Press "Enter" to skip to content

டிரம்ப் ஆதரவு கும்பல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் செய்த வன்முறை: புகைப்படங்கள்

அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் ஜோ பைடன் பெற்ற வெற்றியை எதிர்த்தும், தேர்தல் முடிவுகளை மாற்ற வலியுறுத்தியும் ட்ரம்ப் ஆதரவு கும்பல் நாடாளுமன்றக் கட்டடத்தில் நுழைந்து புதன்கிழமை கலவரத்தில் ஈடுபட்டது.

பைடன் வெற்றியை உறுதி செய்யும் வகையில், அவர் பெற்ற தேர்தல் சபை வாக்குகளை எண்ணி சான்றிதழ் அளிக்கும் வழக்கமான நடைமுறையை நாடாளுமன்றம் மேற்கொண்டிருந்தபோது இந்தக் கலவரம் ஏற்பட்டது.

இதையடுத்து நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் நிறுத்தப்பட்டு, உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஊழியர்களும் பாதுகாப்பு கவச உடைகளும், வாயுத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் முக கவசமும் அணிந்து பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர்.

வரலாறு காணாத இந்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதைப் போலவே, இந்த சம்பவத்தின் படங்களும் விழிகளை விரியவைக்கும்.

இதோ அந்தப் படங்கள்:

அமெரிக்க கேபிடல் கட்டடத்தின் பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்த போராட்டக்காரர் ஒருவர் கையில் கான்ஃபெடரேட் கொடியை பிடித்திருக்கிறார்.
நாடாளுமன்றத்தின் உள்ளே நுழைந்த டிரம்ப் ஆதரவு கும்பல் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடத்தில் ஆங்காங்கே நின்று படமெடுத்துக் கொள்ளவும் தவறவில்லை.
நாடாளுமன்றத்தின் உரைமேடை ஒன்றைத் தூக்கிக்கொண்டு ஓடும் நபர்.
அமெரிக்க நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டம் நடந்தபோது கலவரக்காரர்கள் செனட் அவை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததால், அவர்களை நோக்கி துப்பாக்கியைத் திருப்பிய அதிகாரிகள்.
உப்பரிகையில் இருந்து செனட் தளத்துக்கு தாவிக்குதிக்கும் போராட்டக்காரர் ஒருவர்.
கலவரம் நடந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஊழியர்களும் பாதுகாப்பு கவச உடைகளும், வாயுத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் முக கவசமும் அணிந்திருந்தனர்.
'டிரம்ப்தான் என் அதிபர்' என்று எழுதிய கொடியை ஏந்தியுள்ள ஒரு நபர்.
நாடாளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி அறையில் இப்படி கால் நீட்டி அமர்ந்துள்ள நபர், போகும்போது 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' என்று எழுதி வைத்துச் சென்றுள்ளார்.
ஆயுத காவல் துறையினர் அடிபணிய வைத்த போராட்டக்காரரர்கள்.
டிரம்ப் ஆதரவு கும்பல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடத்திய கலவரம்.
ஜன்னலை உடைத்து உள்ளே நுழையும் போராட்டக்காரர் ஒருவர் மீது பெப்பர் ஸ்பிரே தெளிக்கும் காவல் துறைகாரர் ஒருவர்.
நாடாளுமன்றத்தின் மைய ரோடுண்டா பகுதியை அடைந்ததைக் கொண்டாடும் கும்பல்.
செனட் மேடையில் பாவனை கொடுக்கும் போராட்டக்காரர்கள்.
டிரம்ப் ஆதரவு கும்பல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடத்திய கலவரம்.
சுதந்திர தேவி சிலை போல வேடம் போட்ட டிரம்ப் ஆதரவாளர் ஒருவர்.
இந்த வன்முறைக்கு எதிர்வினையை விரைந்து மேற்கோள்ளுமாறு டிரம்பை கேட்டுக்கொண்ட ஜோ பைடன்.
கேபிடல் கட்டட வன்முறைகளை அடுத்து தன் ஆதரவாளர்கள் வீட்டுக்குத் திரும்பவேண்டும் என்று கூறி டிரம்ப் பேசிய காணொளி வன்முறையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக டிவிட்டர் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்துக்கு முன்பாக கூடிய டிரம்ப் ஆதரவு கும்பல்.
டிரம்ப் ஆதரவு கும்பல் நாடாளுமன்றக் கட்டடமான கேபிடல் கட்டடத்தில் சுற்றிக் கொண்டிருந்த நிலையில், பொழுது சாய்ந்து அந்தக் கட்டடத்தை மாலை இருள் சூழும் காட்சி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »