Press "Enter" to skip to content

கொரோனா தடுப்பு மருந்துக்கு பிறகு மாதவிடாய் சுழற்சியில் மாற்றமா? – விரிவான ஆய்வுக்கு கோரிக்கை

பட மூலாதாரம், Getty Images

தடுப்பு மருந்து எடுத்து கொண்ட பிறகு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்படுவதாக சில பெண்கள் கூறுவது குறித்து தெளிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னணி நோய் எதிர்ப்பு குறித்த நிபுணர் தெரிவித்துள்ளார்.

லண்டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த மருத்துவர் விக்டோரியா மேல், பி எம் ஜே என்ற சஞ்சிகையில் இதற்கு காரணம் நோய் எதிர்ப்பு மண்டலமாக இருக்கலாம். தடுப்பு மருந்துகளாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

தடுப்பு மருந்து கர்ப்பம் தரிப்பதிலோ அல்லது குழந்தைபெறும் தன்மையை பாதிக்கும் என்றோ எந்த ஆதாரமும் இல்லை.

பிரிட்டனின் மருந்து கண்காணிப்பாளார்கள் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதவிடாய் பிரச்னைகள் குறித்த புகார்களை பெற்றுள்ளனர்.

அதிகப்படியான ரத்தப்போக்கு, மாதவிடாய் தாமதமாவது, எதிர்பாராத ரத்தப் போக்கு ஆகியவை தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பிரிட்டனில் இதுவரை 47 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் பெண்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. அங்கு மூன்று தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

தரவுகளை ஆராய்ந்து, மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்களின் ஒழுங்கு கட்டுப்பாட்டு முகமை கோவிட் தடுப்பு மருந்துக்கும் அறிகுறிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறுவதை ஆதரவிக்கவில்லை என தெரிவித்துள்ளது.

மாதவிடாய் கோளாறு என்பது பொதுவான ஒன்று மேலும் அது பல காரணங்களால் ஏற்படலாம். அதேபோன்று பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கையும் மிக குறைவு என முகமை தெரிவித்துள்ளது.

அதேபோன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்கள், நீண்ட நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆகியோருக்கும் இந்த மாதவிடாய் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் பிஎம்ஜே என்ற சஞ்சிகையில் மருத்துவர் விக்டோரியா மேல், மாதவிடாய் குறித்த பிரச்னைகள் குறித்து வலுவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் தடுப்பு மருந்தை சூழ்ந்துள்ள தவறான தகவல்களை களைய முடியும் என்கிறார்

“எதிர்காலத்தில் குழந்தை பெறுவதில் பிரச்னை ஏற்படலாம் என்ற தவறான செய்தியால்தான் பெண்கள் பலர் தடுப்பு மருந்தை பயன்படுத்த தயங்குகின்றனர். எனவே மாதவிடாய் பிரச்னைகள் ஏற்படுவதாக சொல்லப்படும் இந்த கூற்றை முழுமையாக ஆராயவில்லை என்றால் அது அச்சத்தை மேலும் தூண்டிவிடும்.”

அதேபோன்று தடுப்பு மருந்துக்கும் மாதவிடாய் பிரச்னைகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தால் மக்கள் அதற்கேற்றாற்போல திட்டமிட்டு கொள்வார்கள் என்கிறார் விக்டோரியா மேல்.

மாதவிடாய்

பட மூலாதாரம், Getty Images

, தெளிவான மற்றும் நம்பகத்தன்மை கொண்ட தகவல்கள், தங்களின் மாதவிடாய் சுழற்சியை கணிக்கும் பெண்களுக்கு அவசியமாக தேவைப்படுகிறது என்கிறார் அவர்.

அதேபோன்று மாதவிடாயில் ஏற்படும் மருத்துவ தலையீடு குறித்த தாக்கம் எதிர்கால மருத்துவ ஆய்விற்கு தடையாக இருக்க கூடாது என்கிறார்.

சிறந்த பாதுகாப்பு

தற்போதுவரை தடுப்பு மருந்து எவ்வாறு மாதவிடாயை நிறுத்தி வைக்கும் என விஞ்ஞானிகள் அறியவில்லை.

அது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் தாக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். நோய் எதிர்ப்பு மண்டலம் தடுப்பு மருந்தால் தூண்டிவிடப்படுகிறது. அதேபோன்று கர்ப்பப் பை ஓரங்களில் உள்ள நோய் எதிர்ப்பு செல்கள் வித்தியாசமாக செயல்படுவதாலும் ஏற்படலாம்.

எச்பிவி என்று சொல்லக்கூடிய யூமன் பாபிலோமாநச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இதேபோன்று மாதவிடாய் சுழற்சியில் மாறுதல்களை ஏற்படுத்துவதாக கூறப்பட்டது. ஆனால் அது எவ்வாறு நிகழ்கிறது என்பதற்கு சிறிதளவேனும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பெண்களின் குழந்தை பெற்றெடுக்கும் தன்மையை தடுப்பு மருந்துகள் பாதிக்காது என விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கின்றனர்.

இயற்கையாக பெண்கள் குழந்தை பெறும் வாய்ப்பையோ அல்லது செயற்கை சிகிச்சைகளிலோ தடுப்பு மருந்துகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று தடுப்பு மருந்துக்கு பிறகு ஆண்களின் விந்து எண்ணிக்கையிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத்திற்கான ராயல் கல்லூரியின் துணை தலைவர் மெளண்ட்ஃபீல்ட், “மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் பொதுவாக இது ஒன்று இரண்டு மாதவிடாய் சுழய்சி தாமதம் ஆகலாம்” என்று தெரிவித்தார்.

மாதவிடாய் நின்ற பிறகு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்படுபவர்கள் மருத்துவர்களை சந்திக்க வேண்டும் என்று அவர் கூறி வருகிறார். ஆனால் இதில் நீண்டகால ஆபத்து ஏதும் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

இந்த மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் தற்காலிக மாற்றங்கள் ஒரு நபரின் எதிர்கால குழுந்தை பெறும் தன்மையை பாதிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என மெளண்ட்ஃபீல்ட் தெரிவிக்கிறார்.

மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத்திற்கான ராயல் கல்லூரி, கொரோனா வைரஸுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பை தடுப்பு மருந்து தருகிறது என தெரிவித்துள்ளது. அதேபோன்று நீங்கள் குழந்தை பெற திட்டமிட்டிருந்தால் கொரோனா செலுத்தி கொள்ளாத பெண்களுக்கு கோவிட் வரும் பாதிப்பு அதிகம் இருப்பதாக ராயல் கல்லூரி தெரிவித்துள்ளது.

அதேபோன்று தடுப்பு மருந்துக்கு பிறகு பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் ஏன் மாற்றம் ஏற்படுகிறது என மேலும் அதிகமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ராயல் கல்லூரி தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »