Press "Enter" to skip to content

நம்பர் 1 இடத்தை தக்க வைக்குமா இந்திய அணி? சேப்பாக்கம் மைதானம் யாருக்கு சாதகமாக அமையும்?

பட மூலாதாரம், Getty Images

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஆட்டத்தில் இந்தியாவும் 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்ற நிலையில், இந்த தொடரின் வெற்றியை முடிவு செய்யும் ஆட்டமாக இன்றைய ஆட்டம் இருப்பதாலும் சேப்பாக்கம் மைதானத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச போட்டி நடைபெறுவதாலும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் இப்போட்டியை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட் செய்த அணி தோல்வியை சந்தித்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் 8 மட்டையிலக்கு வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. அதன் பின்னர் மூன்றேகால் ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் சர்வதேச போட்டி நடைபெறுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளில் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும், கடந்த இரு போட்டிகளிலும் பந்துவீச்சாளர்களே முக்கிய பங்காற்றினார். இரு ஆட்டங்களிலுமே 200 ரன்களை இரு அணிகளும் கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பலவீனமான நிலையில் இந்திய மட்டையாட்டம்

இந்திய அணியை பொறுத்தவரை அதன் மட்டையாட்டம் மிக மோசமான நிலையில் உள்ளது. முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 188 ரன்களுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆனபோதிலும் அந்த ஓட்டத்தில் எட்டுவதற்கு இந்திய அணி சிரமத்தை சந்தித்தது. இந்தியாவின் முதன்மையான வாங்குதல் பேட்ஸ்மேன் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், கே.எல்.ராகுல், ரவிந்திர ஜடேஜா ஆகியோரின் உதவியால் இந்தியா வெற்றி பெற்றது.

இரண்டாவது ஒருநாள் போட்டியிலோ மிட்செல் விண்மீன்க்கின் மிரட்டல் பந்துவீச்சில் இந்தியாவின் முதன்மையான வாங்குதல் பேட்மேன்கள் நிலை குலைந்து போனார்கள். இந்த ஆட்டத்தில் இந்தியாவின் 4 பேட்ஸ்மேன்கள் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலேயே ஆட்டமிழந்தனர்.

குறிப்பாக சூர்ய குமார் யாதவின் ஆட்டம் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாட்டை வெளிப்படுத்தும் சூர்யகுமார் யாதவ், ஒருநாள் போட்டியில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். முந்தைய இரு ஆட்டங்களிலும் அவர் ஓட்டங்கள் எதுவுமே எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதுவரை ஆடியுள்ள 23 ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை மட்டுமே அவர் 50 ரன்களை கடந்துள்ளார். எனவே, இன்றைய ஆட்டத்தில் தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடி அவருக்கு உள்ளது.

சூர்யகுமார் யாதவின் ஆட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, ‘ கடந்த இரு ஆட்டங்களிலும் அதற்கு முன் நடந்த தொடரிலும் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்துள்ளார். ஆனால், அவருக்கு தொடர்ந்து 7-8 ஆட்டங்கள் அல்லது 10 ஆட்டங்களில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் . அப்போதுதான் அவர் சௌகரியமாக உணர்வார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல் ஷுப்மன் கில்லும் சரிவர ரன்களை குவிக்க திணறிவருகிறார். தொடரை முடிவு செய்யும் ஆட்டம் என்பதால் இன்றைய போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

மிரட்டும் மிட்செல் மார்ஸ் – மிட்செல் விண்மீன்க்

இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியாவின் மட்டையாட்டம்- பௌலிங் இரண்டுமே வலுவான நிலையில் உள்ளது. குறிப்பாக மிட்செல் மார்ஸ் கடந்த இரண்டு ஆட்டங்களிலுமே அரை சதம் கடந்துள்ளார். முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் மற்ற பேட்ஸ்மென்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க மிட்செல் மார்ஸ் 81 ரன்களை எடுத்தார். இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் 36 பந்துகளில் 66 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு அவர் முக்கிய பங்காற்றினார். டிராவிஸ் ஹெட் உட்பட பிற பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடி வருகின்றனர்.

பந்துவீச்சில் மிட்செல் விண்மீன்க் இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்டி வருகிறார். இரு ஆட்டங்களிலும் அவர் 8 மட்டையிலக்குகளை வீழ்த்தியுள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாக பார்க்கப்படுவதால் இன்றைய ஆட்டத்தில் மிட்செல் விண்மீன்க் ‘வேகம்’ பயமுறுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளுமே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்பு உள்ளது.

மைதானம் யாருக்கு சாதகம்?

சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை 22 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இந்தியா 13 ஆட்டங்களில் விளையாடி 7ல் வெற்றியும் 5ல் தோல்வியும் பெற்றுள்ளன. ஆஸ்திரேலியா இங்கு 5 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. இதில், 4ல் வெற்றியும் ஒரு ஆட்டத்தில் தோல்வியும் பெற்றுள்ளது. இரு அணிகளும் முதன்முறையாக கடந்த 1987 நடந்த உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் மோதின. இதில் ஆஸ்திரேலியா ஒரு ஓட்டத்தை வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. தற்போதைய தொடரில் மட்டையாட்டம்கில் மிரட்டி வரும் மிட்செல் மார்ஸின் தந்தை ஜெஃப் மார்ஸ் இந்த ஆட்டத்தில் 110 ஓட்டங்கள் அடித்து ஆட்ட நாயகம் விருதை கைப்பற்றி இருந்தார்.

இந்த தொடரின் இரண்டு ஆட்டங்களிலும் 2வது பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. ஆனால், சென்னை செப்பாக்கம் மைதானத்தில் முதலில் பேட் செய்த அணிகளே அதிகம் வென்றுள்ளன. 22 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணி 13 முறை வெற்றி பெற்றுள்ளன.

இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி

பட மூலாதாரம், Getty Images

முதல் இடத்தை தக்க வைக்குமா இந்திய அணி?

ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி தற்போது 114 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 112 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் 115 புள்ளிகள் பெற்று தனது முதலிடத்தை தக்க வைக்கும் அதேவேளையில், ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றால் இரு அணிகளுமே 113 புள்ளிகள் பெற்று சமன் ஆகும். தொடரை கைப்பற்றும்பட்சத்தில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடிக்கக் கூடும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »