Press "Enter" to skip to content

நீல வைரத்தின் அதிசய வரலாறு: புதிர் நிறைந்த ரத்தினக் கல் உருவாவது எப்படி? மதிப்பு மிக்கதாகக் கருதப்படுவது ஏன்?

  • பிபிசி முண்டோ
  • .

பட மூலாதாரம், Getty Images

இந்த உலகில் வைரங்கள் பல லட்சக்கணக்கான வருடங்களாக உருவாகி வருகின்றன. அவற்றில் சில தம் பிரகாசத்தால் நம் கண்களையும் கவர்ந்து வியப்பில் ஆழ்த்துகின்றன.

இவை நிரந்தரமான அன்பின் வெளிப்பாடாகக் கருதப்படுகின்றன. அவை செழிப்பு மற்றும் ஆடம்பரத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன.

பண்டைய காலங்களில், அவை நன்மையளிக்கக் கூடியவையாகக் கருதப்பட்டன. அவற்றின் பயன்பாடு பலம் தரும் என்று கூறப்படுகிறது. இது எதிரிகள், தீமைகள் மற்றும் கெட்ட கனவுகளிலிருந்து பாதுகாப்பதாகவும் நம்பப்படுகிறது.

இந்தியாவில் உள்ள வைரங்கள் வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை இந்து கடவுள்கள்களுக்கு விருப்பமானவையாகவும் கருதப்பட்டுள்ளன.

கி.பி 868 ஐச் சேர்ந்த புத்த மதத்தின் ‘வைர சூத்திரம்’ இதை, உலக மாயையிலிருந்து விடுபட்டு உண்மையான மற்றும் நித்திய விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடியவையாக வர்ணிக்கின்றது.

பண்டைய கிரேக்க பாரம்பரியத்தில் வைரம் மிகச் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. கிரேக்கர்கள் அவற்றை கடவுளின் கண்ணீர் என்றும் விண்ணிலிருந்து விழுந்த நட்சத்திரங்களின் துண்டுகள் என்றும் கருதினர்.

வைரங்களைப் பற்றிய மிக அற்புதமான விஷயம் என்னவென்றால், அதன் உண்மைத்தன்மை அசாதாரணமானது. இது தொடர்பான நம்பிக்கைகளும் தனித்தன்மை வாய்ந்தவை.

வைரம் “ஃபேன்டசி” என்றழைக்கப்படுவது ஏன்?

வைரங்கள் உருவாகக் காரணமாக இருக்கும் தனிமமான கார்பன் உயிர்களின் அடிப்படையாகும். வைரங்கள் மிகக் கடினமான சூழலில் தான் வலிமை பெறுகின்றன. அவை உருவாகும் சூழலில் கடுமையான அழுத்தத்தைத் தாங்கும் திறன் கொண்டவை. ஹைட்ரஜன் மற்றும் வெப்பநிலையின் சரியான கலவை இருந்தால், அது கார்பன் டை ஆக்சைடாகவும் பறந்துவிடும்.

வைரங்கள் தனிப் பிரகாசமாகவும் பளபளப்பாகவும் இருக்கும். ஆனால் இது மிகவும் கடினமானது. அவை சிறந்த வெப்ப கடத்திகள். வெப்பநிலை காரணமாக அவற்றின் உருவ அளவும் மிகச் சிறியதாகிறது. இது கார மற்றும் அமில ரசாயனங்களால் இது பாதிப்படைவதில்லை. ஆழமான புற ஊதா கதிர்கள் காரணமாக, அது கண்ணாடி போல் ஆகிறது. எதிர்மறை எலக்ட்ரோநெக்டிவிட்டி கொண்ட சில அறியப்பட்ட பொருட்களில் இதுவும் ஒன்றாகும்.

பட மூலாதாரம், Getty Images

பூமியின் கீழ்ப் பரப்பில் வைரங்கள் உருவாகி அதன் அடுக்குகளில் போரான் இருக்கிற நிலையில், இந்த போரான் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி தான் அது.

இந்தப் புவி வேதியியல் புதிருக்கான பதில் பூமியின் ஆழம் பற்றிய துப்புகளையும் நமக்கு வழங்குகிறது.

ஸ்மித்தின் தலைமையில் பணிபுரியும் ஆராய்ச்சிக் குழுவால் இந்த தாத்பரியம் முன்வைக்கப்படுகிறது. போரான் கடலின் மேற்பரப்பில் இருந்து பூமியின் ஆழமான அடுக்குக்கு சென்றதாக அது கூறுகிறது. அதன் டெக்டோனிக் தகடுகள் ஒன்றோடொன்று உரசும்போது இந்த நிகழ்வு ஏற்பட்டது. இச்செயல்முறை சப்டக்ஷன் என்று அழைக்கப்படுகிறது

வைரமானது நீர் நிறைந்த தாதுக்களை உறிஞ்சி ஆழமான கடல் தளத்திற்கு விரிவடைகிறது. இது சமுத்திரத் தட்டின் மேலோட்டத்தையும் கூடச் சென்றடைகிறது.

பூமியின் மேற்பரப்பில் இருந்து இதுவரை பிறந்த வைரங்களில் காணப்படும் போரான் எச்சங்களைக் கண்டறிதல், நீர் நிறைந்த தாதுக்கள் முன்னர் மதிப்பிடப்பட்டதை விட பூமியின் ஆழமான அடுக்குகளில் ஆழமாகப் பயணிப்பதைக் காட்டுகிறது. அதிக ஆழத்தில் வேறுபட்ட நீர் சுழற்சியின் சாத்தியத்தை இது பரிந்துரைக்கிறது.

நீல வைரங்கள் அழகானவை மற்றும் அரிதானவை மட்டுமல்ல, அவை மிகவும் சுவாரஸ்யமானவை என்றும் அவை நம் பூமியைப் பற்றி நிறைய கற்றுக்கொடுக்கின்றன என்றும் ஹர்லோ கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »