெசடாயி.

பல இஸ்லாமியர்கள் முழுமையாக பிரெஞ்சுக்காரர்களாக இல்லாத போது, பிரான்ஸ் மதிப்பு சாசனத்தில், இமாம்களை கையெழுத்திட வைப்பது சிக்கலானது தான் என்கிறார் இமான் மெசடாயி.

நீங்கள் உங்களை பிரெஞ்சுக்காரர்களாக உணர்கிறீர்கள் என்றால், குடியரசு மதிப்புகளை நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள் என்பதைக் காட்ட வேண்டிய விசித்திரமான இடத்தில் தள்ளப்பட்டு இருக்கிறீர்கள். ஆனால் அதை அவர்கள் உணரவில்லை என்கிறார் இமான் மெசடாயி.

நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்பது போலத் தோன்றுகிறது. வரி செலுத்துங்கள், தேசிய சேவைகளைச் செய்யுங்கள் அதுவே போதுமானதாக இருக்கும். நீங்கள் உண்மையிலேயே பிரஞ்சு உணர்வோடு இருக்கிறீர்களா என்பதை நிரூபிக்க வேண்டும்: நீங்கள் பன்றி இறைச்சி சாப்பிட வேண்டும்; மது அருந்த வேண்டும், ஹிஜாப் அணியாமல் குட்டைப் பாவாடைகளை அணிய வேண்டும். அது வேடிக்கைக்குறியது என்கிறார் மெசடாயி.

‘தீவிரவாதிகள் ஒரு டைம் பாம்’

பல ஆண்டுகளாக பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு, அரசாங்கம் செயல்பட நிர்பந்திக்கப்பட்டுள்ளது என்கிறார் பாரிஸின் புறநகரில் உள்ள டிரான்சி மசூதியின் இமாமமாக இருக்கும் ஹாசன் சல்கவுமி. இது போன்ற தனது சீர்திருத்தக் கருத்துக்களால் கொலை மிரட்டல்கள் அதிகரித்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இப்போது தலைமறைவாக உள்ளார்.

நாம் பிரான்ஸ் உடன் ஒருங்கிணைந்தவர்கள் என்பதைக் காட்ட, நாம் இன்னும் நிறைய முன்னேறிச் செல்ல வேண்டும், நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம் என அவர் என்னிடம் கூறினார். தீவிரவாதிகளினால் தான் நாம் இந்த விலையைக் கொடுக்க வேண்டி இருக்கிறது என்கிறார் ஹாசன் சல்கவுமி.

டென்னாய் சர்கி பிரார்த்தனைக்காக பாரிஸ் கிராண்ட் மசூதிக்கு வருகிறார், அவரது பாய் மற்றும் குரான் அவரது கையின் கீழ் வைத்திருந்தார்.

இந்த இளம் வயது தீவிரவாதிகள் ஒரு டைம் பாம் போன்றவர்கள். இமாம்கள் அவர்களிடம் சற்று கூடுதலாக மென்மையாக நடந்து கொண்டார்கள் என நினைக்கிறேன். நாம் பிரெஞ்சு சட்டங்களையும், இஸ்லாம் மதத்தையும் மதிக்கலாம். அது முடியும். அதைத் தான் நான் செய்கிறேன் என்கிறார் ஹாசன் சல்கவுமி.

இளம் வயது இஸ்லாமியர்களிடையே இமாம்களுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்கிற கேள்விகள் உள்ளன, குறிப்பாக தீவிரவாத வன்முறை பிரச்சனைக்கு வரும்போது இந்த கேள்வி எழுகிறது.

Chalghoumi

மிக எளிமையான காரணத்திற்காக, பயங்கரவாதிகள் சலாபி மசூதிகளிலிருந்து வரவில்லை. பயங்கரவாதிகளின் பின்புலத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால், அவர்கள் யாரும் சலாபி பிரசங்கத்தின் விளைவாக உருவாகவில்லை. சலாபிசம் என்பது அரசியல் இஸ்லாத்துடன் அடையாளம் காணப்பட்ட ஒரு கடுமையான, தீவிர பழமைவாத இயக்கமாகும் என்கிறார் ஆலிவர் ராய்.

தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர்களைப் பின் தொடர்வது

வெளியில் இருந்து வரும் ஆதிக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், வன்முறை மற்றும் தீவிரவாதிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கும், அரசால் மறக்கப்பட்டதாக நினைக்கும் இளைஞர்களின் நம்பிக்கையைத் திரும்பப் பெறுவதற்கும், அரசு முன்னெடுக்கும் வழிமுறையின் ஒரு பகுதி தான் இந்த சாசனம்.

அரசுப் பள்ளிகளில் அதிகம் அரபு மொழியைக் கற்பிக்க மற்றும் பின் தங்கிய பகுதிகளில் அதிக முதலீடு செய்யும் திட்டத்தையும் முன்மொழிந்தார் இம்மானுவேல் மக்ரோங். பிரான்சின் சட்டங்களையும் மதிப்புகளையும் நிராகரிக்கும் இஸ்லாமியர்களை மட்டுமே குறிவைப்பதாகவும், ஒட்டுமொத்தமாக எல்லா இஸ்லாமியர்களையும் அல்ல என்பதையும் அழுத்தமாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

ஹக்கீம் எல்-கரோய் இன்ஸ்டிடியூட் மோன்டைக்னே-யில் பிரெஞ்சு இஸ்லாமிய இயக்க விவகாரங்களில் நிபுணராக இருக்கிறார். இவர் தொடர்ந்து அரசாங்கத்தின் சிந்தனைகளுக்கு பங்களித்து வருறார்.

நான் பிரான்ஸ் அரசின் இந்த திட்டத்துக்கு உண்மையாகவே ரசிகன் என்று அவர் என்னிடம் கூறினார். இது விரிவானது, இது கலாசாரமானது, மேலும் அமைப்பு மற்றும் நிதி பற்றியும் குறிப்பிடுகிறது என்கிறார் ஹகீம்.

இந்த திட்டத்தில், இஸ்லாமியர்களையும் அரசு கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களால் சமூக வலைதளங்களில், மேம்பட்ட இஸ்லாமிய கருத்துக்களைப் பரப்ப முடியும். இதை அரசாங்கத்தால் செய்ய முடியாது என்கிறார் ஹகீம்

கடைக்கோடி இஸ்லாமியர்களை தங்கள் பக்கம் இழுக்காமல் , புதிய சாசனத்தைச் செயல்படுத்துவது என்பது மிகவும் கடினமாக இருக்கும் என்கிறார் ஆலிவர் ராய்.

உள்ளூர் இஸ்லாமிய சமூகத்தினர் சி.எஃப்.சி.எம் சபையைப் புறக்கணிக்க முடிவு செய்து தங்களுக்கான இமாமை தாங்களே நியமிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அரசாங்கம் என்ன செய்ய முடியும்? ஒன்று, நாம் அரசியலமைப்பை மாற்றி, மத சுதந்திரம் என்ற கருத்தை விட்டுவிடு வேண்டும் அல்லது உள்ளூர் இஸ்லாமிய சமூகங்கள் மீது சான்றளிக்கப்பட்ட இமாம்களை அரசாங்கத்தால் திணிக்க முடியாது என்கிறார் ஆலிவர் ராய்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தேர்தலில், தன் முழு குடும்பத்தையும் மக்ரோங்குக்கு வாக்களிக்க வைத்ததாக என்னிடம் கூறினார் இமான் மெசடாயி.

அப்போதிலிருந்து, பிரான்ஸ் அதிபர் மக்ரோங், குடியேற்றம் மற்றும் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளில் வலது சாரி பக்கம் அதிகம் நகர்ந்து இருப்பதை கவனித்து இருப்பதாகக் கூறுகிறார் மெசடாயி.

“நான் மக்ரோங்க்கு ஆதரவாக இருந்தேன், அவர் எங்கள் சமூகத்தின் உண்மையான நம்பிக்கையாக இருந்தார், ஆனால் தற்போது நாங்கள் கைவிடப்பட்டதைப் போல உணர்கிறோம் என்கிறார் மெசடாயி.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »