Press "Enter" to skip to content

இராணுவ ரீதியிலான எதிர்ப்புக்கு சீனா தன்னைத் தயாரித்து கொள்ள வேண்டும் – குளோபல் டைம்ஸ்

image

தென் சீனக் கடலில் ஏற்படக்கூடிய இராணுவ ரீதியிலான மோதலுக்கு சீனா தன்னைத் தயாரித்துக் கொள்ள வேண்டும் என்று சீன அரசு நடத்துகின்ற செய்தித்தாளான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த கடலில் தான் சீனா ஆறு நாள்கள் இராணுவப் பயிற்சியை தொடங்குகிறது.

தாக்குதலை தடுக்கின்ற வியூகத்தை சீனா விரைவாக உருவாக்க வேண்டும். அப்போது தான் அந்த பகுதியில் இராணுவ ரீதியில் அமெரிக்கா தலையிட்டால் தாக்கிக்கொள்ளாத இயலாத பாதிப்பை அதற்கு ஏற்படுத்தலாம் என்று இந்த செய்தித்தாளின் சீன மற்றும் ஆங்கிலப் பதிப்புகளில் வெளிவந்த தலையங்கங்களில் எழுதப்பட்டுள்ளது.

தென் சீனக் கடலில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் ரோந்துப் பணியால் சீனா சினம் அடைந்துள்ளதாகச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனாவுக்கும் பிலிப்பைன்ஸூக்கும் இடையில் நிலவுகின்ற எல்லை சர்ச்சைக்கு ஐநாவின் நடுவர் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்க இருக்கும் ஒரு வாரத்திற்கு முன்னர் இந்த தலையங்கம் வெளிவந்திருக்கிறது.

பிலிப்பையின்ஸ் தன்னிச்சையாக இந்த வழக்கை தொடுத்ததால் இந்த தீர்ப்பை புறக்கணிக்கப் போவதாக சீனா தெரிவித்திருக்கிறது.

More from உலகம்More posts in உலகம் »