Press "Enter" to skip to content

சீனாவின் மிகப்படுத்துதல்பர்சோனிக் ஆயுத சோதனை புதிய ஆயுதப் போட்டியின் தொடக்கமா?

பட மூலாதாரம், Getty Images

சீனா அணுஆயுத திறன் கொண்ட மிகப்படுத்துதல்பர்சோனிக் ஏவுகணையை சோதித்த செய்தி ஒட்டுமொத்த ஆட்டத்தையே மாற்றக் கூடியது என சிலர் கூறுகிறார்கள்.

இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? என பிரிட்டனில் உள்ள எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் குழல்ட்டஜி அண்ட் பாதுகாப்பு இன்ஸ்டிட்டியூட்டைச் சேர்ந்த ஜோனதன் மார்கஸ் விவரிக்கிறார்.

கோடை காலத்தில் இருமுறை, சீன ராணுவம் விண்ணில் ராக்கெட் ஏவியது, அது தன் இலக்கை தாக்குவதற்கு முன் பூமியை முழுமையாக சுற்றி வந்தது.

முதல் முயற்சியில் ஏவுகணை சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் இலக்கை தவறவிட்டது என விவரமறிந்தவர்கள் ஃபைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையிடம் கூறினர்.

சீனாவின் இந்த முன்னேற்றத்தைக் கண்டு சில அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் விமர்சகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது மறு பயன்பாடு செய்யும் வகையிலான விண்கல சோதனை என சீனா அதை விரைவாக மறுத்தது.

இது நடந்ததை மறைக்க சீனா மேற்கொள்ளும் முயற்சி என்கிறார் கலிஃபோர்னியாவில் உள்ள மிடில்பரி இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இன்டர்னேஷனல் ஸ்டடீஸைச் சேர்ந்த கிழக்கு ஆசியா அணு ஆயுத பரவல் தடை திட்டத்தின் இயக்குனர் ஜெஃப்ரி லெவிஸ். காரணம் அதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சீனா ஏவுகணையை (சுற்று வட்டப்பாதை குண்டுவீச்சு அமைப்பு) சோதித்தது எனக் கூறுவது தொழில்நுட்ப சாத்தியமுள்ளதும், சீனாவுக்கு போர்த் தந்திரக் காரணங்கள் உள்ளனம் என்று அவர் கூறுகிறார்.

ஃபனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகை கூறுவது மற்றும் சீனா மறுப்பது இரண்டுமே சரியாக இருக்கலாம் என்கிறார் ஃப்லடெல்ஃபியாவைச் சேர்ந்த வெளி விவகார கொள்கை அமைப்பின், ஆய்வுப் பிரிவு இயக்குநர் ஆரோன் ஸ்டெயின்.

“மீண்டும் பயன்படுத்தப்படும் விண்கலன் என்பது ஒரு ஹப்பர்சோனிக் க்ளைடர் தான். அது வெறுமனே தரையிறங்கும். எஃப்.ஓ.பி.எஸ் ஏவுகணை கூட ஒருவகை க்ளைடரைப் பயன்படுத்திதான் ஏவப்படும். அதுவும் மீண்டும் பயன்படுத்தப்படும் விண்கலன் போலவே செயல்படும். எனவே இரு கருத்துகளுக்கும் இடையில் வேறுபாடு குறைவு,” என்பது அவரது கருத்து.

இதெல்லாம் போக, கடந்த சில மாதங்களாக பல மூத்த அமெரிக்க அதிகாரிகள், சீனாவின் இந்த நடவடிக்கை பற்றி குறிப்பிட்டு வந்தனர். சரி இந்த எஃப்.ஓ.பி.எஸ் என்றால் என்ன? இதற்கும் ஐ.சி.பி.எம் என்கிற ஏவுகணை அமைப்புக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா?

ஐ.சி.பி.எம் எஃப்.ஓ.பி.எஸ்: என்ன வேறுபாடு?

ஐ.சி.பி.எம் மற்றும் எஃப்.ஓ.பி.எஸ் செயற்முறை விளக்கப்படம்

ஐசிபிஎம் என்பது நீண்ட தொலைவு பயணித்து தாக்கக் கூடியது. இந்த ரக ஏவுகணைகள் புவியின் வளிமண்டலத்திலிருந்து வெளியேறி, மீண்டும் வளிமண்டலத்துகுள் நுழைந்து இலக்கைத் தாக்கும். இதன் பயணம் ஒரு அரை நீள்வட்டப் பாதையில் இருக்கும்.

எஃப்.ஓ.பி.எஸ் என்பது சுற்று வட்டப்பாதை குண்டுவீச்சு அமைப்பு, கொஞ்ச தூரத்துக்கு புவியின் சுற்று வட்டப் பாதையில் சென்று, இலக்கை எதிர்பாராத திசையிலிருந்து ஏவுகணை செலுத்தித் தாக்கும்.

எஃப்.ஓ.பி.எஸ் அமைப்புகள் ஒன்றும் புதியவை அல்ல. இந்த யோசனையை சோவியத் யூனியன் பனிப் போர் காலத்தில் மேற்கொண்டது, தற்போது சீனா அதை மீளுருவாக்கம் செய்து வருகிறது. புவியின் சுற்றுவட்டப் பாதையில் பயணித்து, இலக்கை எதிர்பாராத திசையில் இருந்து தாக்குவது தான் இந்த ஏவுகணை அமைப்பின் செயல்முறை.

சீனா எஃப்.ஓ.பி.எஸ் அமைப்பையும், மிகப்படுத்துதல்பர்சோனிக் க்ளைடரையும் இணைத்து புது அமைப்பை உருவாக்கி இருப்பதாகத் தெரிகிறது. எனவே ஏவுகணை வளிமண்டலத்தின் வெளி முனையில் பறக்கும், எனவே, ரேடார் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளின் இது தட்டுப்படாமல் இருக்கும். சரி, சீனா ஏன் இதை கட்டமைத்துள்ளது?

“அமெரிக்கா, சீனாவின் அணு ஆயுதங்களை தங்களின் நவீன அணுஆயுத பலத்தாலும், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளாலும் செயலற்றதாக்கிவிடும் என அஞ்சுகிறது சீனா” என்கிறார் லெவிஸ்.

“ஒருவேளை, அமெரிக்கா, சீனாவை முதலில் தாக்குகிறது என்றால், அலாஸ்காவில் இருக்கும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பே, சீனாவிடமிருக்கும் குறைவான அணுஆயுதங்களை சமாளித்துவிடும்”.

உலகிலுள்ள அனைத்து அணுஆயுத சக்திகளும் மிகப்படுத்துதல்பர்சோனிக் அமைப்பை பல்வேறு விதமாகப் பார்க்கின்றன என்கிறார் ஆரோன் ஸ்டெயின். இந்த பல்வேறு பார்வைகள்தான் ஆயுதப் போட்டியை அதிகரிப்பதாக வாதிடுகிறார் அவர்.

சீனா மற்றும் ரஷ்யா ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை முறியடிப்பதை உறுதிப்படுத்தும் ஒரு வழியாக மிகப்படுத்துதல்பர்சோனிக்கை பார்க்கிறார்கள் என அவர் நம்புகிறார். ஆனால் அதற்கு மாறாக, அமெரிக்கா மிகப்படுத்துதல்பர்சோனிக் அமைப்பைக் கொண்டு, கடினமான இலக்குகளாக கருதப்படும் அணுஆயுத இயங்கு தளங்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை, பழைய வகை குண்டுகள் அல்லது அணு ஆயுதமில்லாத குண்டுகளைப் பயன்படுத்தி தாக்க விரும்புகிறது.

அமெரிக்காவின் அணு ஆயுத நவீனமாக்கலை ஆதரிக்கும் சிலர், சீனாவின் சமீப கால முன்னேற்றங்களைக் கண்டு, அமெரிக்கா தன்னை தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்றும், தன் அறிவியல் அறிவில் உள்ள இடைவெளியை சரி செய்து கொள்ள வேண்டிய தருணத்தில் இருப்பதாகவும் கருதுகின்றனர்.

ஆனால் சில நிபுணர்களோ இதை நிராகரிக்கிறார்கள். அதோடு சீனாவின் இந்த புதிய சோதனை அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என அவர்கள் நினைக்கவில்லை.

ரஷ்யாவின் அவன்கார்ட் மிகப்படுத்துதல்பர்சோனிக் பூஸ்ட் க்ளைட் ஆயுதம்

பட மூலாதாரம், TASS

1980களிலிருந்தே, சீனா அமெரிக்காவைத் தாக்கலாம் என்கிற ஆபத்து இருப்பதாக கார்னெகி எண்டோமெண்ட் ஃபார் இண்டர்நேஷனல் பீஸ் அமைப்பைச் சேர்ந்த ஜேம்ஸ் ஆக்டன் கூறுகிறார்.

அமெரிக்க ஏவுகணை தடுப்புக் கருவிகளை முறியடிக்கும் சீனா, ரஷ்யா, வட கொரியா ஆகிய நாடுகளின் திட்டங்கள், இவற்றைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் உண்மையில் தங்கள் நலன்சார்ந்துதான் இயங்குகிறதா என்பதை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிறவை என்கிறார் அவர்.

இப்போது சரியான முடிவைத் தீர்மானிப்பது தான் அமெரிக்கா முன்னிருக்கும் முக்கிய விஷயம் என லெவிஸ் அழுத்தமாக குறிப்பிடுகிறார்.

“இது 9/11 போல இருப்பதாக நான் அச்சப்படுகிறேன். அந்த அதிர்ச்சிகரமான தாக்குதலுக்குப் பிறகு, அதிர்ச்சியில் சமநிலை இழந்து அச்சத்திலும், பாதிக்கப்படுவோமோ என்கிற உணர்விலும், பல மோசமான வெளிவிவகார கொள்கை முடிவுகளை எடுத்தோம், அது நம் பாதுகாப்பை குறைத்துவிட்டது.

“ஏபிஎம் என்றழைக்கப்படும் ஆன்டி பேலஸ்டிக் ஏவுகணை உடன்படிக்கையிலிருந்து நாம் வெளியேறிவிட்டோம், அது தான் சீனாவின் இந்த ஆயுத மேம்பாட்டுக்கு மிகப் பெரிய காரணியானது”

அமெரிக்காவின் அனைத்து சாத்தியமான எதிரி நாடுகளும் தங்கள் அணு ஆயுத அமைப்புகளை நவீனப்படுத்தவும், மேம்படுத்தவும் முயல்கின்றன.

மிகப்படுத்துதல்பர்சோனிக் ஆயுத சோதனையைக் காணும் புதின் மற்றும் அவரது ராணுவ தளபதிகள்

பட மூலாதாரம், Getty Images

சீனாவின் ஆயுத அளவு, அமெரிக்காவின் ஆயுத பலத்தை விட குறைவாகவே உள்ளது என்றாலும், அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு மற்றும் துல்லியமாக தொலை தூரம் சென்று தாக்கும் ஏவுகணை அமைப்புகள் பற்றிய சீனாவின் கவலைகள், அந்நாட்டை பெரிய, பலதரப்பட்ட அணு ஆயுதங்களை உருவாக்க வேண்டும் என உந்துகிறது..

வட கொரியாவும் தனது அணுசக்தி திறன்களை நவீனமயமாக்கிக் கொள்ள முயல்கிறது என்கிறார் கார்னெகி எண்டோமென்டடைச் சேர்ந்த அன்கித் பண்டா.

“சில ஆண்டுகளாக, அவர்கள் அமெரிக்காவால் சமமாக நடத்தப்பட வேண்டும் என்கின்றனர். அந்த மரியாதையைப் பெற, மேம்பட்ட அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திறன்களின் வளர்ச்சியை ஒரு வழியாகப் பார்க்கிறது” என்கிறார் அன்கித்.

இவை எல்லாம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஒரு பெரிய வளரும் அணுஆயுத தலைவலிக்கு பங்களித்து வருகிறது.

பனிப் போர் காலத்தில் கொண்டு வரப்பட்ட ஆயுத கட்டுப்பாடு உடன்படிக்கைகளின் பல பகுதிகள் சீர்குலைந்துவிட்டன. எனவே அவை இனி பயனளிக்காது. அதே போல சீனா மற்றும் ரஷ்யா உடனான இறுக்கமான நிலையும் பயனளிக்காது.

பனிப் போர் காலத்தில் முக்கிய ஏவுகணை பாதுகாப்பு தொடர்பாக உச்சவரம்பு குறித்து பேசியது போல, மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமே தற்போதைய ஆயுதப் போட்டியின் வேகத்தை மட்டுப்படுத்தும். அதுதான் அமெரிக்காவால் செய்யக் கூடியதாக இருக்கும் என்கிறார் அன்கித்.

ஜோனதன் மார்கஸ், பிரிட்டனில் உள்ள எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் குழல்ட்டஜி அண்ட் பாதுகாப்பு இன்ஸ்டிட்டியூட் அமைப்பில் கெளரவ பேராசிரியராக உள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »