Press "Enter" to skip to content

இரான் ஹிஜாப் எரிப்பு போராட்டம்: “என் மகளை பார்க்க விரும்பினேன். ஆனால் அவர்கள் விடவில்லை” – மாசா அமினி தந்தை பேட்டி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“என் மகள் மரணத்தில் அதிகாரிகள் சொல்வது பொய்”. இரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் எரிப்பு போராட்டங்களுக்கு வித்திட்ட மாணவி மாசா அமினியின் மரணம் குறித்து அவரது தந்தை அம்ஜத் அமினி வைக்கும் குற்றச்சாட்டு இது.

பிபிசி பாரசீக சேவையிடம் பேசிய அவர், தன் மகளது உடற்கூராய்வு அறிக்கையைக் கூட பார்க்க அனுமதிக்கவில்லை என்பதுடன் தன் மகளுக்கு உடல்நிலை மோசமாக இருந்தது என்பதையும் மறுக்கிறார்.

மேலும், காவலில் வைக்கப்பட்ட மாசா தாக்கப்பட்டார் என்று நேரில் பார்த்தவர்கள் தன் குடும்பத்திடம் தெரிவிப்பதாகவும் தந்தை கூறினார். ஆனால், இரான் அதிகாரிகள் இதை மறுக்கின்றனர்.

ஹிஜாப் அணிவதற்கான விதிகளை மீறியதற்காக, இரான் இஸ்லாமிய அடிப்படைவாத அமலாக்க காவல்துறையால் மாசா கைது செய்யப்பட்டார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »