Press "Enter" to skip to content

இந்தியா Vs நியூஸிலாந்து கிரிக்கெட் : கோலியின் அணிக்கு இங்கிலாந்தில் காத்திருக்கும் சவால்

  • எம். மணிகண்டன்
  • பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Gareth Copley-ICC

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் சோதனை தொடரின் இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது.

ஒருபுறம் மிக எளிதாக முதல் இடத்தைப் பிடித்த நியூசிலாந்து அணியும் மற்றொரு புறம் பல சவால்களைக் கடந்து இரண்டாவது இடத்தைப் பிடித்த இந்திய அணியும் மோதுகின்றன.

இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ட்டன் மைதானம் போட்டிக்காகத் தயாராக இருக்கிறது. ஜூன் 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை போட்டி நடக்கிறது.

வீரர்கள் யார் யார்?

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கு விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரஹானே, ரோகித் சர்மா, சுப்மன் கில், சேட்டேஸ்வர் புஜாரா, ஹனுமா விகாரி, ரிஷப் பந்த், அஸ்வின், ஜடேஜா, பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், விருத்திமான் சாஹா ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லோதம், டேவோன் கான்வே, ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், வில் யங், வால்ட்லிங், டாம் ப்ளன்டெல், கிராண்ஹோம், ஜேமிசன், டிம் சவுத்தி, நீல் வாக்னர், அஜாஸ் படேல், டிரென்ட் போல்ட், மேட் ஹென்றி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியைப் பொறுத்தவரை, “தொடக்க வரிசையில் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோருக்குப் பதிலாக சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது ஒரு துணிச்சலான முடிவு” என்கிறார் விளையாட்டு விமர்சகர் சுமந்த் சி ராமன்.

பரிசுப் பணம்

உலக சாம்பியன்ஷிப் சோதனை போட்டியில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் பரிசுப் பணம் உண்டு. பட்டத்தை வெல்லும் அணிக்கு 11.7 கோடி ரூபாய் பரிசு கிடைக்கும். இரண்டாவது வரும் அணிக்கும் சுமார் ஆறரைக் கோடி ரூபாய் பணம் வழங்கப்படும். ஒருவேளை இறுதிப் போட்டி டிராவில் முடிந்துபோனால் இரண்டு அணிகளுக்கும் சமமாக சுமார் 8.8 கோடி ரூபாய் பரிசு கிடைக்கும்.

ஜடேஜாவுக்கு வாய்ப்புக் கிடைக்குமா?

இந்தியாவைப் பொறுத்தவரை சமீபத்திய போட்டிகளில் விராத் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில், சேட்டேஸ்வர் புஜாரா, ரஹானே ஆகிய 5 பேட்மேன்களைக் கொண்டே களமிறங்கி வருகிறது.

ஷுப்மன் கில் மற்றும் கோலி

பட மூலாதாரம், Gareth Copley-ICC/ICC via Getty Images

“அணியில் 10 இடங்கள் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு விட்டதாகவே கருதுகிறேன். ரோஹித் சர்மா, சுப்மன் கில், சேட்டேஸ்வர் புஜாரா, விராத் கோலி, ரஹானே, ரிஷப் பந்த் ஆகிய ஆறு பேர் கொண்ட தொடக்க வரிசை உறுதி. அதற்கு அடுத்த இடத்தில்தான் ஒரு இடைவெளி இருக்கிறது. அஸ்வின், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி என அதற்கு அடுத்தடுத்த இடங்களும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டன” என்கிறார் சுமந்த் சி ராமன்.

அதேபோல அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே இடமிருக்கிறது. ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் அந்த இடங்களைப் பிடித்துள்ளனர். நட்சத்திரப் பந்துவீச்சாளரான பும்ராவுக்கு எந்தப் போட்டியும் இல்லாமல் இடம் கிடைத்துவிடும். மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு இஷாந்த், ஷமியுடன், முகமது சிராஜும் போட்டியில் இருக்கிறார். ஆஸ்திரேலியத் தொடரில் முகமது சிராஜ் சிறப்பாகப் பந்துவீசியிருப்பதால் இந்த மூன்று பேரில் இருவரைத் தேர்வு செய்வது கடினமாகவே இருக்கும்

ஒருவேளை பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி ஆகியோருக்கு அடுத்ததாக மற்றொரு வேகப் பந்துவீச்சாளரை எடுக்க வேண்டுமா என்பது குறித்தும் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது.

“பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமிக்கு அடுத்து நான்காவதாக ஒரு வேகப்பந்து வீச்சாளரைப் பயன்படுத்துவதா அல்லது ஆல் ரவுண்டரை தேர்வு செய்வதா என்பது கடினமான பணிதான். வேகப் பந்துவீச்சாளர் என்றால் சிராஜுக்கு வாய்ப்புக் கிடைக்கும். ஆல்ரவுண்டர் என்றால் ஜடேஜா தேர்வு செய்யப்படுவார். அப்படி ஜடேஜா தேர்வு செய்யப்பட்டால் அஸ்வின் ஏழாவதாகக் களமிறங்க வேண்டியிருக்கும்” என்கிறார் சுமந்த் சி ராமன்

அதே நேரத்தில் இறுதிப்போட்டியில் இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வாய்ப்புள்ளதாக சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மட்டையாட்டம்கிலும் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

4-வது மற்றும் 5-வது நாட்களில் பிட்ச் சுழலுக்கு ஒத்துழைக்காவிட்டாலும் நேராக வீசக்கூடிய பந்துகள் மூலமும் மட்டையிலக்குடுகளை எடுக்க முடியும் என்று டெண்டுல்கர் கூறியுள்ளார். இங்கிலாந்தில் காற்றுடன் சேர்ந்து சுழற்பந்து வீசும் முறையை அஸ்வினும் ஜடேஜாவும் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

இதற்கு முன் நடந்த பல்வேறு போட்டிகளில் அதிக ஓட்டத்தை குவிக்கும் மைதானமாகவே சவுத்தாம்டன் இருந்திருக்கிறது. அதே நேரத்தில் சுழல் பந்துவீச்சுக்குச் சாதகமாகவும் இருக்கும் என்பதால் பேட்ஸ்மேன்களுக்கு சவால்களும் உண்டு.

வெற்றி வாய்ப்பு யாருக்கு?

இந்திய அணியின் மட்டையாட்டம் வரிசை மிகவும் பலமானது என்பது பலரும் ஒப்புக் கொள்ளும் ஒன்று. அதேபோல் நியூசிலாந்தின் பந்துவீச்சு அதற்கு இணையான பலம் கொண்டது.

நியூசிலாந்து

பட மூலாதாரம், Nathan Stirk-ICC/ICC via Getty Images

கடைசியாக இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதிய 5 சோதனை போட்டிகளில் மூன்று போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஆனால் கடைசி இரண்டு போட்டிகளிலும் நியூஸிலாந்து வென்றிருக்கிறது. அவ்விரு போட்டிகளும் நியூஸிலாந்தில் நடந்தவை.

“நடக்கப் போகும் ஆட்டம் இந்தியாவின் மட்டையாட்டம்குக்கும் நியூஸிலாந்தின் பந்துவீச்சுக்கும் இடையேயான போட்டியாகத்தான் இருக்கப் போகிறது.” என்கிறார் சுமந்த் சி ராமன்.

“இந்தியாவில் இந்தப் போட்டி நடந்தால், இந்தியா நிச்சயமாக வெற்றிபெறும் என்று உறுதியாகக் கூறலாம். ஏனெனில் நியூஸிலாந்தின் சவுத்தி, போல்ட், வாக்னர் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களுக்கு பெரிய அளவுக்கு சாதகமாக இருக்காது. ஆனால் இப்போது ஆட்டம் நடப்பது இங்கிலாந்தில் என்பதால் கடுமையான போட்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை”

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நியூசிலாந்தின் மட்டையாட்டம் வரிசையைவிட இந்தியாவின் மட்டையாட்டம் வரிசை வலுவானது. ஆனால் பந்துவீச்சில் நிலைமை தலைகீழ். அதனால் இரு அணிகளுக்குமான வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே கணிக்கப்படுகிறது.

இருப்பினும் இங்கிலாந்தில் கடந்த ஒரு மாத காலத்தில் இரண்டு சோதனை போட்டிகளில் ஆடியிருக்கிறது நியூஸிலாந்து அணி. இந்த அனுபவம் அவர்களுக்குக் கூடுதல் பலமாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

போட்டி எப்படி நடைபெறும்?

திட்டமிட்டுள்ள ஐந்து நாள் ஆட்டத்தில் ஏதேனும் பெரிய தடங்கல் ஏற்பட்டால் அடுத்த புதன்கிழமை வரை போட்டி நீளும். எனினும் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் என மொத்தம் 30 மணி நேரம் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டால்தான் அந்த நாள் பயன்படுத்தப்படும்.

சோதனை போட்டி மூலம் உலகச் சாம்பியன்ஷிப் தொடர் நடப்பது இதுவே முதல் முறை என்பது கூடுதல் சிறப்பு. கடந்த 2019-ஆம் ஆண்டில் தொடங்கிய சோதனை தொடரின் இறுதிப் போட்டி மட்டுமே இப்போது நடக்கிறது.

போட்டி நடைபெறும் பிரிட்டனில் கடந்த இரு வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினசரி 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில் விளையாட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் பயோபப்பிள் நடைமுறை இந்த சோதனை போட்டிக்கும் பொருந்தும். இரு அணிகளும் முன்னெச்சரிக்கை விதிகளுடன் கூடிய பயோபப்பிள் பகுதிகளுக்குள் மட்டும்தான் நடமாட முடியும்.

முதலில் இந்தப் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுவதாகத்தான் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பயோபப்பிள் பாதுகாப்பு நடைமுறைச் சிக்கலைக் கருதி சவுத்தாம்ட்டன் நகருக்கு மாற்றப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »