Press "Enter" to skip to content

அமெரிக்க தேர்தல்: ஜோர்ஜா வெற்றி பைடனுக்கு ஏன் மிகவும் முக்கியமானது?

  • ஆன்டணி ஜர்ச்சர்
  • வட அமெரிக்கா செய்தியாளர், பிபிசி

2020ஆம் ஆண்டில் நடந்த அமெரிக்க பொதுத்தேர்தல் ஒரு வழியாக இறுதி கட்டத்துக்கு வந்திருக்கிறது. ரஃபேல் வார்நாக் மற்றும் ஜான் ஆஸாஃப் ஆகியோர் ஜோர்ஜா மாகாணத்தின் உள்ள செனட் இடங்களுக்கு வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்ஜாவில் பைடன் பெற்ற வெற்றி குறித்து யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், அத்தகைய சந்தேகங்களை போக்கும் வகையில், அவரின் வெற்றியை, மிகப்பெரிய வெற்றி ஆக்கியிருக்கிறார்கள் இந்த இரு செனட்டர்கள்.

அமெரிக்க செனட் சபை 50க்கு 50 என்ற கணக்கில் பிரியும் நிலையில், ஜனவரி 20ஆம் தேதி, துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்ற பிறகு அவரது வாக்குடன் சேர்த்து செனட் சபை ஜனநாய கட்சியின் கட்டுப்பாட்டுக்கு வரும்.

இதற்கு பொருள் என்ன? செவ்வாயன்று நடந்த வாக்குப்பதிவின் மூலம் இனி நடைபெறவிருக்கும் ஐந்து விளைவுகள் என்ன என்று பார்ப்போம்.

பைடனின் திட்டங்கள் மீதான நம்பிக்கை:

கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதிநிதிகள் சபையிலிருந்து வந்த கிட்டதட்ட அனைத்து சட்டங்களையும், குடியரசு கட்சியின் கட்டுப்ப்பாட்டில் இருந்த செனட் சபை நிறுத்தி வைத்தது. இப்போது ஜோர்ஜாவில் பெற்ற வெற்றியின் மூலம், இதுவரை நிலவிய முட்டுக்கட்டைகளை பைடனால் சரிசெய்ய முடியும்.

சுகாதாரம், சுற்றுச்சூழல், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பைடன் உத்தேசித்திருக்கும் திட்டங்களை நிறைவேற்ற இது நல்ல செய்தியாகவே இருக்கும். பைடனின் திட்டங்கள் பிரதிநிதிகள் சபையை தாண்டி, செனட் சபையில் வாக்கு எண்ணிக்கை வரையில் செல்லும்.

தேர்தல்

50-50 என்ற எண்ணிக்கை இருப்பதால், சுற்றுசூழல் திட்டமான நியூ கிரீன் ஒப்பந்தம் (டீல்)அல்லது பொது சுகாதாரத்திற்கான காப்பீட்டு திட்டம் உடனடியாக அமலுக்கு வரும் என்று அர்த்தம் ஆகாது. இதிலும் ஒரு முட்டுக்கட்டை உள்ளது. ஒரு முக்கிய சட்டம் அமலாக வேண்டும் என்றால், 60 வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். எளிமையான முறையில் பெரும்பான்மையை நிரூபித்து வரும் சட்ட மசோதாவும்கூட, மேற்கு வெர்ஜீனியாவின் ஜோ மான்சின் போன்ற ஜனநாயக நடுநிலைவாதிகள் மற்றும் அரிசோனாவை சேர்ந்த இரு செனட்டர்களின் ஒப்புதலை பெறுதல் அவசியம்.

மறுபுறம், கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கால நிவாரணங்களை கூடுதலாக செய்யவும், மக்களுக்கு அளிக்க வேண்டிய தனிநபர் நிவாரண உதவிகள் மக்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது. ஒரு சிறிய பெரும்பான்மை கூட, டிரம்ப் ஆட்சியின் கடைசி காலத்தில் போடப்பட்ட சட்டங்களை திரும்பப் பெற முடியும். இதுவே, பைடன் ஆட்சி, சரியான சூழலில் பணியை தொடர அவர்களுக்கு உதவக்கூடும்.

பைடனின் திட்டத்தில் உள்ளவர்கள்:

மேலே குறிப்பிடப்பட்ட முட்டுக்கட்டை ஜனநாய கட்சிக்கு முன்பாக இருந்து கொண்டே தான் இருக்கும் என்றாலும், அதிபரின் சார்பில் முன்மொழியப்படுவோரை பொருத்தவரை ,இது ஒரு பிரச்சனையாக இருக்காது. அதாவது, பைடன் ஆட்சியில் தேர்வு செய்யப்படும் அதிகாரிகள், கேபினட் உறுப்பினர்கள் என பெரும்பான்மையானோர் ஜனநாயக கட்சியின் வாக்குகள் (துணை அதிபர் கமலா ஹாரீஸின் வாக்களையும் சேர்த்து) மூலமாகவே நியமிக்கப்பட தடங்கல் இருக்காது.

குடியரசு கட்சியின் பல நடுநிலைவாதிகள், புதிய அதிபரின் அதிகாரிகள் நியமனம் குறித்த முடிவுகளை தள்ளியே வைப்போம் என்று கூறியுள்ளதால், இது பைடனுக்கு மிகவும் சுலபமான விஷயமாகவே அமையும்.

தேர்தல்

பைடனின் நீதித்துறை நியமனங்களுக்கும் இதே நிலைதான். டிரம்ப் தனது ஆட்சி காலத்தில் 234 நீதிபதிகளை பணியில் அமர்த்தினார், இதில் 3 உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்குவர். டிரம்பின் பதவிக்காலத்தை, அவரின் அரசியல் வாழ்வை இதுவே விளக்கும் என்றாலும், ஜோர்ஜாவில் பெற்ற வெற்றியின் மூலமாக, இதில் சில லாபங்களை பைடனால் திரும்ப பெற முடியும்.

குடியரசு கட்சியின் ஆய்வுகளிலிருந்து தப்பிக்கும் பைடன்:

அமெரிக்காவின் இரு சபைகளையும் ஜனநாயக அரசே பெரும்பான்மை வகிப்பதில், பைடனுக்கு உள்ள ஒரு முக்கிய லாபம் என்னவென்றால், குடியரசு கட்சியின் விசாரணை வலை சற்றே குறைவாக இருக்கும் என கூற முடியும். சபைகளில் ஜனநாயக கட்சியினர் பொறுப்பில் உள்ள நிலையில், மக்களை அதிரவைக்கும் வகையிலான ஆளும் கட்சி மீதான விசாரணைகள் நடப்பது மிகவும் கடினமே.

விஸ்கான்சின் மாகாண குடியரசு கட்சி பிரதிநிதியான ரான் ஜான்சன், அரசின் மேற்பார்வை குழுமை இனி நடத்தமாட்டார். எனவே பைடன் அரசுக்கும் சீனாவிற்கு உள்ள தொடர்பு அல்லது அதிபர் குறித்த வேறு எந்த விஷயமாக இருந்தாலும் அவரால் இனி தலையிட முடியாது என்றே கூறலாம். 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ரஷ்ய அரசின் தலையீடு உள்ளதா என்று நடத்தப்பட்டு வரும் லான்சி கிர்ஹாம் மற்றும் நீதித்துறை குழுயின் விசாரணைகளுக்கும் இது பொருந்தும்.

ஜனநாயக கட்சியின் மீது வரும் எந்த இரு ஊழல் குற்றச்சாட்டாக இருந்தாலும், அரசியல் ரீதியாக அக்கட்சியை அது பாதிப்பதை அவர்களால் தடுக்க முடியும். டிரம்ப் ஆட்சியின் முதல் இரண்டு ஆண்டுகள், அவர்களுக்கும் இந்த வசதி இருந்தபோதிலும், கடைசி இரண்டு ஆண்டுகளில் அது இல்லை என்றே கூற வேண்டும்.

குடியரசு கட்சியின் கணக்கீடுகள்

2020ஆம் ஆண்டுக்கான தேர்தலில், குடியரசுக்கட்சியின் வீழ்ச்சி ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. அக்கட்சி, அதிபர் பதவி, இரு அவைகளின் உள்ள அதிகாரங்கள் ஆகியவற்றை இழந்துவிட்டது. வெகுசீக்கிரமே, பழிபோடும் படலம் ஆரம்பிக்க உள்ளது.

தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து பேசாமல் இருக்கும் நேரத்தில், டிரம்ப் மற்றும் அவரின் ஆதரவாளர்களின் கருத்து, எவ்வாறு கட்சியின் தலைமை, அதிபருக்கு உண்மையாக இல்லை என்பதைப்பற்றி பேசுவதாகவே இருக்கும்.

டிரம்ப் குறித்து அவரின் கட்சியிலேயே விமர்சனம் வைப்பர்கள் (இந்த எண்ணிக்கை வளர்ந்துகொண்டே போகும்), ஜோர்ஜா மாகாணத்தில், வெற்றி பெற்றிருக்கக்கூடிய சூழலில், டிரம்ப் எவ்வாறு அங்கிருந்த குடியரசு கட்சி ஆதரவாளர்களை தாக்கும் வகையில் பேசி, வருத்தமடைய வைத்துவிட்டார் என்ற காரணங்களுக்காக ஜோர்ஜாவில் ஏற்பட்ட தோல்விகளுக்கு அவரையே பொறுப்பு என்பார்கள்.

ஒரு விஷயம் மட்டும் உறுதியாகியுள்ளது. 2018ஆம் ஆண்டு இடைக்கால தேர்தல் போலவே, இந்த தேர்தலிலும் டிரம்பின் பெயர் வாக்குச்சீட்டில் இல்லாமல் வெற்றி பெற குடியரசுக்கட்சி சிரமப்பட்டது.

டிரம்பின் பெயர் இனி எப்போதுமே தேர்தலில் வராது என்ற நிலை வரும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், இது குடியரசு கட்சிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்னை ஆகும்.

ஜனநாயக கட்சிவசமாகும் ஜோர்ஜா

ஒரு ஜனநாய கட்சி பிரதிநிதி ஜோர்ஜாவில் வெற்றி பெற்று இதுவரை 28ஆண்டுகள் ஆகின்றன. ஜோர்ஜாவின் செனட் பதவியில் ஜனநாய கட்சியினர் வெற்றி பெற்று 20ஆண்டுகள் ஆகின்றன. எந்த ஒரு மாகாண அளவிலான போட்டியிலும் ஜனநாயக கட்சி வெற்றிபெற்று இதுவரை 14 ஆண்டுகள் ஆகின்றன. குடியரசு கட்சி ஜோர்ஜா மாகாண தேர்தல்களில் தோற்றதே இல்லை. அது இப்போது மாறியுள்ளது.

விரைவிலேயே ஜனநாய கட்சியின் ஆட்சிப்பணிகளும் இந்த மாகாணத்தில் சோதிக்கப்படும். செனட்டர் ஜானீ இசாக்சனின் பணியை முடிக்கும் வார்நாட் இன்னும் இரண்டே ஆண்டுகளில் மறு தேர்தலில் நிக்க வேண்டும். இதேபோல, குடியரசு கட்சியை சேர்ந்த ஆளுநர் ப்ரைன் கெம்பிற்கும், ஜனநாயக கட்சியின் ஸ்டேசி அப்ராமிற்கும் இடையே போட்டி ஏற்படவும் வாய்ப்புள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சியின் நிலையை மேம்படுத்த மாகாணத்தில் பணியாற்றியதற்காக ஸ்டேசி இந்த வெற்றிக்கு பின்னால் இருக்கும் மக்கள் விரும்பத்தக்கதுடர் மைண்டாகவே பார்க்கப்படுவார். தேற்குப்பகுதியில் ஜனநாய கட்சியினருக்கு ஒரு புதிய அடித்தளத்தை அவர் உருவாக்கி கொடுத்துள்ளார். அதை அக்கட்சி தற்போது தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »