Press "Enter" to skip to content

2021-ல் பொருளாதார வளர்ச்சி: 6 சதவீதத்திற்கும் அதிகமான இலக்கு – சீனாவின் திட்டம் என்ன?

இந்த ஆண்டு 6 சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை சீனா இலக்கு வைத்துள்ளது.

கடந்த வருடம் தனது இலக்கை சீனா நீக்கியிருந்த நிலையில்தான் இந்த வருடத்திற்கான இலக்கு குறித்து அறிவித்துள்ளது.

சீனாவின் ப்ரீமியர் லி-குவாங் இந்த வருடத்தின் நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியபோது இதனை அறிவித்தார்.

இந்த இலக்கு ஒரு வலுவான வளர்ச்சியின் இலக்கு. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீன பொருளாதாரம் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

கடந்த வருடம் சீனாவின் பொருளாதாரம் 2.3 சதவீத அளவிற்கு வளர்ச்சியைக் கண்டது. கடந்த சில தசாப்தங்களில் மிகக் குறைந்த அளவிலான வளர்ச்சி இது.

வளர்ச்சியை கண்ட சீன பொருளாதாரம்

கொரோனா பெருந்தொற்றால் வர்த்தகங்கள் முடங்கியிருந்த காரணத்தால் 2020ஆம் அண்டின் முதல் காலாண்டில் சீன பொருளாதாரம் 6.8 சதவீத அளவிற்கு குறைந்திருந்தது.

இரண்டாம் காலாண்டில் பொருளாதாரம் சற்று வளர்ச்சியைக் கண்டது. அந்த பொருளாதாரத்தில் வளர்ச்சி கொண்ட ஒரே முக்கிய சர்வதேச பொருளாதாரமாகச் சீனா இருந்தது. இருப்பினும் அந்த வளர்ச்சி முந்தைய வருடங்களைக் காட்டிலும் குறைந்த வளர்ச்சியே.

ஷி ஜின்பின்

தற்போது பொருளாதாரம் மீண்டும் நல்ல வளர்ச்சியை காணும் எனச் சீனா நம்புகிறது.

“6 சதவீதத்திற்கு மேல் இலக்கு வைப்பது, நமது முழு ஆற்றலையும் பயன்படுத்தி மறுசீரமைப்பு, புதுமை, உயர்தர வளர்ச்சி ஆகியவற்றை கொண்டுவர உதவும்,” என ப்ரீமியம் லி கேகியாங் தெரிவித்தார்.

“இந்த இலக்கை நிர்ணயிப்பதன் மூலம், நாம் பொருளாதார நடவடிக்கைகளின் மீட்புப் பணிகளை தீவிரமாக கருத்தில் கொள்கிறோம்” என்றார் அவர்.

சீனா தனது பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும் என்று நிர்ணயித்துள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியம் இந்த வருடத்துக்கான சீனாவின் பொருளாதார வளர்ச்சியை 8.1 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.

எண்களை காட்டிலும் தரத்தில் கவனம்

பிற துறைசார்ந்த ஆய்வாளர்களும் சீன பொருளாதாரம் வலுவான வளர்ச்சியை காணும் என தெரிவித்துள்ளானர்.

“மொத்தமாக சீனா இந்த வருடம் 8-9% சதவீத அளவு பொருளாதார வளர்ச்சி காணலாம் என கணிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆய்வு அறிக்கை ஒன்றில், சீனா ரினைய்சன்ஸ் முதலீட்டு வங்கியை சேர்ந்த ப்ரூஸ் பாங், இம்மாதிரியான இலகுவான இலக்குகள் கட்டமைப்புகளை மறு சீரமைக்கவும், பொருளாதாரத்தை மேலும் வலுவான ஒரு பொருளாதாரமாக மாற்றமும் வழிவகைக்கும்.” என்கிறார்.

“இந்த இலக்கு எளிதாக அடைய கூடிய ஒரு இலக்குதான். இந்த இலக்கின் மூலம் அதிகாரிகள் பொருளாதார வளர்ச்சியை காட்டிலும் அதன் தரத்தில் கவனம் செலுத்துகிறார்கள் என்பது தெரிகிறது,” என்கிறார் ப்ரூஸ் பாங்.

சீன பொருளாதாரம்

மேலும் ப்ரீமியர் லீ, நகர்புற வேலையின்மையின் விகிதத்தை 5.5 சதவீதமாக நிர்ணயித்துள்ளார். கடந்த வருடம் நகர்ப்புறங்களில் ஒன்பது மில்லியன் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று, நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் அது 11 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின், நிதி பற்றாக்குறை சுமார் 3.2 சதவீதமாக இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா 2028-ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் எனக் கணித்தது பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் ( சென்டர் ஃபார் எகனாமிக்ஸ் அண்ட் வணிகம் ரிசர்ச் – சி.இ.பி.ஆர்) என்கிற அமைப்பு.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பில் இருந்து இரு பெரும் பொருளாதாரங்கள் மீண்டு வருவதில் இருக்கும் கால வேறுபாட்டால், இதற்கு முன் கணித்திருந்ததைவிட, சீனா ஐந்து ஆண்டுகள் முன் கூட்டியே உலகின் பெரிய பொருளாதாரமாக உருவாகப் போகிறது என சி.இ.பி.ஆர் அமைப்பு தெரிவித்திருந்தது.

2021 முதல் 2025 வரையிலான ஆண்டுகளில் சீனாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாகவும், 2026 – 2030 வரை சராசரியாக 4.5 சதவீதமாக இருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது சி.இ.பி.ஆர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »