Press "Enter" to skip to content

4 ஆண்டுகளில் 1500 பாம்புகளை மீட்பு – பாம்புகளை மீட்கும் மாணவர்கள் அமைப்பு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

4 ஆண்டுகளில் 1500 பாம்புகளை மீட்பு – பாம்புகளை மீட்கும் மாணவர்கள் அமைப்பு

வங்கதேசம் ஜஹாங்கிர்நகர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த மாணவர்கள் கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 1500 பாம்புகளை மீட்டுள்ளனர். அதோடு, பாம்புகள் குறித்த விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர்.

நாடு முழுக்க இருக்கும் மக்களை இணைக்கும் விதமாக இவர்கள் ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளனர். மூட நம்பிக்கைகளை உடைப்பதும் இவர்களது பணிகளில் ஒன்றாக இருக்கிறது.

இவர்களது அமைப்பு தற்போது வங்கதேசத்தில் 500 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதில் 50 பேர் நேரடியாகவே பாம்புகளை மீட்கும் பணியில் இயங்கி வருகின்றனர். பாம்புகளை கையாளத் தொடங்கும் முன் அவர்களுக்கு முழுமையான பயிற்சிக்கு அளிக்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »