Press "Enter" to skip to content

ஜோ பைடன் வெற்றி மீதான ஆட்சேபனைகளை நிராகரித்த துணை அதிபர் மைக் பென்ஸ்: செனட்டில் கை தட்டி ஆரவாரம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவு கும்பல் நடத்திய வரலாறு காணாத கலவரத்துக்குப் பிறகு மீண்டும் கூடிய நாடாளுமன்ற செனட் அவையில், ஜோ பைடன் வெற்றியை எதிர்த்து குடியரசுக் கட்சியினர் பதிவு செய்த ஆட்சேபனைகளை துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரித்தார்.

இதையடுத்து செனட் அவையில் பலத்த கைத் தட்டல் எழுந்தது.

குடியரசுக் கட்சியின் ஆட்சேபனையில் எந்த செனட் உறுப்பினரும் கையெழுத்திடவில்லை என்பதால் அது நிராகரிக்கப்பட்டது.

ஜோர்ஜா மாநிலத்தில் இருந்து கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோடி ஹைஸ் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு ஆட்சேபனையை பதிவு செய்திருந்தார்.

மர்ஜோரி டெய்லர் கிரீன் என்ற இன்னொரு ஜோர்ஜா பிரதிநிதி மிஷிகன் மாநில தேர்தல் சபை வாக்குகள் குறித்து ஆட்சேபனை செய்தார். ஆனால், அதுவும் ஏற்கப்படவில்லை.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த காலத்தில் கியூ அனான் சதிக் கோட்பாட்டை ஆதரித்தவர்.

அலபாமா மாநிலத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மோ ப்ரூக்ஸ் நவேதா மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆட்சேபனை செய்தார். அதுவும் ஏற்கப்படவில்லை.

கலவரத்துக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய துணை அதிபர் மைக் பென்ஸ், அமெரிக்க கேபிடல் வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள் என்று குறிப்பிட்டார். இவரும் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற அதே தேர்தலில் அவரது சக போட்டியாளராகவே போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »