Press "Enter" to skip to content

தென்னப்பிரிக்காவில் தேனீக்கள் கொட்டி இறந்த பென்குவின்கள் – அரிதினும் அரிய நிகழ்வு

பட மூலாதாரம், AFP

கேப் டவுன் அருகே, அரிதிலும் அரிதாக நடக்கும் நிகழ்வு ஒன்றில் அழியும் நிலையில் உள்ள இனமான ஆப்பிரிக்க பென்குவின்கள் தேனீக் கூட்டம் ஒன்றால் கொல்லப்பட்டுள்ளன. மொத்தம் 63 ஆப்பிரிக்கப் பென்குவின்கள் இவ்வாறு இறந்துள்ளன என்று தென்னாப்பிரிக்காவில் உள்ள பறவை இன பாதுகாவலர்கள் கூறுகிறார்கள்.

சிம்சன்ஸ்டவுன் எனும் ஊரில் உள்ள இரூந்த பென்குவின் காலனி, அங்கிருந்த கடற்கரை ஒன்றில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அவற்றின் உடலில் தேனீக்கள் கொட்டியதைத் தவிர வேறு எந்த காயமும் தென்படவில்லை.

பென்குவின்களின் கண்களைச் சுற்றி தேனீக்கள் கொட்டி இருப்பது தெரியவந்துள்ளதாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

“இது மிகவும் அரிதான ஒரு நிகழ்வு. இது அடிக்கடி நிகழும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை,” என்று விலங்குகள் நல மருத்துவர் டேவிட் ராபர்ட்ஸ் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

சௌத் ஆப்பிரிக்கன் பவுண்டேஷன் பார் த கன்மேலாய்வுஷன் ஆஃப் கோஸ்டல் பர்ட்ஸ் எனும் அமைப்பை சேர்ந்த இந்த விலங்குகள் நல நிபுணர் பென்குவின்களின் உடல்கள் கண்டறியப்பட்ட அதே இடத்தில் சில தேனீக்களும் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார்.

தேனீக்கள் கடித்ததைத் தவிர நச்சு காரணமாகஅந்தப் பறவைகள் உயிரிழந்தற்கான வேறு ஏதாவது வாய்ப்புகள் இருந்தனவா என்பதை கண்டறிவதற்கான சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக தென்னாபிரிக்காவின் தேசிய பூங்காக்கள் முகமையான ‘சான்பார்க்ஸ்’ (SANParks) சென்ற வார இறுதியில் தெரிவித்துள்ளது.

வழக்கமான பென்குவின்கள் இருக்கும் அளவை விட சிறியதாக இருப்பது ஆப்பிரிக்கப் பெண்களுக்கு ஒரு தனித் தன்மையாக உள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் கடலோரப் பகுதிகள் மற்றும் அவற்றை ஒட்டியுள்ள தீவுகளில் இவை வாழ்கின்றன.

இந்த வகைப் பென்குயின்கள் வடக்கே காபோன் வரையிலும் சிலநேரம் காணப்பட்டுள்ளன.

தேனீக்கள் (கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

ஆப்பிரிக்க பென்குவின்கள்களின் எண்ணிக்கை வர்த்தக நோக்கிலான மீன் பிடிப்பு காரணமாக உண்டாகும் “சூழலியல் தடுமாற்றத்தால்” சரிந்து வருவதாக இன்டர்நேஷனல் யூனியன் ஃபார் கன்மேலாய்வுஷன் ஆஃப் நேச்சர் எனும் பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பு தெரிவிக்கிறது.

கேப் டவுனில் இருக்கும் தேனீக்கள் உள்ளூர் சூழலியலில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கின்றன.

சென்ற வெள்ளிக்கிழமையும் ஃபிஷ் ஹூக் எனும் பகுதியில் தேனீக்கள் கொட்டிய காயங்களுடன் ஒரு பென்குவின் இறந்து கிடந்தது என்று சான்பார்க்ஸ் அமைப்பு தெரிவிக்கிறது.

பென்குவின்களின் இறப்புக்குப் பிறகு இந்த நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »