Press "Enter" to skip to content

எதிரணியை ‘நடுங்க வைத்த’ சுப்மன் கில்; வரலாறு படைத்த இந்தியா

பட மூலாதாரம், Sportspics

முதல் 30 பந்துகளில் 46 ரன்களை பொறுமையாக சேர்த்திருந்தார் சுப்மன் கில். ஆனால் அடுத்த 33 பந்துகளில் 80 ரன்களை அடித்து அதிரடி காட்டினார். தொடக்கம் அமைதியாக அமைந்தாலும் முடிவு ஆக்ரோஷமாக இருக்கும் என்பதை தனக்கே உரிய ஆட்டப்பாணியை வெளிப்படுத்தியிருக்கிறார் சுப்மன் கில்..

நியூசிலாந்தை சோதித்த இந்திய சூறாவளி

டி20 ஆட்டத்தில் தனது முதல் அரைசத்தை பதிவு செய்ய சுப்மன் கில்லுக்கு 35 பந்துகள் தேவைப்பட்டன. அரைசதத்தோடு கில்லின் ஆட்டம் முடிந்துவிடும் என எண்ணிய நியூசிலாந்தின் கனவு கடைசி வரை கைக்கூடாமலேயே போனது.

அடுத்த 19 பந்துகளில் கில் ஆடிய ஆட்டம், நியூசிலாந்தை திக்குமுக்காடச் செய்தது. அவரை யாராலும் சமாளிக்க முடியவில்லை. குறிப்பாக 15வது ஓவர் முடிவில் 67 ஓட்டங்கள் எடுத்திருந்த கில் 16வது சுற்றில் 2 சிக்சர்களை அடுத்தடுத்து பறக்கவிட்டார். 17வது சுற்றில் ப்ளெய்ர் டிக்னர் வீசிய பந்துகளையும் நாலாபுறமும் சிதறடித்தார்.. அந்த ஓவரிலும் 2 சிக்சர்கள் கில்லின் பேட்டில் இருந்து பறந்தன.

90களில் இருக்கிறோம் என்கிற எந்த கவலையுமின்றி துணிச்சலுடன் களத்தில் சுழன்றுகொண்டிருந்தார் சுப்மன் கில். ஃபெர்கியூசன் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசி தனது முதல் சர்வதேச டி20 சதத்தை அற்புதமான முறையில் பதிவு செய்தார் சுப்மன் கில். மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் கில்லின் ஒரு சிறந்த ஆட்டத்தை கண்டு ஆர்ப்பரித்தனர்.

சுப்மன் கில்லின் அதிரடியான ஆட்டம் இந்தியாவுக்கு மகத்தான வெற்றியை தேடித் தந்திருக்கிறது. நியூசிலாந்தை 169 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரை 2 – 1 கணக்கில் கைப்பற்றி அசத்தியிருக்கிறது இந்திய அணி.

போட்டியில் என்ன நடந்தது?

நியூசிலாந்து உடனான 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் 1 – 1 என்கிற கணக்கில் சமநிலையில் இருந்த இந்தியா, தொடரை வெல்லும் முனைப்பில் 3வது போட்டியில் களமிறங்கியது.

ஆமதாபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா மட்டையாட்டம்கை தேர்வு செய்தார்.

இஷான் கிஷன் 1 ஓட்டத்தில் வெளியேறினார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி, சூர்ய குமார் இருவரும் குறைந்த பந்துகளில் கணிசமான ரன்களை விளாசி ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய சுப்மன் கில் தொடக்கம் முதல் இறுதி வரை நியூசிலாந்தை கடுமையாக சோதித்தார்.

ஹர்திக் பாண்டியா 30 ஓட்டங்களில் வெளியேறினாலும் கில் இறுதி வரை அடித்து ஆடினார். மொத்தம் 63 பந்துகளை எதிர்கொண்ட அவர், 7 சிக்சர்கள், 12 பவுன்டரிகளை விளாசி 126 ஓட்டங்கள் சேர்த்திருந்தார். சுற்று முடிவில் அவரது வேலை நிறுத்தத்ம் ரேட் 200-ஐ எட்டியிருந்தது. தனது 126 ஓட்டங்கள் மூலம் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி, சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியர் வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் எனும் சாதனை படைத்தார் கில்.

அனைத்து ஃபார்மட்டிலும் சதம் அடித்த இளம் வீரர், ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம், சர்வதேச டி20-ல் சதம் அடித்த இளம் இந்தியர், நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள், டி20 களில் அதிக ரன்களை குவித்த இந்திய பேட்ஸ்மேன் என அடுக்கடுக்கான பெருமைகளை தன் பெயரில் அடுக்கி வைத்திருக்கிறார் 23 வயதான சுப்மன் கில்.

அவரது அதிரடியான ஆட்டத்தால் இந்தியா 234 ரன்களை சேர்த்திருந்தது.

ஆமதாபாத்தில் ‘தடுக்கி விழுந்த’ நியூசிலாந்து

சுப்மன் கில்

பட மூலாதாரம், Sportzpics

235 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அடுத்தடுத்து மட்டையிலக்குகளை பறிகொடுத்த அந்த அணி 66 ரன்களுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. இதன் மூலம் இந்தியா அபார வெற்றி பெற்றி தொடரையும் கைப்பற்றியிருக்கிறது. இந்த போட்டியே இந்தியாவுக்கு டி20-ல் அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றியாகும்

இந்தியா தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களை வீசி 4 மட்டையிலக்குகளை கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி ஆகியோர் தலா 2 மட்டையிலக்குகளை வீழ்த்தினர்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஓட்டத்தை மழை பொழிந்த கில் ஆட்டநாயகனாக தேர்வானார். தொடர் நாயகன் விருதை ஹர்திக் பாண்டியா தட்டிச் சென்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »