Press "Enter" to skip to content

தங்க நாணயம் கண்டெடுப்பு: 14ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த தங்க நாணயத்தின் இன்றைய மதிப்பு என்ன தெரியுமா?

பட மூலாதாரம், BRITISH MUSEUM

பதினான்காம் நூற்றாண்டில் ஏற்பட்ட பியூபோனிக் ப்ளேக் பெருந்தொற்று காலத்தில் தொலைந்து போன தங்க நாணயத்தை உலோகங்களை அடையாளம் பார்த்து கண்டுபிடிக்கும் ஒருவர் கண்டெடுத்து இருக்கிறார். மன்னர் மூன்றாம் எட்வர்ட் இங்கிலாந்தை ஆட்சி செய்த காலம் அது.

அந்த 23 கேரட் சுத்தமான தங்க நாணயத்தை ‘லியோபர்ட்’ என்று அழைக்கிறார்கள். லியோபர்ட் தங்க நாணயத்தோடு ‘நோபல்’ என்கிற தங்க நாணயமும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த நாணயங்கள் பிரிட்டனில் இருக்கும் நார்ஃபோக் கவுன்டியில் ரீபம் என்கிற சிறிய நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

லியோபர்ட் நாணயம் 1344ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் சில மாதங்களிலேயே அந்த நாணயம் விலக்கிக்கொள்ளப்பட்டது என்கிறார் தகவல் தொடர்பு அதிகாரி ஹெலென் கீகே. மேலும் லியோபர்ட் ரக நாணயங்கள் மிக அரிதாகவே மிஞ்சின எனவும் குறிப்பிடுகிறார் அவ்வதிகாரி.

இந்த காசுகளின் மதிப்பு தற்போது சுமார் 12,000 பவுண்ட் ஸ்டெலிங். இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் சுமார் 12 லட்சம் ரூபாய். இந்த காசுகளை சமூகத்தில் உயர் நிலையில் வாழும் யாரோ ஒருவர் வைத்திருந்திருந்திருக்கலாம் என்கிறார் ஹெலென் கீகே.

லியோபர்ட் ரக நாணயங்கள் மற்ற நாணயங்களோடு இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில்லை. ஆனால் இப்போது அரிதான 1351 – 1352 காலத்தைச் சேர்ந்த மூன்றாம் எட்வர்டின் நோபல் நாணயத்துடன் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

தங்க நாணயம்

பட மூலாதாரம், BRITISH MUSEUM

இங்கிலாந்து மீதான நார்மன்கள் படையெடுப்புக்குப் பிறகு, வெள்ளிக் காசுகள்தான் புழக்கத்தில் இருந்தன

“பிரிட்டனின் ராயல் கருவூலம் பவுண்ட், ஷில்லிங்ஸ், பென்ஸ் என பேசலாம். ஆனால் எதார்த்தத்தில் வெள்ளிக் காசுகள் இருந்தன” என்கிறார் முனைவர் கீகே.

“ஆங்க்லோ சாக்ஸன் காலத்தில் இருந்து மூன்றாம் எட்வர்ட் இங்கிலாந்தில் தங்க நாணயங்களை மீண்டும் அறிமுகப்படுத்த விரும்பினார், ஏன் என்று யாருக்கும் காரணம் தெரியவில்லை”.

அந்த நாணயங்கள் ஒரு ஃப்ளோரின், ஒரு லியோபர்ட், ஒரு ஹெல்ம் என அழைக்கப்பட்டன. 1344ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் சில மாத காலத்திலேயே பின் வாங்கப்பட்டது.

“சில காரணங்களுக்காக இந்த நாணயங்கள் பிரபலமடையவில்லை. ஒன்று அல்லது இரண்டு காசுகள் ஒரு நாளின் கூலியாக இருந்த போதும், சில மக்கள் மட்டுமே அதை பயன்படுத்தினர்” என்கிறார் முனைவர் கீகே.

அந்த தங்க நாணயங்கள் ஆறு ஷில்லிங் மற்றும் எட்டு பென்ஸ் மதிப்புள்ள நோபல் என்கிற நாணயத்தால் மாற்றப்பட்டன.

ரீபம் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று ஷில்லிங்ஸ் மதிப்பு கொண்ட லியோபர்ட் தங்க நாணயம், முன்பு நாம் நினைத்துக் கொண்டிருந்த காலத்தை விட கூடுதல் காலத்துக்கு புழக்கத்தில் இருந்ததைக் காட்டுகிறது.

“ஏன் என கேட்டுக் கொண்ட போது இங்கிலாந்தில் பிளாக் டெத் என்றழைக்கப்பட்ட பியூபோனிக் பிளேக் நோய் 1348ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வந்ததை உணர முடிகிறது” என்கிறார் முனைவர் கீகே.

“பியூபோனிக் பிளேக் மிகவும் பேரழிவைத் தரக் கூடியதாக இருந்தது. ஒட்டுமொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இறந்து கொண்டிருந்தனர்.”

“பொதுவாக விலக்கிக்கொள்ளப்பட்ட நாணயங்களை எத்தனை வேகமாக புழக்கத்தில் இருந்து நீக்க முடியுமோ அத்தனை வேகமாக நீக்க விரும்புவார்கள் அதிகாரிகள்.”

அந்த நாணயங்கள் 2019 அக்டோபரில் கண்டுபிடிக்கப்பட்டன. இது பொக்கிஷமா இல்லையா என்பது விசாரனைக்கு பிறகுதான் தெரிய வரும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »