Press "Enter" to skip to content

சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கு எதிராக பாலத்தில் போராடிய மர்ம மனிதர்

  • டெஸ்ஸா வோங்
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், INTERNET

கடந்த வாரத்தின் மேகமூட்டமான ஒரு மதிய வேளையில், நெருக்கடி மிகுந்த பெய்ஜிங்கின் ஹைடியன் பல்கலைக்கழக மாவட்டத்தில் உள்ள மேம்பாலத்தில் ஒரு மனிதர் தேர் டயர்கள், அட்டை பெட்டியுடன் ஏறினார்.

ஆரஞ்சு வண்ணத்திலான தொழிலாளர்களுக்கான உடை, கடினமான மஞ்சள் நிறத்திலான தொப்பி ஆகியவற்றுடன், பார்ப்பதற்கு ஒரு கட்டுமான தொழிலாளர் போல எளிதாக அவர் ஏறி சென்றார்.

அதனைத் தொடர்ந்து அவர், சிவப்பு வண்ணத்தில் எழுதப்பட்ட முழக்க வார்த்தைகள் அடங்கிய இரண்டு வெள்ளை நிற பேனர்களை திடீரென விரித்தார். தான் கொண்டு வந்த டயர்களை தீ வைத்து எரித்தார். இதனால் அவரை சுற்றி இறகுகள் போல கரும்புகை சூழ்ந்தது. ஒரு சிறிய ஒலிப்பெருக்கியை எடுத்து, திரும்பத் திரும்ப முழக்கங்களை எழுப்பினார்.

“பள்ளி, பணியிடம், ஆகியவற்றில் வேலை நிறுத்தம் செய்யுங்கள். சர்வாதிகாரி மற்றும் தேசதுரோகி அதிபர் ஷி ஜின்பிங்கை அகற்ற வேண்டும். நாம் உணவு உண்ண வேண்டும், எங்களுக்கு சுதந்திரம் தேவை. நாங்கள் வாக்களிக்க வேண்டும்,” என்று முழங்கினார்.

இலங்கை
இலங்கை

அதிபருக்கு எதிராக அணி திரட்டிய மர்ம மனிதர்

ஒரு நொடிப்பொழுதில், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆட்சியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செயலாக பார்க்கப்படும் சீன போராட்டம் என்ற கடினமான ஒன்றை அந்த மனிதர் வெற்றிகரமாக செயல்படுத்தினார். சீன அதிபர் மூன்றாவது முறையாக அதிகாரமிக்க பதவியை வெற்றிகரமாக தொடங்குவதை சிதைப்பதாக அது இருந்தது.

அதிருப்தி எனும் நரம்பை தட்டி எழுப்புவதைப்போல, மிகவும் பரவலான சமூக ஊடக புயல்களில் ஒன்றாக இது தூண்டப்பட்டது. அண்மைக்காலங்களில் கருத்து வேறுபாடுகளை அடக்கி வைக்க சீனாவின் தணிக்கை ஒடுக்கு முறைகள் நீடித்திருக்கும் மரபாக காணப்படுகின்றன.

ஏறக்குறைய போராட்டம் தொடங்கிய உடனேயே அந்த நிகழ்வின் படங்கள், காணொளிக்கள் சமூக ஊடங்கள், குறுஞ்செய்தி செயலிகளில் அதிக எண்ணிக்கையில் பகிரப்பட்டன. சாதாரண சீன மக்களுக்கு இந்த நிகழ்வு எவ்வளவு அதிர்ச்சிகரமாக இருந்திருக்கும் என்பதற்கு அடையாளமாக இது இருந்தது.

பொதுமக்கள் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், கம்யூனிஸ்ட் மாநாடு எனும் முக்கியமான நிகழ்வுக்கு முன்னதாக தலைநகரில் ஒரு அரசியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. இது அதிபர் ஜிங் பிங்கை வெளிப்படையாக அவமானப்படுத்துவதாகவும். இது நாள் வரை நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நடக்கும்போது கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்போது நடந்த இந்த நிகழ்வானது பாதுகாப்பு குறைபாட்டை வெளிப்படுத்துவதாக சந்தேகிக்கப்படுகிறது.

போராட்டம் நடத்திய அந்த நபர் ஆரம்ப கட்ட கண்காணிப்பில் இருந்து தப்பியது மட்டுமின்றி , காவல் துறை காரில் குண்டுகட்டாக தூக்கிச் செல்வதற்கு முன்பு வரை பாலத்தின் வழியே சென்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் அவருக்கு போதுமான நேரம் கிடைத்தது.

இது சீனாவின் தணிக்கையாளர்களின் கவனத்தையும் ஈர்க்கத் தகவறவில்லை. இதனையடுத்து அவர்கள் இந்த போராட்டம் தொடர்பான புகைப்படங்கள், காணொளிக்களை அகற்றினர். பெய்ஜிங், பாலம் போன்ற பொதுவான வார்த்தைகள் உள்ளிட்ட இது தொடர்பான பரந்த அளவிலான வார்த்தைகள் தேடு பொறியில் தேடப்படுவதை வரைமுறைப்படுத்தினர்.

இந்த நடவடிக்கையானது அந்த நாட்டு குடிமக்களுடனான அரசின் தொடர்ச்சியான பூனை, எலி இடையேயான கண்ணாமூச்சி விளையாட்டுக்கு இட்டுச் சென்றது. சீனமக்கள் ஏர்டிராப், ஃபைல் டிரான்ஸ்பர் சேவைகளை பயன்படுத்தி படங்களை பகிரந்து கொண்டனர். நானும் அதை பார்த்தேன் என்ற மறைமுகமான வார்த்தைகளுடன் இந்த நிகழ்வை சீனமக்கள் விவாதிக்கவே செய்தனர்.

சீனா கணினி மயமான டைம்ஸ் அமைப்பை சேர்ந்த தணிக்கை துறை ஆய்வாளர் எரிக் லியு, அண்மைகாலங்களில் நான் பார்த்ததில் இது உண்மையில் மிகவும் கடுமையான தடுப்பு நடவடிக்கை. முழுமையான பரந்த அளவிலான விஷயங்களை அகற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இருந்தது. இது ஒரு முட்டாள் தனமான செயல்,” என்றார்.

முற்றிலும் கொரோனா இல்லாத சூழல் என்ற கொள்கை மீதான வெறுப்பு பொதுமக்களின் மனதில் ஆழமாக கொதித்துக் கொண்டிருக்கும் அலையாக இருந்த நிலையில் இந்த போராட்டம் அதனை எதிரொலித்தது. தொடர்ச்சியான உயர் மட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் விரும்ப தகாத கொள்கையை நோக்கி பல கேள்விகளை எழுப்பியது. இந்தவாரம் கொரோனா தனிமையில் வைக்கப்பட்டிருந்த 14 வயது இளம் பெண்ணின் மரணம், கோபம் அதிகரிப்பதற்கான அண்மைகால சர்ச்சையாக அமைந்தது.

இந்த வெறுப்பு, ஏறக்குறைய சீன சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் பரவியதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“சாங்காய், பெய்ஜிங் ஆகிய நகரங்களின் மக்கள் கடுமையான கட்டுபாடுகளுடன், முடிவற்ற சுழற்சியில் கோவிட் பரிசோதனைகளை எதிர்கொண்டனர். தலைநகரில் வியாழக்கிழமையன்று புதுப்பிக்கப்பட்ட நடவடிக்கைகளையும் காணமுடிந்தது. நடுத்தர மற்றும் உயர்மட்ட மக்கள் உண்மையில் பாதிக்கப்பட்டனர். முன்னுரிமை பெற்றவர்களுக்கான விழிப்புணர்வு அழைப்பாகவே இது இருந்தது. இந்த ஆட்சி தங்களை அதிக அளவுக்கு காயப்படுத்தியதாக அவர்கள் உணர்ந்தனர்,” என்கிறார் நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானி விக்டோரியா ஹூய்.

இந்த போராட்டமானது, சர்வாதிகார உத்தரவின் மீதான ஆழ்ந்த கவலையையும் உருவாக்கி உள்ளது. “தலைவர்கள் இல்லை. எங்களுக்கு ஓட்டுரிமை தேவை, நாங்கள் குடிமக்களாக இருக்கின்றோம். அடிமைகள் அல்ல,” எனும் ஒரு சுவரொட்டி அறிவித்ததை நோக்கி சீனா செல்கிறது.

இலங்கை
இலங்கை

சீனாவின் மறுசீரமைப்பாளர் டெங் ஜியோபிங் தொடங்கி, கட்டுப்பாடுகளை தளர்த்துதல், இறுக்கமாக செயல்படுத்துதல் என்ற சுழற்சி அடிப்படையில் சீனாவை ஆட்சி செய்யும் தலைவர்கள் செயல்படுவதாக தைவான் தேசிய பல்கலைக்கழகத்தின் சமுகவியலாளர் மிங் ஷோ ஹோ சுட்டிக்காட்டுகிறார்.

“ஆனால் ஷி ஜின்பிங் இந்த சுழற்சியில் இல்லை. இது வெறும் கட்டுப்பாடுகளை அதிகரிப்பதாக இருக்கிறது. மக்களின் சுதந்திரத்தில் பெரும் கட்டுபாட்டுகளை விதிக்கும் அதிக அதிகாரமிக்கவராக மாறிவருவதற்கான முறைக்கான அறிகுறியாக முற்றிலும் கோவிட் இல்லாத சூழல் கொள்கை திகழ்கிறது.”

ஷி ஜின்பிங்கின் ஒருங்கிணைந்த அதிகாரத்தின் மீதான விமர்சனம், விவாதங்கள் பல்வேறு முயற்சிகள் வாயிலாக தணிக்கையாளர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. மூன்றாவது முறையாக ஆட்சியில் தொடருபவர் என்பதை குறிக்கும்(three-in-a-row with one key”) ஒரே ஒருமுறையில் தொடர்ச்சியாக மூன்றாவதாக எனும் இணையதள தேடுதல் வார்த்தையைக் கூட அவர்கள் தடை செய்துள்ளனர்.

முடக்கப்பட்ட இந்த அமைதியானது, பாலத்தில் நடந்த போராட்டத்தின் காரணமாக நொறுங்கியது. சீன அதிபராக மூன்றாவது முறையாக நியமிக்கபடுவதற்கான நிகழ்வுக்கு முன்பாகவும், அதன் பின்னரும் விவாவதங்களை அதிகரித்திருக்கிறது.

“இது நடந்த நேரம், இந்த போராட்டம் இப்போது அதிபர் ஷி ஜின்பிங்கின் மூன்றாவது பதவி காலத்தின் அடையாளமாகி விட்டது. எதிர்காலத்தில் இதன் தொடர்பையும் மக்கள் நினைத்துப்பார்ப்பார்கள்,” என்றார் பேராசிரியர் ஹூ.

டேங்க் மேன் ஆர்ப்பாட்டக்காரர் முதல் மேம்பால மனிதர் வரை

மர்மமான முறையில் மேம்பாலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மனிதருடன் 1989ஆம் ஆண்டின் தியனன்மென் எதிர்ப்பில் ஈடுபட்ட டேங்க் மனிதனின் ஆர்பாட்டத்துடன் சிலர் பொருத்திப் பார்க்கின்றனர்.

ஆனால், சீன எதிர்ப்பு வல்லுநர்கள், அதே அளவிலான வரலாற்று ரீதியான முக்கியத்துவத்தை இந்த மனிதர் பெறுவாரா என்பதை இவ்வளவு முன்கூட்டியே சொல்வது கடினம் என்கின்றனர்.

மேம்பால போராட்ட மனிதரின் தெளிவான புகைப்படம் இல்லை. இந்த போராட்டம் என்பது, எதிர்ப்பின் தனிமைப்படுத்தப்பட்ட செயல் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கு முரணாக, தியனன்மென் சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபரின் எதிர்ப்பு குறித்த செய்தி படங்கள் அழியாத ஒன்றாக இருக்கிறது. வெகுஜன இயக்கமாக தோன்றியது. அதோடு தொடர்புடைய கடந்த கால கொடூரம் சீனாவின் தடை செய்யப்பட்ட தலைப்பாக மாறியது. சீனாவின் மனசாட்சியை இன்றைய நாளிலும் ஆட்டிப்படைக்கிறது.

சீனா

பட மூலாதாரம், Getty Images

மேம்பால மனிதரின் போராட்டம் பெரும் எழுச்சியாக முன்னெடுக்கப்படுமா என்று பலருக்கு சந்தேகம் இருந்தது. போராட்டம் நடந்துங்கள், கட்சி மாநாடு நடக்கும்போது ஒத்துழையாமையில் ஈடுபடுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு அந்த மனிதர் அழைப்பு விடுத்தபோதிலும் அவை புறக்கணிக்கப்பட்டன.

“கம்யூனிஸ்ட் கட்சி அச்சம் அடைந்தது போல இது போன்ற தனிநபர் போராட்டம் வாக்கு மொத்த நடவடிக்கைக்கு அப்பால் உள்ளது. மேம்பால மனிதரை விடவும் பெரிய அச்சுறுதல்களை அடக்கும் திறனை அவர்கள் கொண்டிருக்கின்றனர்,” என்கிறார் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் பொருளாதார நிபுணர் ஹோ-ஃபங் ஹங், அண்மைகாலமாக வழக்கறிஞர்கள், செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அவர் சுட்டிக்காட்டினார்.

“அப்படி ஏதேனும் இருந்தால், இந்த சம்பவமானது, அதிருப்தியின் விதை குறித்து கட்சியை எச்சரித்துள்ளது. அவர்களின் பிடியை இன்னும் இறுக்கமாக்குவதற்கு ஒரு காரணத்தை அது கொண்டிருக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

ஆனால், சமூக ஊடங்களின் காலத்தில், மேம்பால மனிதரின் தீவிரமான போராட்ட செயல்பாடு, அவரது செய்தி, பொது வெளியில் இருந்து நீண்டகாலத்துக்கு மறைந்து நீண்டகாலத்துக்குப் பிறகு எதிரொலிக்கும்.

சில சீனர்கள், மேம்பால மனிதரின் தொடர்ச்சியை பாதுகாக்கும் வகையில், சமமாக பொருந்திய தீர்மானத்துடன் வலுவுடன் இப்போது தணிக்கைதுறையின் தீவிர நடவடிக்கைகளுக்கும் பதிலடி தருகின்றனர்.

சமூக செயற்பாட்டு குழுக்கள் மேம்பால மனிதரின் அரசியல் ரீதியிலான முழக்கங்களை விளம்பர ஒட்டிகள், மீம்ஸ்களாக பகிர்வு செய்கின்றன. சீனாவிலும் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், பொது சுவர்கள், பாலங்கள் மற்றும் குளியலறைக் கடைகளில் கூட எதிர்ப்புச் சின்னங்களும் எழுத்துகளும், ஓவியங்களும் பெருகிவிட்டன.

மர்மமான போராட்டக்கார ர் குறித்து இணையதளத்திலும் பலர் தேடி வருகின்றனர். ஒரு இயற்பியலாளர் மற்றும் கல்வியாளராக அவர் இருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். மக்கள் தன்னை கண்டறியும் வகையில் இணையத்தில் உலாவியதற்கான சில குறிப்புகளை அந்த நபர் விட்டு சென்றிருப்பதாக தெரிகிறது. இணைய அறிக்கை உள்ளிட்ட சிலவற்றை நகல் எடுத்தும் பகிர்ந்துள்ளனர்.

அவரது ட்விட்டர் பக்கம், அவர் மீதான வியப்பின் வெளிப்பாடுகள், அவரை நினைவு கூறுவதை உறுதி செய்யும் வகையிலான பின்னூட்ட செய்திகளால் நிரம்பி வழிகின்றன.

சீனா

பட மூலாதாரம், INTERNET

உண்மையில் அவர் மேம்பால மனிதர்தானா என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால், உணர்வுகளின் அடர்த்தியின் மூலம், மர்மான போராட்டக்காரர் நம்பிக்கை எனும் அடையாளமாக மாறியுள்ளார்.

“ஒவ்வொருவருக்காகவும் அவர் பேசியுள்ளார். குறிப்பாக தியானன்மென் நிகழ்வுக்குப் பிறகு மக்கள் இது போன்ற நபரை மறக்கவிரும்பவில்லை என்று நான் நினைக்கின்றேன்,” என்றார் மருத்துவர் ஹூய்.

அந்த நபர் இப்போது அதிகாரிகளின் கைகளில் இருக்கிறார். கடுமையான தண்டனையை அவர் எதிர்கொள்ளலாம், என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ஆனால், அவரது செய்தி மரணிக்கப்போவதில்லை”.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »