Press "Enter" to skip to content

டெஸ்லா இந்தியாவில் தொழில் தொடங்குமா? ஈலோன் மஸ்க் ட்வீட்டால் குழப்பம்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் வருகை தொடர்பாக பல்வேறு எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், அது பற்றிய ஒரு ட்வீட்டை டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஈலோன் மஸ்க் பகிர்ந்த பிறகு இந்த விவகாரம் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரனாய் பத்தோல் என்ற ஒரு நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஈலோன் மஸ்க்கை டேக் செய்து, “டெஸ்லா இந்தியாவுக்கு எப்போ வர உள்ளது? டெஸ்லா அற்புதமானது அது உலகின் ஒவ்வொரு மூலையிலும் இருப்பதற்கான தகுதி உடையது” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஈலோன் மஸ்க் “பல்வேறு சவால்களுடன் அரசுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறோம்” என்று பதிலளித்திருந்தார்.

இந்த இடுகைகள், சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அதே சமயம், அவை டெஸ்லாவின் இந்திய வருகைக்கான ஒரு குறியீடாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்றும் முதல் கட்டமாக டெஸ்லா மோட்டார்ஸ் இந்தியா மற்றும் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை பெங்களூரில் பதிவு செய்துள்ளது என்ற தகவலும் வெளியானது.

முன்னதாக, இதே விவகாரத்தில், இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “டெஸ்லா, முதல் கட்டமாக தனது விற்பனையை தொடங்கும்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் சம்பந்தமாக கடந்த ஆண்டு கர்நாடக தொழில்துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையிடம், கூறுகையில் “நிறுவனம் பதிவு செய்திருந்தாலும், அவர்கள் இங்கு என்ன செய்வார்கள் என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை” என்று கூறினார்.இதுவரையில் இந்தியாவில் டெஸ்லா நிறுவன தயாரிப்பு சம்பந்தமாக எந்தவித அதிகாரபூர்வமான தகவல்களும் வராத சூழலில் ஈலோன் மஸ்கின் ட்வீட் மிக மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

என்ன பிரச்னை?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்தியாவின் பரிசோதனை அமைப்புகளிடம் இருந்து டெஸ்லாவின் நான்கு ரக எலக்ட்ரிக் வாகன தயாரிப்புக்கு அனுமதி கிடைத்தது.

ஆனால், இந்த ஒப்புதலை மட்டும் வைத்துக் கொண்டு இந்தியாவில் டெஸ்லாவால் தொழில் தொடங்க முடியவில்லை.

இந்தியாவில் இறக்குமதி வரிகளை குறைக்க வேண்டும் என்று இந்திய அரசுக்கு டெஸ்லா கடிதம் எழுதியது. இது குறித்து பிரதமர் அலுவலகத்தின் கவனத்துக்கும் அந்த நிறுவனம் கொண்டு சென்றது.

டெஸ்லா

பட மூலாதாரம், TESLA

ஆனால், இறக்குமதியைக் குறைக்கக் கோரும் டெஸ்லாவின் கோரிக்கையை இந்தியாவில் உள்ள உள்ளூர் போட்டி நிறுவனங்கள் எதிர்த்தன. இந்த நடவடிக்கை உள்நாட்டு உற்பத்தியில் முதலீடுகளை பாதிக்கும் என்று அவை கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டது. இந்தியாவில், 40,000 டாலர்களுக்கு மேல் செலவாகும் மின்சார வாகனங்களுக்கு 100% இறக்குமதி வரியும், $40,000 அல்லது அதற்கும் குறைவான விலையுள்ள வாகனங்களுக்கு 60% வரியும் விதிக்கப்படுகிறது. இந்த வரிகள் காரணமாக, டெஸ்லா கார்கள் இந்தியாவில் அதிக விலைக்கு விற்கும் நிலை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை தவிர்க்கும் முயற்சியாகவே தொழில் தொடங்கும் முன்பதே இதில் உள்ள தடங்களை சரி செய்ய டெஸ்டா நிறுவனம் முற்பட்டிருக்கிறது.

ஈலோன் மஸ்க்கின் விடா முயற்சி

இந்தியாவில் டெஸ்லா நிறுவன கிளையை நிறுவும் முயற்சியை தொடர்ந்து ஈலோன் மஸ்க் வெளிப்படுத்தி வந்தாலும், அதில் நிலவும் தடங்கல்களை அவர் ஆரம்பத்தில் இருந்தே வெளிப்படுத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஈலோன் மஸ்க் பகிர்ந்த ஒரு இடுகையில், இந்தியாவின் இறக்குமதி வரிகள் “உலகிலேயே எந்த பெரிய நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிக அதிகம்!” என்று கூறியிருந்தார்.ஆனால், அவரது அந்தக் கருத்தை அப்போது இந்திய அரசாங்கம் நிராகரித்ததாக வணிகம் டுடே என்ற தொழில் செய்திகளை வழங்கும் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. சமூக ஊடகங்கள் மூலம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க ஈலோன் மஸ்க் முயற்சிப்பதாகவும் அப்போது தகவல்கள் வெளியாயின. இந்தியாவில் பல கட்ட சலுகைகள் அறிவித்த பிறகும், மின்சார வாகனங்களின் சந்தை இன்னும் ஆரம்ப நிலையில்தான் உள்ளது, ஆனால் 2030ஆம் ஆண்டுக்குள் அனைத்து புதிய வாகன விற்பனையில் குறைந்தது 65 சதவீதமாவது மின்சார வாகனமாக இருக்க வேண்டும் என்ற இலக்கை அரசாங்கம் கொண்டிருக்கிறது.உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் வாகன சந்தை – இப்போது உலகின் ஐந்தாவது இடத்தில் உள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப ஆர்வமுள்ள நடுத்தர சமூகத்தின் ஆதரவுடன் இந்த துறை வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நம்பிக்கையுடன் தேர் உற்பத்தி தொழிலில் அதுவும் மின்சார தேர் உற்பத்தி துறையில் தனி கவனம் செலுத்த இந்தியாவில் உள்ள நிறுவனங்களைப் போலவே, ஈலோன் மஸ்கின் டெஸ்லாவும் தொடர்ந்து முயற்சி செய்யும் என்று வாகன தொழிற்சாலைகள் துறையினர் கருதுகின்றனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »