Press "Enter" to skip to content

ட்விட்டர் பேரத்தில் கண்ணாமூச்சி – விசாரணை வளையத்தில் ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம், Getty Images

ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக ஈலோன் மஸ்க்குக்கு எதிராக புலன் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

ட்விட்டர் சமூக வலைதள நிறுவனத்துக்கும்-ஈலோன் மஸ்க்குக்கும் இடையே தொடர்ந்து வரும் இந்த சட்டப்போராட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மூலம் இந்த செய்தி கடந்த வார இறுதியில் வெளிச்சத்துக்கு வந்தது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ஈலோன் மஸ்க் விசாரணை வளையத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், எந்த அம்சத்தின் மீதான விசாரணையை அவர் எதிர்கொள்கிறார் என்பது அம்மனுவில் குறிப்பிடப்படவில்லை. அதே சமயம், “பந்தை மறைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் முடிவுக்கு வர வேண்டும்,” என்று ட்விட்டர் நிறுவனம் தனது மனுவில் கூறியுள்ளது.

இது குறித்து கருத்து கேட்க ஈலோன்மஸ்கை அணுகினோம். ஆனால், அவர் உடனடியாக பதில் அளிக்கவில்லை.

ஒப்பந்தத்தை இறுதி செய்ய கட்டாயப்படுத்தக் கோரி மஸ்க்குக்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் வழக்கு தொடர்ந்தது. ஆனால், தாங்கள் கோரிய ஆவணங்களை தர மறுத்த டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான ஈலோன் மஸ்கின் வழக்கறிஞர்கள், அது தங்களின் விசாரணை உரிமை என்று கூறியுள்ளனர் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

சில மாதங்களுக்கு முன்பு மஸ்க்கின் வழக்கறிஞர்கள், மத்திய அதிகாரிகளுடன் மேற்கொண்ட தகவல் பரிமாற்றங்களை தாக்கல் செய்யும்படி கேட்டதாகவும், அவர்கள் அதனை தரவில்லை என்றும் ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது.

செப்டம்பர் மாத கடைசியில் மஸ்கின் வழக்கறிஞர்கள், தடுத்து வைக்கப்பட்ட சில ஆவண ஆதாரங்களை அடையாளம் காண்பதற்கான சிறப்புரிமை குறிப்பை கொடுத்தனர்.

இந்த குறிப்பில், சந்தை முறைகேடுகளை தடுக்கும் சட்டத்தை அமல்படுத்தும் அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்துக்கு (SEC) மே 13ஆம் தேதி அனுப்பப்பட்ட மின்னஞ்சலின் வரைவு குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனங்களை முறைகேடாக கையகப்படுத்தும் சட்டத்தை முன்னெடுக்கும் கொள்கையைக் கொண்ட மத்திய வர்த்தக ஆணையத்திடம் காட்டப்பட்ட ஸ்லைடு காட்சி குறித்தும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்விட்டர் மற்றும் மஸ்க் இடையேயான கையகப்படுத்தும் ஒப்பந்தத்தை முடிக்க அனுமதிக்கும் வழக்கை நீதிமன்றம் தடை செய்த அதே நாளில் நீதிமன்ற கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம், Getty Images

ஒப்பந்தம் குறித்த கேள்விகள்

ட்விட்டரை கையகப்படுத்துவது பற்றிய மஸ்க்கின் விமர்சனங்கள் குறித்து அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் கேள்வி எழுப்பியது.

கடந்த ஏப்ரல் மாதம், எஸ்இசி மஸ்க்கிடம் எழுப்பிய கேள்வியில், 9% ட்விட்டர் பங்குகளை வெளியிடுவது தாமதமான முடிவா? என்றும் இதனால் ஒரு செயலற்ற பங்குதாரராக இருக்க விரும்புவதாக ஏன் இது சுட்டிக்காட்டுகிறது என்றும் கேட்டது. இதன் பின்னர், தான் ஒரு தீவிர முதலீட்டாளர் என்பதை குறிக்கும் பங்கு வெளியீடுகளை மீண்டும் மஸ்க் தாக்கல் செய்தார்.

ஜூன் மாதம் மஸ்க்குக்கு எஸ்இசி எழுதிய கடிதத்தில், ஒப்பந்தத்தை ரத்து செய்யும் அல்லது கைவிடும் அவரது கருத்தை வெளிப்படுத்தும் வகையில் பொது வெளியீட்டில் திருத்தம் கொண்டு வர திட்டம் உள்ளதா என்று கேட்டது.

மஸ்க்கின் வழக்கறிஞர் அலெக்ஸ் ஸ்பிரோ ராய்ட்டர் நிறுவனத்திடம் கூறுகையில் ட்விட்டர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது தவறாக வழிநடத்துவதாக கூறினார்.

“ட்விட்டரின் நிர்வாகிகள்தான் விசாரணையில் உள்ளனர்,” என்று அவர் கூறினார்.

இது குறித்து ட்விட்டர் நிறுவனம் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக மஸ்க் அறிவித்த விவகாரம் இன்னும் தொடர்கிறது என்பது இந்த மனு தாக்கல் மூலம் தெரியவந்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக கூறிய மஸ்க், அதில் இருந்து பின் வாங்கினார்.

அதன் பின்னர் தான் மஸ்குக்கு எதிராக ட்விட்டர் வழக்கு தொடுத்தது. தனது வார்த்தையில் உறுதியாக இருக்க வேண்டும் என்று ட்விட்டர் குறிப்பிட்டது.

இந்த நிலையில், ஒப்பந்தத்தை உறுதியாக செயல்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கின் விசாரணை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஒப்பந்தத்தை செயல்படுத்த உள்ளதாக மஸ்க் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Banner

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »