Press "Enter" to skip to content

செய்திகளுக்கு கூகுள் – ஃபேஸ்புக் பணம் செலுத்தும் சட்டம்: இந்தியாவிலும் ஏற்படுமா?

  • ஜுபைர் அகமது,
  • பிபிசி செய்தியாளர்

கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தளத்தில் செய்திகளைப் பகிர்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என்கிற சட்டத்தை ஆஸ்திரேலியா நிறைவேற்றியுள்ளது. இது ஆஸ்திரேலியாவுடன் நின்றுவிடாமல் இதன் விளைவுகள் உலகளவில் எதிரொலிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில், உலகில் பெரும்பாலான மக்கள், செய்தி மற்றும் ஆய்விற்கு, சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர் . பேஸ்புக் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த தொழில்நுட்ப நிறுவனமாக 2.80 பில்லியன் பயனர்களைக் கொண்டிருக்கிறது. கடந்த மாத தரவுகளின்படி இந்தியாவில் 32 கோடி முகநூல் பயனர்கள் உள்ளனர். இரண்டாவது இடத்தில் அமெரிக்கா, இங்கு 19 கோடி பயனர்கள் உள்ளனர் .

இன்ஸ்டாகிராம், வாட்சப் மற்றும் மெசேன்ஞரின் உரிமையாரும் பேஸ்புக் தான். இவை பல பில்லியன் டாலர் நிறுவனங்களாகும், ஆனால் யூட்யூப் கூகுளின் நிறுவனமாகும்.

ஆஸ்திரேலிய அரசை பொறுத்தவரை ‘நியூஸ் ஊடகம் பார்கெயினிங் கோட்’ சட்டம், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் செய்தி ஊடகங்களுக்கும் இடையே ஒரு சமநிலையை உருவாக்கும் என்று கூறுகிறது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC) நடத்திய ஒரு விசாரணையில், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (பேஸ்புக் மற்றும் கூகுள்) ஊடகத் துறையில் பெரும் பங்கு மற்றும் லாபங்களில், ஒரு பெரும் பங்கை சேகரித்துள்ளன என்று தெரியவந்தது.

இந்த ஒன்றரை ஆண்டு கால விசாரணையின்படி, ஆஸ்திரேலிய ஊடகங்களில் கணினி மயமான விளம்பரத்திற்காக செலவழிக்கப்பட்ட 100 ஆஸ்திரேலிய டாலர்களில் 81 டாலர்களில் Google மற்றும் Facebook இன் பாக்கெட்டுகளுக்கு செல்கிறது (கூகிள் பங்கு 53 டாலர், பேஸ்புக்கின் பங்கு 28டாலர் ).

அந்த அறிக்கைக்குப் பிறகு, அரசு ஒரு புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. இதன்படி ஊடக நிறுவனத்தின் செய்தியை பயன்படுத்த, பேஸ்புக் மற்றும் கூகுள் பணம் செலுத்த வேண்டும் மற்றும் விளம்பரத்தில் வரும் வருவாயில், ஊடக நிறுவனங்களின் பங்கை அதிகரிக்க வேண்டும்.

பேஸ்புக் மற்றும் கூகுள் தரப்பில் இருந்து எதிர்ப்பு இருந்தபோதிலும், சில பேச்சுவார்த்தைக்கு பிறகு ஆஸ்திரேலிய நாடாளுமன்றம், இந்த வாரம், இந்த சர்ச்சைக்குரிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சட்டத்தின் முக்கிய நோக்கங்கள் கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்குப் பொருந்தாது என சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும், ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஒரு கணிசமான தொகையைச் சில ஆஸ்திரேலியச் செய்தி நிறுவனங்களுக்கு, இந்தப் புதிய சட்டத்துக்கு உட்படாமல் கொடுக்க சம்மதித்திருக்கிறது. இந்த ஒப்பந்தங்கள் தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்து கொண்ட சமரசம் என்றே பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இதே போன்ற சட்டங்களை உருவாக்கமுடியுமா?

இந்த சட்டம் ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் அதன் செய்தி ஊடக நிறுவனங்களுக்கும் ஒரு வெற்றியாக இருக்கும். இதன் விளைவாக, மற்ற நாடுகளில் உள்ள ஊடக நிறுவனங்களும் இதே போன்ற சட்டங்களை இயற்றுமாறு தங்கள் அரசுகளை கட்டாயப்படுத்தலாம்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் வியாழக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு புதிய சட்டத்தின் தேவை குறித்து வலியுறுத்தினார். புதிய சட்டத்தின் தேவை குறித்து வேறு சில நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோரிசன் தொடர்பு கொள்ள உள்ளார் என்று செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலிய பிரதமர்

டெல்லியில் மூத்த பத்திரிகையாளர் பர்ஜாய் குஹா தாகுர்தா, 2013க்குப் பிறகு பொதுத் தேர்தல்களில், பேஸ்புக் மற்றும் பா.ஜ.க.வுக்கு இடையிலான உறவை வெட்ட வெளிச்சமாக்க போவதாக கூறியிருந்தார். இது குறித்து ஒரு புத்தகமும் எழுதினார்.

ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் சர்ச்சை குறித்து அவர் கூறுகையில், “ஆஸ்திரேலிய அரசின் இந்த நடவடிக்கை மற்றும் இந்த போராட்டத்தின் விளைவு ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தும், இது உலகம் முழுவதும் உள்ள ஊடக சூழலை பாதிக்கும், மேலும் இந்தியாவும் இதனால் பாதிக்கப்படும்,” என்கிறார் .

ஆனால் சிங்கப்பூரில் உள்ள, ஊடக மற்றும் தொழில்நுட்ப வல்லுநரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரசித் தயாள், இந்தியாவின் சந்தை வேறு என கூறுகிறார் .

“இந்தியா மேற்கத்திய நாடுகளை விட மிகவும் வேறுபட்ட செய்தி சந்தையாகும், அங்கு அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் இன்னும் செழித்து வருகின்றன. உள்ளூர் மற்றும் பிராந்திய ஊடக நிறுவனங்கள் இன்னும் நன்றாக உள்ளன. இந்தியாவில் செய்தி ஊடகத்தில் தொழில் முனைவோர்களின் செயல்பாடு அதிகரித்து வருகிறது.” என்கிறார் அவர்.

முகநூல்

புதிய சட்டத்திற்காக, ஆஸ்திரேலியாவின் ஊடகங்கள், அரசிற்கு தொடர்ச்சியக அழுத்தம் கொடுத்து வந்தன. ரசீத் தயாள் கருத்துப்படி, இந்தியாவில் அவ்வாறு செய்ய வாய்ப்பு குறைவு. “இந்தியாவில் எந்த ஊடகமும் அத்தகைய ஒரு முயற்சியை செய்வதற்கு போதுமான அரசியல் வலுபெற்றதாக இல்லை,” என்று அவர் கூறுகிறார்.

எப்படியும், ஃபேஸ்புக் மற்றும் கூகுள் வெவ்வேறு தளங்களாகும். அதனால் அவற்றின் வருவாய் மாதிரிகளும் வெவ்வேறாகும். “தனது கூட்டாளிகளின் இன்ஸ்டென்ட் கட்டுரை மற்றும் பேஸ்புக் வாட்ச்-ல் வெளியிடப்படும் காணொளி உள்ளடக்கத்திற்கு ஈடாக பேஸ்புக் அதன் ஊடகநபர்களுக்கு பணம் அளிக்கிறது,” என்று பெயர் வெளியிட விரும்பாத ஃபேஸ்புக்கின் உயர்மட்ட இந்திய அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

கூகுள் மற்றும் பேஸ்புக் ஆகிய இரண்டு நிறுவனங்களும், இந்திய ஊடக நிறுவனங்களுக்கு, காணொளி விளம்பரத்திலிருந்து கிடைக்கும் வருவாயிலிருந்தும் கூட சிறிதளவு பணம் செலுத்துகிறது. ஆனால் இந்திய ஊடக நிறுவனங்களுக்கு அவர்கள் எவ்வளவு வருவாய் கொடுக்கிறார்கள் என்று பேஸ்புக் வட்டாரங்கள் தெரிவிக்கவில்லை.

இதுவரை எந்த இந்திய ஊடக நிறுவனமும் தனது வருமானத்தின் பங்கை உயர்த்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்ததில்லை, அல்லது ஆஸ்திரேலியாவைப் போல, இது தொடர்பாக ஒரு புதிய சட்டத்தை கொண்டுவர விரும்புகிறது என்பதற்கான எந்த அறிகுறியும் இந்திய அரசு கொடுக்கவில்லை.

இந்தியாவில் உள்ள பிரச்னை, அரசியல் ரீதியாக உள்ளது. அனைத்து கணினிமய நிறுவனங்களையும் கட்டுப்படுத்த ஒரு ஒழுங்குமுறை ஆணையத்தை சட்டபூர்வமாக கொண்டு வருவது குறித்து அரசு யோசித்து வருகிறது.

கூகுள் தளர்ந்து கொடுக்கிறதா?

கூகுள் இப்போது ஏழு ஆஸ்திரேலிய ஊடக நிறுவனங்களுடன் 3கோடி டாலர் ஒப்பந்தம் ஒன்றை செய்துக் கொண்டுள்ளது. இது, கூகுள் அதன் வருவாயில் ஒரு பெரும் பகுதியை ஆஸ்திரேலிய ஊடக நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. கூகுள் நிறுவனம் நாட்டின் பிற ஊடக நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஆனால் பேஸ்புக் தனது நிலையில் பிடிவாதமாக உள்ளது. மூன்று நாட்களுக்கு முன்னர், பேஸ்புக் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகிய, இருவரும் தொலைபேசயில் பேசினர்.

தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆஸ்திரேலிய அரசிற்கு முன் தலைதாழ்த்த வேண்டியிருக்கும் என்று ரசித் தயாள் நம்புகிறார், ஆனால் அவரைப் பொறுத்தவரை அரசியல் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இதை விட முக்கியமான பிரச்னைகளில் அழுத்தம் கொடுக்கமாட்டார்கள் என கூறுகிறார் .

“நுகர்வோர் தரவு பாதுகாப்பு, இணையத்தில் சிறார்களின் பாதுகாப்பு, போலி செய்திகள் மற்றும் தனியுரிமை, போன்ற தீவிரமான விஷயங்களில், அரசியல் தலைவர்கள், குறைவான கவனமும், ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதில் அதிக கவனமும் செலுத்துகின்றனர்,” என்று அவர் கூறுகிறார்.

என்ன பலன்?

ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவோம் என்ற கூகுளின் அச்சுறுத்தலுக்கு பின்னர், ஒரு ஆஸ்திரேலிய தலைவரும் செனட்டருமான ரெக்ஸ் பாட்ரிக், “இது உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும், அதற்காக உலகின் ஒவ்வொரு நாட்டிலும் இருந்து வெளியேறமுடியுமா?,” என கேள்வி எழுப்பினார்.

முகநூல்

ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கைக்கு சில மாதங்களுக்கு முன்பு, இங்கிலாந்தில் பேஸ்புக் பல ஊடக நிறுவனங்களுடன் ஊடக நிறுவனங்களுக்கு உள்ளடக்கத்தை பயன்படுத்த பணம் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்துக் கொண்டது.

பேஸ்புக் அதற்கு தயாராக இல்லை, ஆனால் புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. பெரும்பாலான பிரிட்டிஷ் செய்தித்தாள் குழுக்கள் இதில் கையெழுத்திட்டன, இதன் கீழ் ஜனவரி முதல் அவர்களின் செய்திகளுக்கு பணம் கிடைக்க தொடங்கியது.

இதேபோன்ற ஒரு சர்ச்சை ஏற்கனவே ஐரோப்பாவில் தொடங்கிவிட்டது பதிப்புரிமை பற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு சர்ச்சைக்குரிய விதியின்படி, தேடு பொறி சேவை மற்றும் செய்தி சேகரிப்பு தளங்கள், செய்தி வலைத்தளங்களுக்கு பணம் செலுத்த வேண்டும்.

இது போன்ற ஒரு சர்ச்சைக்கு பின், பிரான்சில் உள்ள பதிப்பாளர்களும் செய்தி ஊடகங்களும் சமீபத்தில் எப்படி ஒன்றாக வேலை செய்வது என்பது குறித்த கூகுளுடனான ஒரு உடன்பாட்டிற்கு ஒப்புக் கொண்டன. ஆனால், பிரபல பிரெஞ்சு செய்தித்தாள்களுடன் மட்டுமே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது பரந்த, மிகவும் கண்டிப்பான ஆஸ்திரேலிய சட்டவரைவுடன் ஒப்பிடும்போது மிகவும் வேறுபட்டது.

அரசாங்கங்கள் மற்றும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே பதற்றமான பிற பகுதிகள் உள்ளன, இதில் அரசாங்கங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களைகட்டுப்படுத்துவது பற்றி பேசியுள்ளன. சமீபத்தில், இந்திய அரசாங்கம் ட்விட்டரில் இருந்து 1100 க்கும் மேற்பட்ட கணக்குகளை நீக்கமாறு வலியுறுத்தியது, இது ஒரு பெரிய சர்ச்சையைப் போல், நாட்டின் அரசியல் சூழலில் வெளிப்பட்டது. இந்த சர்ச்சை இதுவரை முழுமையாக தீர்க்கப்படவில்லை.

தொழில்நுட்ப நிறுவனங்களா அல்லது ஊடக நிறுவனங்களா ?

தொழில்நுட்ப நிறுவனங்களின் தாக்கம் இனி நிதி விஷயத்தில் மட்டும் அல்ல. அவற்றின் ஆழ்ந்த தாக்கம் அரசியல் மட்டத்தை எட்டியுள்ளது. தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

சமீப ஆண்டுகளில் செய்தி ஊடக நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பற்றிய பிரச்னை அதிகரித்து, பல நாடுகளில் கவலைகளை எழுப்பியுள்ளது. உலகளவில் கூகுள் ஒரு முக்கிய சர்ச் ஓட்டுவிசை அதாவது தேடு பொறி சேவையாக மாறியுள்ளது, இது ஒரு அத்தியாவசிய சேவையாக பார்க்கப்படுகிறது, இது எந்த போட்டியும் இல்லாத சேவையாகும். சமூக ஊடகங்களின் , செய்திகளின் மிக முக்கியமான ஆதாரமாக பார்க்கப்படுகிறது.

கூகுள்

கூகுள், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் முறையான மற்றும் சட்டபூர்வமாக தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆனால் அவை இப்போது செய்திகளுக்கு மிக முக்கியமான ஆதாரமாக மாறிவிட்டன, எனவே அவை இப்போது செய்தி நிறுவனங்கள் போல அதிகமாக பார்க்கப்படுகின்றன.

“மாபெரும் கணினி மயமான நிறுவனமான Alphabet போலவே (கூகுள், யூட்யூப், மற்றும் ஆண்ட்ராய்டின் உரிமையாளர்) ஃபேஸ்புக் தாம் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் என்றும் ஒரு ஊடக நிறுவனமோ அல்லது ஒரு பதிப்பாளரோ இல்லை என்று கூறி வருகிறது,” என்கிறார் பர்ஜாய் குஹா தாக்குர்தா .

அவர் மேலும் கூறுகையில், “சமூக ஊடக தளங்களில் பயனர்களின் ஒரு பெரும் பகுதி, செய்தி, நடப்பு நிலைமை மற்றும் இதர விஷயங்களை அறிந்து கொள்ள பயன்படுத்தி வருகின்றனர் என்பதுதான் உண்மை, இவற்றை முன்பு பாரம்பரிய ஊடக நிறுவனங்கள் உருவாக்கி வந்தன. இந்த பாரம்பரிய ஊடக நிறுவனங்கள் செய்தி சேகரிப்பு, ரிபோர்டிங், ஆராய்ச்சி, கிராஃபிக், வடிவமைப்பு, புகைப்படக்காரர்கள் மற்றும் ஒலிநாடா-விஷுவல் உள்ளடக்கம் ஆகியவற்றுக்கு பெருமளவில் பணம் செலவிடுகின்றன ஆனால், செய்தியை பயன்படுத்தும் Facebook தான் பெறும் விளம்பர வருவாயில் மிக குறைவான பங்கே செய்தி நிறுவனங்களுக்கு அளிக்கிறது.”

17 ஆண்டுகாலமாக உள்ள பேஸ்புக் மற்றும் அதன் 36 வயதான நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தற்போதைய நிலைமை தொடர வேண்டும் என்று விரும்புவதாக தாக்கூர்தா கூறுகிறார். ஆனால் ஊடக அமைப்புக்களும் அரசாங்கங்களும் இது ஒரு நியாயமற்ற, ஸ்திரமற்ற நிலைமையாக இருக்கும் என்று நம்புகிறது.

எந்த தரப்பு சரி, யார் தவறு?

பட ஆதாரதாங்கள் ஊடக நிறுவனங்களுக்கு செல்லவில்லை, ஆனால் ஊடக நிறுவனங்கள் தங்கள் தளங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பது பேஸ்புக்கின் தெளிவான வாதம். பேஸ்புக், தனது தளத்தை பார்ப்பதன் மூலம், வாசகர்கள், ஊடக நிறுவனத்தின் கதைகளை அதிகம் படிக்கிறார்கள் அல்லது மக்கள் அதிகமாக காணொளிக்களைப் பார்க்கிறார்கள், மேலும் பலர் பேஸ்புக் தளம் வழியாக ஊடக வலைத்தளத்திற்கு செல்கின்றனர் என்று கூறுகிறது.

சிங்கப்பூரில் உள்ள இந்திய வம்சாவளி ஊடக நிபுணர் ரசித் தயாள் கூறுகையில், “கூகுள் மற்றும் பேஸ்புக் ஆகியவை சொல்வது சரிதான் என்று நான் கூறுவேன். செய்தி ஊடகங்களில் வாசகர் மற்றும் கேட்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்ததற்கு வாடிக்கையாளர்களின் மாறிவரும் போக்கு காரணமாக இருந்தது, சில பெரிய தொழில்நுட்ப தளங்கள் இதற்கு காரணம் இல்லை,” என்கிறார் .

பேஸ்புக் மற்றும் கூகிள், செய்தி ஊடகத்தின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம், ஆனால் செய்தி ஊடகங்கள், உண்மையில் கூகுள் மற்றும் பேஸ்புக்-ன் சர்ச் மற்றும் சமூக ஊடகத்தின் முக்கிய வணிகத்தின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது என அவர் மேலும் கூறுகிறார் .

“செய்தி ஊடகங்களுக்கு புத்துயிர் ஊட்டி , அதை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளபோது, கூகுள் மற்றும் பேஸ்புக் உடன் ஒரு சண்டையை தொடங்குவதால், செய்தி ஊடகத்திற்கு புத்துயிர் அளிக்க முடியாது.” முடியாது என்கிறார் ரசித் தயாள் .

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »