Press "Enter" to skip to content

‘டிராஃபிக் லைட் சிஸ்டம்’ மூலம் பத்திரிகையாளர்களை கண்காணிக்கும் சீனா

  • ஜேம்ஸ் கிளட்டன்
  • வட அமெரிக்க தொழில்நுட்ப செய்தியாளர்

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் ”கவனிக்கத்தக்க பிற நபர்களை” முக ஸ்கேனிங் தொழில் நுட்பத்தின் மூலம் கண்காணிக்கும் அமைப்பை கட்டமைத்து வருகின்றனர்.

பிபிசிக்கு கிடைத்த ஆவணங்களின்படி, ட்ராபிக் லைட் அமைப்பினுள் பச்சை, ஆம்பர், சிகப்பு ஆகிய வண்ணங்களில் அவர்கள் வகைப்படுத்தப்படுகிறார்கள். சிவப்பு பட்டியலில் வரும் பத்திரிகையாளர்கள், அதற்கேற்ப நடத்தப்படுவார்கள். இது குறித்து கருத்து கேட்டதற்கு, ஹெனான் பொது பாதுகாப்பு பிரிவு பதில் தரவில்லை.

வெளிநாட்டு மாணவர்கள், புலம்பெயர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் ”கவனிக்கத்தக்க நபர்கள்” என்கிற வரையரைக்குள் கண்காணிப்பு பகுப்பாய்வு அமைப்பான ஐபிவிஎம் வைத்துள்ளது.

இதற்கான அமைப்பை ஏற்படுத்த சீன நிறுவனங்கள் ஒப்பந்த புள்ளி கோர ஜுலை 29ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில், நீயூசாப்ட் நிறுவனம் வெற்றி பெற்றது. இது குறித்து பிபிசிக்கு கருத்து தெரிவிக்க அந்நிறுவனம் மறுத்து விட்டது. கவனித்தக்க நபர்களின் முகத்தை வைத்து அடையாளம் காணும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆயிரக்கணக்கான ஒளிக்கருவிகள் (ஒளிக்கருவி (கேமரா)க்கள்) ஹெனான் நகரில் உள்ளன. பதிவாகும் படங்கள் ஏற்கெனவே உள்ள தகவல் தொகுப்புடன் ஒப்பிடப்படும். இவை சீன தேசிய தகவல் தொகுப்புடனும் இணைக்கப்படும்.

கவனித்தக்கவை

ஹெனான் பொதுப் பாதுகாப்பு பிரிவின் ஆவணப்படி, வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பத்திரிகையாளர்களும் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு பட்டியலிடப்படுகின்றனர். சிவப்பு குறியிடப்படுகிறவர்கள் மிக முக்கியமாக கவனித்தக்க வகையில் வருவார்கள். மஞ்சள் வண்ணக் குறியிடப்படுவோர் பொதுவான பட்டியலிலும், ஆபத்தில்லாத பத்திரிகையாளர்கள் மூன்றாவது வகையான பச்சை வண்ணத்திலும் குறியிடப்படுவார்கள். சிகப்பு, மஞ்சள் குறியீடு பெற்ற குற்ற தண்டனை பெற்ற, கவனிக்கத்தக்க பத்திரிகையாளர்கள் ஹெனான் மாகாணத்துக்குள் வர அனுமதிச்சீட்டு பதிவு செய்தால் எச்சரிக்கை சமிக்ஞை வெளியாகும். இவை வெளிநாட்டு மாணவர்களுக்கும் பொருந்தும். அவர்களும் மூன்று வகையான கண்காணிப்பின் கீழ் வருவார்கள். அவர்களுடைய தினசரி வருகை, தேர்வு முடிவுகள், வருகை தரும் நாடு, பள்ளியில் நடத்தை உள்ளிட்டவை இந்த பாதுகாப்பு கண்காணிப்பில் இருக்கும்.

தேசிய மக்கள் காங்கிரஸ் சந்திப்பு போன்ற முக்கிய அரசியல் நிகழ்வுகளின் போது, முக்கியமாக கவனிக்கத்தக்கவர்கள் மீதான கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும்.

கண்காணிப்பு அமைப்பிற்கு கீழ்கண்டவற்றின் மூலம் தகவல் திரட்டும்.

  • கைபேசி
  • சமூக வலைதளம் – வெப் சாட், வெய்போதொலைபேசிறவை.
  • வாகன விவரம்
  • விடுதி தங்கல்
  • பயணச்சீட்டு
  • சொத்து
  • புகைப்படங்கள்.

சிக்கிக்கொண்ட பெண்கள், சீனாவில் வாழ உரிமையற்ற புலம் பெயர்ந்த பெண்கள் ஆகியோரும் கண்காணிக்கப்படுவர். அண்டை நாடுகளில் இருந்து ஏராளமான பெண்கள் சீனாவுக்குள் வந்துள்ளனர். பலர் கடத்தப்பட்டுள்ளனர். இந்த அமைப்பானது, தேசிய குடியேற்றப்பிரிவு, பொது பாதுகாப்பு அமைச்சகம், ஹெனான் காவல் துறை ஆகியற்றுடன் சேர்ந்திருக்கும்.

சீனா காவல் துறை

பட மூலாதாரம், Getty Images

ஐபிவிஎம் அரசு இயக்குநர் கானர் ஹீலி கூறுகையில், மிகப் பெரிய கண்காணிப்பு அமைப்பிற்கான தொழில்நுட்ப கட்டமைப்பு, தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால், வழக்கமான பொது கண்காணிப்பிற்கு இது புதியது” என்கிறார்.

சீனாவின் பொது பாதுகாப்பு அதிகாரிகள் மக்கள் கண்காணிப்பு குறித்து என்ன விரும்புகிறார்கள் என்பதை இந்த ஆவணங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் சீனா முழுவதும் பல்வேறு இடங்களில் பயன்பாட்டில் உள்ளது.

கடந்த ஆண்டு, தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியில், வீகர் சிறுபான்மையினரை செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலம் கண்டறிந்து எச்சரித்தது குறித்து கூறப்பட்டுள்ளது.

Human Rights Watch’s China director Sophie Richardson said: “The goal is chilling, ensuring that everyone knows they can and will be monitored – and that they never know what might trigger hostile interest.”

ம, “இந்த நடவடிக்கை அச்சமூட்டுகிறது. ஒவ்வொருவரும் தாங்கள் கண்காணிப்பில் உள்ளது தெரிகிறது. என்ன செய்தால் கடும் விளைவுகள் ஏற்படலாம் என்று யாருக்கும் தெரியவில்லை,” ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் சீன இயக்குநர் சோஃபி ரிச்சர்ட்சன் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »