Press "Enter" to skip to content

அர்ஜென்டினா துணை அதிபரை கொல்ல முயற்சி: துப்பாக்கி பழுதானதால் உயிர் தப்பினார்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அர்ஜென்டினா துணை அதிபரை கொல்ல முயற்சி: துப்பாக்கி பழுதானதால் உயிர் தப்பினார்

அர்ஜென்டினா துணை அதிபர் கிறிஸ்டினா கிர்ச்னரை கொல்ல ஒரு நபர் துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால், திடீரென துப்பாக்கி பழுதானதால் கிறிஸ்டினா உயிர் பிழைத்தார்.

இது குறித்த காணொளி ஒன்று அர்ஜென்டினா ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் டி கிர்ச்னர் தனது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஆதரவாளர்களிடையே வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டிருந்தார்.

அப்போது கூட்டத்திலிருந்து திடீரென முன்னோக்கி வந்த ஒரு நபர், துணை அதிபர் முகத்தின் மீது குறி வைத்து துப்பாக்கியை அழுத்தியதை இந்தக் காணொளியில் பார்க்க முடிகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »