Press "Enter" to skip to content

ரஷ்ய பள்ளியில் துப்பாக்கி சூடு: 11 பேர் பலி – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யாவின் கசான் நகரில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் குறைந்தபட்சம் பதினோரு பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் சிறார்கள்.

தலைநகர் மக்கள் விரும்பத்தக்கதுகோவுக்கு கிழக்கே 820 கி.மீ தூரத்தில் உள்ளது கசாக் நகரம். அங்குள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக ஒரு பதின்ம வயது நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எந்த நோக்கத்துக்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது இன்னும் தெரியவில்லை.

ததர்ஸ்தான் பிராந்திய தலைவர் ருஸ்தாம் மின்னிகானொஃப், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை பேரிடர் மற்றும் துயரமான சம்பவம் என்று அழைத்துள்ளார்.

175 என்ற எண் கொண்ட அந்த பள்ளி முன்பாக ஆயுதமேந்திர காவல்துறையினரும் அவசர ஊர்தி வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில், ஜன்னல்கள் வழியாக பள்ளிக்குள் இருந்த சில சிறார்கள் குதித்து தப்பி ஓடுவதும் சிலர் அந்த முயற்சியில் விழுந்து காயம் அடைவதும் சிலர் வெளியேற்றப்படுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

தொடக்கத்தில் அந்த பள்ளிக்குள் இரண்டு துப்பாக்கிதாரிகள் இருந்ததாகவும் அதில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன. ஆனால், அதை பின்னர் மறுத்த அதிகாரிகள், தாக்குதலில் ஒரேயொரு சந்தேக நபரே ஈடுபட்டதாக கூறுகின்றனர்.

சம்பவ பகுதியை பார்வையிட்ட ததர்ஸ்தான் தலைவர் மின்னிகனொஃப் பள்ளிக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், “உயிரிழந்தவர்கள் மட்டுமின்றி மேலும் 12 சிறார்கள், நான்கு பெரியவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,” என்று கூறினார்.”அந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ளவர்,” என்று மின்னிகனொஃப் தெரிவித்தார்.

ஒரு காணொளியில் கட்டடம் ஒன்றுக்கு வெளியே பதின்ம வயது நபர் தரையில் படுக்க வைக்கப்பட்டு அவரை காவல்துறையினர் தடுத்து வைத்திருப்பதும் பிறகு அவரை காவலர்கள் பிடித்துச் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »