Press "Enter" to skip to content

ஜப்பானில் கொரோனா நிலவரம் என்ன? ஒலிம்பிக் பற்றி ஜப்பானியர்கள் என்ன கூறுகிறார்கள்?

பட மூலாதாரம், EPA

ஜப்பானில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அதிதீவிரமாக பரவி வருவதால், மக்களுக்கு பரவலாக கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் டோக்கியோவிலும் ஒசாகா போன்ற மாகாணங்களிலும் தொடங்கப்பட்டு இருக்கிறது.

ஜப்பானிய ராணுவம் கொரோனா தடுப்பூசி மையங்களைத் தொடங்கி, நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. இதில் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

ஜப்பானின் வாக்கு மொத்த மக்கள் தொகையில், இதுவரை 5 சதவீதம் பேருக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் கொரோனா பரவலால், ஜப்பானின் சுகாதார உள்கட்டமைப்பின் மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது. சில மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் வென்டிலேட்டர் வசதிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஜப்பான் மருத்துவமனை

பட மூலாதாரம், Reuters

எனவே ஜூலை மாதம் நடைபெற இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் இருந்து அழுத்தம் அதிகரித்து வருகிறது.

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க பிராந்திய அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் நோக்கில், ஜப்பானின் பெரும்பாலான பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது.

கொரோனாவால் ஜப்பானில் இதுவரை 7 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 12,000 பேர் இறந்துள்ளனர்.

மக்களுக்கு பரவலாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை ஜப்பான் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வருகிறார்கள். இப்பணி அடுத்த மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு டோக்கியோவில் 5,000 பேருக்கும், ஒசாகா மாகாணத்தில் 2,500 பேருக்கும் சமீபத்தில் ஜப்பான் அனுமதியளித்த மாடர்னா கொரோனா தடுப்பூசியைச் செலுத்த அதிகாரிகள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜூன், ஜூலை மாதங்களில் இந்த எண்ணிக்கையை இரட்டிபாக்கவும் ஆலோசித்து வருகிறார்கள்.

கோப் மற்றும் நகோயா போன்ற நகரரங்களிலும் பரவலாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

ஜூலை மாதத்துக்குள் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.

ஜப்பான் கடந்த பிப்ரவரி மாதத்தில் தான் தன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்தத் தொடங்கியது. இது மற்ற முன்னேறிய நாடுகளை விட தாமதமான தொடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம்கள், நகராட்சி அதிகாரிகளால், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்காக நாடு முழுவதும் நடத்தப்பட்டது.

ஆனால் அப்பணி கூட போதிய தடுப்பூசி விநியோகம் இல்லாததாலும், போக்குவரத்து பிரச்சனைகளாலும் தாமதமானது.

நம்பிக்கை பிறந்திருக்கிறது

இது குறித்து பிபிசியின் ஜப்பான் கணினி மயமான ஆசிரியர் யூகோ காடோ விரிவாக விளக்கினார்.

ஜப்பானில் கொரோனா தொற்று

பட மூலாதாரம், Reuters

ஜப்பானில் தீவிரமாக கொரோனா பரவி வருவதால், பல பகுதிகளில் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது, மேலும் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறையும், மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறையும் நிலவுகிறது.

ஜப்பானில் பல மருத்துவமனைகள் தனியாருடையது. தீவிர கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகளை தொடர்ந்து செய்து கொடுத்தால், அவர்களால் பொருளாதார ரீதியாக தாக்கு பிடிக்க முடியாது. போதுமான மருத்துவ சாதனங்களோடு இருக்கும் பெரிய மருத்துவமனைகள் கூட, மற்ற தீவிர மற்றும் அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவர்களையும் சமாளிக்க வேண்டி இருக்கிறது. அதை அவர்கள் சமாளிக்க சிரமப்படுகிறார்கள்.

இதற்கு மத்தியில், ஜப்பானில் மிக மெதுவாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்தும் கவலை எழுந்துள்ளது. அதோடு வயதானவர்களுக்கு எப்படி கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்வது எனவும் குழப்பங்கள் நீடிக்கின்றன.

நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. மத்திய அரசு கொண்டு வந்த இணைய வழி தடுப்பூசி பதிவு செய்யும் அமைப்பும் இந்த குழப்பங்களைத் தீர்க்கவில்லை என்கிறார் யூகோ காடோ.

ஒசாகா மற்றும் டோக்கியோவில் என்ன சூழல் நிலவுகிறது?

ஜப்பான் கடந்த பல காலமாக, மற்ற நாடுகளில் பரவுவது போல பெரிய அளவில் கொரோனா தொற்று ஏற்படவிடாமல் எப்படியோ சமாளித்து தடுத்து வந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக ஜப்பானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து நிலையாக அதிகரித்து வருகிறது.

இப்போதும் டோக்கியோ தான் ஜப்பானிலேயே அதிகம் கொரோனா பரவும் மையப்பகுதியாக உள்ளது. அங்கு வார சராசரியாக நாள் ஒன்றுக்கு 650 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஆனால் ஒசாகாவில் சூழல் மோசமடைந்து வருகிறது. இங்கு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்கள் இல்லை என செய்திகள் வெளியாகின்றன.

ஏப்ரல் மாத கடைசியில், இந்நகரத்தில் நாள் ஒன்றுக்கு 1,000 பேருக்கு மேல் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டார்கள். தற்போது அங்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 500 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்திருப்பதை பார்த்ததாக ராய்டர்ஸிடம், ஏற்கனவே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து சோர்வடைந்திருக்கும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

“இதை எளிமையாக கூற வேண்டும் என்றால், இது மருத்துவ கட்டமைப்பின் சீர்குலைவு எனலாம்” என கிண்டாய் பல்கலைக்கழக மருத்துவமனையின் இயக்குநர் யூஜி டோஹ்டா ராய்டர்ஸிடம் கூறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்?

ஜப்பான் ஒலிம்பிக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆண்டு நடக்க வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா காரணத்தால் ஒத்தி வைக்கப்பட்டது. கொரோனா நெருக்கடி அதிகரித்து வருவதற்கு மத்தியிலும், ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் திட்டத்தில் குறியாக இருக்கிறார்கள்.

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என சர்வதேச ஒலிம்பிக் குழுயின் துணைத் தலைவர் ஜான் கோட்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை கூறினார்.

ஆனால் ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது மீண்டும் இரண்டாவது முறையாக ஒத்தி வைக்க வேண்டும் என பெரும்பாலான ஜப்பானியர்கள் விரும்புவதாக வாக்கெடுப்பில் தெரிய வந்திருக்கிறது.

ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவது குறித்து, ஜப்பானைச் சேர்ந்த மிகப் பெரிய பில்லியனர் ஒருவர் விமர்சித்து இருக்கிறார்.

“80 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்ய வண்டும் அல்லது ஒத்தி வைக்க வேண்டும் என விரும்புகிறார்கள். யாருடைய மற்றும் எந்த அதிகாரத்தின் கீழ் இந்த போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்?” என சாஃப்ட்பேங்கின் முதன்மைச் செயல் அதிகாரி மசயோசி சன் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

மருத்துவ பணியாளர்களும் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.

கடந்த சில வாரங்களில் கொரோனா பிரிவு நிரம்பி வழிவதை தான் கண்டதாக நகோயா நகரத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத செவிலியர் ஒருவர், பிபிசியின் செய்தியாளர் ருபர்ட் விங்ஃபீல்ட் ஹேய்ஸிடம் கூறினார்.

“ஏற்கனவே நம்மிடம் போதிய அளவுக்கு மருத்துவமனை படுக்கை வசதிகளோ, மருத்துவ ஊழியர்களோ இல்லை. மருத்துவமனையில் சேர முடியாமல் மக்கள் வீட்டிலேயே உயிரிழந்து வருகிறார்கள்”.

“ஒலிம்பிக் போட்டிகளுக்கு 500 செவிலியர்கள் தேவை என கூறுகிறார்கள். அதாவது இன்னும் பல நோயாளிகளுக்கு போதிய பராமரிப்பு கிடைக்காது” என கூறுகிறார் அந்த செவிலியர்.

“ஒலிம்பிக் போட்டிகள் நிறுத்தப்பட வேண்டும். நாம் ஏற்கனவே பிரிட்டன் கொரோனா திரிபை தடுக்கத் தவறிவிட்டோம். அடுத்து இந்திய கொரோனா திரிபு ஜப்பானுக்கு வரலாம்” என கூறியுள்ளார் ஒசாகா மருத்துவ மற்றும் பார்மா பல்கலைக்கழக மருத்துவமனையின் அவரச பிரிவுத் தலைவர் அகிரா டகாசு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »