Press "Enter" to skip to content

BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

வணக்கம் வாசகர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில செய்திகளை தவற விட்டிருக்கலாம்.

கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும்.

பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை வேறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அந்த வகையில், கணினிமய விளையாட்டுகளை தடை செய்வது சாத்தியம்தானா? மூன்லைட் முறையால் ஐ.டி.நிறுவன ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் என்ன? உங்கள் கடன் கார்டை சிக்கல் இல்லாமல் முடிவுக்கு கொண்டுவருவது எப்படி? பூமியை காப்பாற்றிய சிறிய செயற்கைக் கோள் மற்றும் கருப்புக் குடிநீர் ஆகியவை குறித்த ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

கணினிமய ரம்மி உள்ளிட்ட இணைய விளையாட்டுகளை தடை செய்வது உண்மையிலேயே சாத்தியமா?

கணினிமய விளையாட்டுகள்

பட மூலாதாரம், Getty Images

கணினிமய விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசரச் சட்டத்தைக் கொண்டுவர தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், கணினிமய செயலிகளுக்கு நிரந்தரத் தடை விதிப்பது சாத்தியமே இல்லை என்கிறார் சைபர் பாதுகாப்பு வல்லுநர் ஹரிஹரசுதன். அப்படியே கொண்டுவந்தாலும் சிலவற்றை கவனிக்காமல் விட்டால் பிரச்னைகள் தொடரும். எனில் இதற்கான முழுமையான தீர்வு என்ன? அதற்கு வாய்ப்பு உள்ளதா? முழுவதும் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் படியுங்கள்

‘மூன்லைட்’ முறை எச்சரிப்பது என்ன?

மூன்லைட்

பட மூலாதாரம், Getty Images

பிரதானமாக ஒரு பணியை செய்து கொண்டிருக்கும்போது மற்றொரு பணியை செய்வதற்கு பெயர் ஆங்கிலத்தில் ‘மூன்லைட்டிங்’ எனப்படுகிறது. சில நேரம் அந்த இரண்டாவது பணியை ரகசியமாக செய்வதும் இதில் அடக்கம். இது கூடுதல் வருவாய்க்கு வழி வகுப்பதாகத் தெரிந்தாலும் இதில் ஏராளமான சிக்கல்களும் உண்டு.

அண்மையில், முன்னணி மென்பொருள் நிறுவனமான விப்ரோ, செப்டம்பர் மாதம் இம்மாதிரி தங்களது போட்டி நிறுவனங்களுக்காகப் பணி செய்த 300 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியதாக அறிவித்தது. இந்த மூன்லைட் முறையின் சாதக பாதகங்களை விளக்குகிறது இந்தக்கட்டுரை. முழுவதும் படிக்க இந்த இணைப்பில் தொடருங்கள்.

கடன் அட்டை சிக்கலை தீர்ப்பது எப்படி?

கடன் அட்டை

பட மூலாதாரம், Getty Images

சரியாகப் பயன்படுத்தினால் கடன் அட்டை பயனுள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறினாலும், அதை வாங்கியோர் பலர் எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமலும், எப்படிக் கணக்கை முடிப்பது என்று தெரியாமலும் தடுமாறுகிறார்கள். கடன் அட்டை அல்லது கடன் அட்டை என்பது, ‘நுகர்வோரை மையப்படுத்திய தற்போதைய உலகத்தில்’ பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படுவது.

கடன் அட்டைகளை வைத்திருக்கும் பலர் அது தேவையில்லை என்று முடிவுக்கு வந்தாலும் அதன் கணக்கை முறையாக முடிவுக்குக் கொண்டு வருவதில்லை என நிபுணர்கள் கூறுகிறார்கள். முறையாக அதைச் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் தொடருங்கள்.

பூமியை காப்பாற்றிய சிறிய செயற்கைக்கோள்

டார்ட் விண்கலம்

பட மூலாதாரம், NASA/JPL-APL

தற்கொலைப்படை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுபோல ஒரு செயற்கைக்கோள் தன்னைத்தானே அழித்துக்கொண்டுள்ளது. ஆனால், இதனால் பூமி காப்பாற்றப்பட்டுள்ளது

நாசாவின் ‘டார்ட்’ விண்கலம் விண்ணில் உள்ள ஒரு சிறுகோளில் மோதி, அந்த முயற்சியில் தன்னைத்தானே அழித்துக்கொண்டது. நாசாவால் திட்டமிடப்பட்ட இந்த மோதல் வேண்டுமென்றே செய்யப்பட்டது. ஏன்?இதனால் விளைந்தது என்ன என்பன உள்ளிட்ட தகவல்களை இந்த இணைப்பில் படிக்கலாம்.

கருப்பு குடிநீர் என்றால் என்ன?

கருப்பு குடிநீர்

காஜல் அகர்வால் மும்பை விமான நிலையத்தில் கையில் ஒரு புட்டி கருப்பு நிறக் குடிநீரோடு இருக்கும் காணொளி சமீபத்தில் வெளியானது.

செய்தியாளர்கள் அந்தத் தண்ணீரில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது எனக் கேட்டபோது சிரித்துக்கொண்டே, “இது நல்ல குடிநீர். இதை ஒருமுறை குடித்துப் பாருங்கள், உங்களுக்கு மிகவும் பிடிக்கும்,” என்று பதிலளித்தார். அதை எவ்வளவு காலமாகக் குடிக்கிறார் எனக் கேட்டதற்கு, “நீண்ட நாட்களாக” என்று பதிலளித்தார். அவர் மட்டுமல்ல, மலாய்கா அரோரா, ஊர்வசி ரௌதேலா போன்ற பல பிரபலங்கள் கருப்புக் குடிநீர் பருகுவதாக செய்திகள் வெளியாகின. இந்த கருப்புக் குடிநீர் என்றால் என்ன? நம் உடலுக்குள் அது என்ன செய்யும் என்று தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் படியுங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »