Press "Enter" to skip to content

ருதுராஜ் கெய்க்வாடின் ஓட்டத்தை மழை, தோனியின் அட்டகாசமான சிக்ஸ்: சென்னை வெற்றி சாத்தியமா?

பட மூலாதாரம், Indian Premier League/Twitter

எப்போது என எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டன. அதிலும் முதல் போட்டியே தமிழக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி போட்டி. சென்னை அணி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது.

முதலில் மட்டையாட்டம் செய்த சென்னை அணி 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 178 ரன்களை எடுத்துள்ளது. கடைசியாக களமிறங்கிய கேப்டன் தோனி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை வழங்கத் தவறவில்லை.

டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சுகை தேர்வு செய்யவே, சென்னை அணி முதலில் மட்டையாட்டம் செய்தது.

கடந்த ஐபிஎல் தொடரில் முதல் நான்கு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்து, இறுதியில் 9வது இடத்திற்குத் தள்ளப்பட்ட சென்னை அணி, இந்த முறை தனது பழைய வெற்றிப் பட்டியலில் இடம் பெறுமா என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதற்கு ஏற்றாற்போல் முதலில் மட்டையாட்டம் செய்யத் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விலாசத் தொடங்கியது.

சென்னை அணியின் கேப்டன் 41 வயதான தோனிக்கு இது அநேகமாக கடைசி ஐபிஎல் தொடராக இருக்கக்கூடும். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி ஏறக்குறைய ஓராண்டுக்குப் பிறகு தனது மட்டையாட்டம் செய்ய வருவதால், அவர் சுழற்றியடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

அதேவேளையில், அவரது ஆட்டம் எந்த அளவுக்கு இருக்கும், முன்பைப் போல் முத்திரை பதிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. தோனி இன்னும் 22 ரன்களை எடுத்தால் ஐபிஎல் போட்டிகளில் 5,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய பருவத்தில் சென்னை அணியை குஜராத் அணி இரண்டு முறை வீழ்த்தியுள்ளது.

முகமது ஷமியின் 100வது மட்டையிலக்கு

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக சென்னை தரப்பில் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி களமிறங்கியது. முதல் சுற்றில் மட்டையிலக்கு எதையும் இழக்காமல் நின்ற சென்னை அணி இரண்டு ரன்களை மட்டுமே எடுத்தது. முகமது ஷமியின் பந்துவீச்சை எதிர்கொண்ட கான்வே, கெய்க்வாட் இருவருமே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இரண்டவது ஓவரை விசிய ஹர்திக் பாண்ட்யா நேரடித் தாக்குதலைத் தொடங்கினார். ஆனால், அவரது பந்தை லாகவமாகத் தட்டிய கெய்க்வாட் பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். ஸ்டம்புக்கு குறி வைத்து பந்து வீசிய ஹர்திக் பாண்ட்யாவின் பந்துவீச்சை எதிர்கொண்ட கான்வே நிதானமாக அதை எதிர்கொண்டார்.

முதல் மூன்று ஓவர்களில் ஷமி, ஹர்திக் பாண்ட்யா இருவரது பந்துவீச்சையும் எதிர்கொண்டதில், மூன்றாவது ஓவரின்போது ஒரு மட்டையிலக்கு இழப்புக்கு 14 ரன்களை சென்னை எடுத்திருந்தது. டெவோன் கான்வே மட்டையிலக்குடை வீழ்த்தியதன் மூலம் ஷமி தனது 100வது மட்டையிலக்குடை எடுத்தார். அவரைத் தொடர்ந்து மொயீன் அலி களமிறங்கினார். ஷமியின் சுழற்பந்தை எதிர்கொண்ட மொயீன் அலிக்கு தனது பந்துவீச்சின் சுவையைத் தொடக்கத்திலேயே கொஞ்சம் காட்டி விளையாடினார் ஷமி.

ஆறாவது ஓவர் முடிவில் சென்னை அணி, ரஷீத் கான் பந்துவீச்சில் மொயீன் அலியும் அவுட்டானார். ஆறு ஓவர் முடிவில் இரண்டு மட்டையிலக்குடுகளை இழந்து சென்னை அணி 51 ரன்காளை எடுத்திருந்தது. தொடக்க வீரர் டெவோன் கான்வே ஒரு ரன்னிலும் அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலி ஒரு சிக்சர், 4 பவுண்டரி அடித்து 24 ரன்களோடும் ஆட்டமிழந்தனர்.

ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து களத்தில் நின்று விளாசி வருகிறார். மொயீன் அலியை தொடர்ந்து கெய்க்வாட் உடன் கூட்டணி சேர்ந்தார் பென் ஸ்டோக்ஸ். பென் ஸ்டோக்ஸ் மட்டையாட்டம்கில் களமிறங்கிய நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் பந்துவீசத் தொடங்கினார். ஏழாவது சுற்றில் ஹர்திக் பந்துவீச்சை எதிர்கொண்ட கெய்க்வாட், பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்டு லாங்-ஆஃபில் சிக்சர் அடித்தார்.

நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியிருந்தது. ஆனால் அடுத்த ஓவரிலேயே ரஷீத் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் அவுட்டானார். உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனான பென் ஸ்டோக்ஸின் மட்டையிலக்குடை மிக அழகாக வீழ்த்தினார் ரஷீத். அவரது பந்துவீச்சை கணிப்பதே பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சிரமமானது என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துக் காட்டினார்.

கேன் வில்லியம்சன் காயம்

பவர்பிளே முடிவதற்கு முன்பாக ரஷீத் ஆஃப்-ஸ்டம்பை சுற்றி ஒரு பந்து வீசினார். அந்தப் பந்தை இறங்கி லாங் ஷாட்டில் அடிக்க முயன்றார் மொயீன் அலி. அவரை அப்படி அடிக்க வைப்பதே ரஷீத்தின் திட்டமாக இருந்தது. ஆனால், அப்படி அவர் செய்யும்போது மொயீன் அலி அடித்த பந்தை அழகாக சாஹா கேட்ச் செய்தார். அதேபோல் பென் ஸ்டோக்ஸ் மட்டையிலக்குடையும் அழகாக எடுத்தார் ரஷீத் கான்.

ஒன்பது ஓவர் முடிவில் சென்னை அணி 3 மட்டையிலக்குடுகளை இழந்து 90 ரன்களை எடுத்திருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் அபார மட்டையாட்டம்கை வெளிப்படுத்தி 23 பந்துகளில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து அபார மட்டையாட்டம்கை வெளிப்படுத்தியவர், அடுத்தடுத்து ஃபோர், சிக்ஸ் என விளாசிக் கொண்டிருந்தார்.

13வது ஓவர் முடிவில் சிக்சர் அடிக்க முயன்றார் ஜோசுவா லிட்டில். அந்த நேரத்தில் அதைத் தடுக்க முயன்ற வில்லியம்சனுக்கு காலி காயம் ஏற்பட்டது. அவரது காயம் கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இன்னொரு பக்கம் பந்து ஃபோர் போனதாக நடுவரும் சைகை செய்தார். அதைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடு ஜோசுவா லிட்டிலை 12 ஓட்டங்களில் அவுட்டாக்கி திருப்பி அனுப்பினார்.

ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடர்களில் தனது 12 வது அரைசதத்தை இந்த சீசனின் முதல் போட்டியிலேயே பூர்த்தி செய்துள்ளார். இதுவரை அவர் 11 அரை சதங்களையும் ஒரு சதத்தையும் அடித்துள்ளார். 2020ஆம் ஆண்டில் ஐபிஎல் பருவம் மீண்டும் தொடங்கியதில் இருந்து கே.எல்.ராகுல் 18 அரைசதங்களையும் டுப்ளெஸ்ஸிஸ் 13 அரை சதங்களையும் அடித்துள்ளார்கள்.

அடுத்தடுத்து சிக்சரும் ஃபோரும் விளாசிக் கொண்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட் 18வது சுற்றில் 92 ஓட்டங்களில் அவுட்டானார். அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சில் ஃபுல் டாஸில் வந்த பந்தை லாங் ஷாட் அடிக்க முயன்றபோது ஷுப்மன் கில் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். அதைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவையும் அதே சுற்றில் தமிழக வீரரான விஜய் சங்கர் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார்.

இறுதியாக ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த தோனியின் என்ட்ரிக்கு நேரம் வந்தது. தோனி களமிறங்கி அட்டகாசமான சிக்சர் ஒன்றை அடிக்கவே ரசிகர்களின் ஆனந்தக் கூச்சல் அரங்கத்தை அதிர வைத்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் பவுண்டரிக்கு பந்தை தட்டிவிட்டார்.

கடைசியாக களமிறங்கிய தோனி 7 பந்துகளில் 14 ரன்களை அடித்து சென்னையின் ஓட்டத்தை கணக்கை 178 ஆக உயர்த்தினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 மட்டையிலக்கு இழப்புக்கு 178 ரன்களை எடுத்து தனது மட்டையாட்டம்கை நிறைவு செய்தது. அடுத்ததாக குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டையாட்டம் செய்ய உள்ளது.

ருதுராஜ் கெய்க்வாட்

பட மூலாதாரம், ANI

இம்பாக்ட் ப்ளேயர்கள்

இந்த ஐபிஎல் தொடரின் முதல் இம்பாக்ட் ப்ளேயராக துஷார் தேஷ்பாண்டே அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக களமிறங்குகிறார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் முதல் கூட்டணியாக ஷுப்மன் கில், விரித்திமான் சாஹா களமிறங்கியுள்ளனர். 179 ஓட்டங்கள் இலக்கோடு குஜராத் தனது ஆட்டத்தைத் தொடங்கியது.

முதல் ஓவரை வெறும் மூன்று ரன்களோடு குஜராத் தனது பந்துவீச்சு சுற்றுஸை தொடங்கியது. ஆனால், இரண்டாவது ஓவரிலேயே சாஹா இறங்கி ஆடத் தொடங்கினார். தேஷ்பாண்டேவின் பந்துவீச்சில் சாஹா ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்தனர். ஷுப்மன் கில்லும் தன் பங்குக்கு ஒரு ஃபோர் அடித்தார்.

மூன்றாவது ஓவரை தீபக் சஹார் வீசவே அதிலும் சாஹா மீண்டுமொரு சிக்ஸ் அடித்தார். மூன்று ஓவர் முடிவில் குஜராத் அணி மட்டையிலக்கு ஏதும் இழக்காமல் 29 ரன்களை எடுத்திருந்தது. ஆனால், நான்காவது சுற்றில் குஜராத் அணிக்கு அதிர்ச்சியளிக்க வந்த ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் சாஹாவுக்கு ஒரு யார்க்கர் பந்தை வீசினார். நான்காவது சுற்றில், சாஹா தூக்கி அடித்த பந்தை துபே கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார்.

அவரைத் தொடர்ந்து கேன் வில்லியம்சனுக்கு பதிலாக இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கினார் சாய் சுதர்சன். களத்திற்கு வந்தவுடன் ஸ்கொயர் லெக்கில் ஒரு ஃபோர் அடித்து தனது ஓட்டத்தை கணக்கைத் தொடங்கினார். ஐந்தாவது சுற்றில் துஷர் தேஷ்பாண்டேவின் பந்துவீச்சில் கில் ஒரு ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்தார். பவர் ப்ளே முடிவில் குஜராத் அணி ஒரு மட்டையிலக்கு இழப்பிற்கு 65 ரன்களை எடுத்திருந்தது.

பத்தாவது சுற்றில் குஜராத் அணிக்கான அடுத்த மட்டையிலக்கு விழுந்தது. நான்காவது சுற்றில் களமிறங்கிய சாய் சுதர்சன், அதுவரை மூன்று பவுண்டரிகளை அடித்து 17 பந்துகளில் 22 ரன்களை எடுத்திருந்தார். இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கிய அவரது மட்டையிலக்குடை ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் எடுத்துக் கொடுத்துள்ளார். அவரது பந்தில் பின்பக்கமாக வந்த பந்தை கேப்டன் தோனி கேட்ச் பிடித்தார். இது மிகவும் தேவையான மட்டையிலக்குடாகவும் கருதப்பட்டது.

IPL 2023

பட மூலாதாரம், Indian Premier League/Twitter

ஷுப்மன் கில் அதிரடி

அவரைத் தொடர்ந்து முழு ஃபார்மில் இருக்கும் ஹர்திக் பாண்ட்யா ஹர்திக் பாண்ட்யா மட்டையாட்டம் செய்தார். ஷுப்மன் கில் மிக அழகாக ஆட்டத்தைக் கொண்டு சென்றார். தேவையான நேரத்தில் இறங்கி அடித்து பந்தை பவுண்டரிக்கு தட்டிவிடுவதும் சூழ்நிலைக்கு ஏற்ப சிங்கிள்ஸ் ஓடுவதுமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

ஷுப்மன் கில் 11வது சுற்றில் கச்சிதமான சிக்ஸ் ஒன்றை அடித்து குஜராத் அணியின் ஸ்கோர் கணக்கை இரண்டு மட்டையிலக்கு இழப்பிற்கு 106 ஆக உயர்த்தினார். சரியாகக் கணித்து, திட்டமிட்டு அடித்த சிக்ஸ் அது. மிகக் கடினமான சிக்ஸரை அட்டகாசமாக அடித்துக் காட்டினார் கில். 54 பந்துகளில் 74 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்திக் பாண்ட்யா மட்டையாட்டம்கை தொடங்கினார்.

தொடர்ந்து அதே அதிரடியைக் காட்டிய ஷுப்மன் கில், 12வது சுற்றில் 30 பந்துகளில் 50 ரன்களை அடித்து அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

“சென்னை, குஜராத் இரு அணிகளிலும் பார்த்தால், அனுபவம், திறமை ஆகியவற்றில் பெரியளவு வித்தியாசம் உள்ளது. ஆனால், குஜராத் அணிக்கான உத்வேகம் இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டாவிடம் இருந்து கிடைத்துள்ளது களத்தில் பிரதிபலிக்கிறது” என்று வர்ணனையாளர்கள் குஜராத் அணியின் மட்டையாட்டம் குறித்துக் குறிப்பிட்டனர்.

ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே 11 பந்துகளில் 8 ரன்களை அடித்திருந்த ஹர்திக் பாண்ட்யா ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். ஐந்தாவதாக விஜய் சங்கர் களத்தில் இறங்கினார். 13 சுற்றுகள் முடிவில் குஜராத் அணி மூன்று மட்டையிலக்குடுகளை இழந்து 113 ரன்களை எடுத்திருந்தது.

தனது மூன்றாவது ஓவரை வீசுவதற்காக 15வது சுற்றில் துஷார் தேஷ்பாண்டே களமிறங்கினார். 13 பந்துகளில் 30 ரன்களைக் கொடுத்து, இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கிய அவர் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தாமல் இருந்தார். 15வது சுற்றில் சென்னை இருந்த நிலைமைக்கு, ஷுப்மன் கில் மட்டையிலக்குடை எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது.

அவர் தொடர்ச்சியாக ஷார்ட் பால்களை வீசிக்கொண்டிருந்தார். தொடர்ச்சியாக ஆட்டம் குஜராத்தின் கைகளிலேயே இருந்துகொண்டிருந்தது. துல்லியமாகத் திட்டமிட்டு, கச்சிதமாக விளையாடினால் வெற்றி எளிது என்ற நிலையில் இருந்தார்கள். ஆனால், ஷுப்மன் கில்லின் மட்டையிலக்குடை எடுத்துவிட்டால் சென்னையின் தரப்புக்கு ஆட்டம் வந்துவிடக்கூடிய சிறிதளவு வாய்ப்பும் இருந்தது.

தேஷ்பாண்டேவின்மீது அதிக அழுத்தம் இருந்தது. அந்த நேரத்தில் மீண்டுமொரு லாங் ஆன் சிக்ஸ் அடித்து ஷுப்மன் கில் மேலதிக அழுத்தத்தை அவர்மீது திணித்தார். இருந்தும் தனது பந்துவீச்சை அதே ஃபார்மில் தொடர்ந்த துஷார் தேஷ்பாண்டே மிக முக்கியமான மட்டையிலக்குடை சரியான நேரத்தில் எடுத்தார்.

IPL 2023

பட மூலாதாரம், Indian Premier League/Twitter

சென்னையின் நம்பிக்கையை உடைத்த ரஷீத் கான்

அவர் சிக்ஸ் அடித்த பிறகு, அதற்கு அடுத்த பந்திலேயே ஷார்ட் பாலை கில் அடிக்கவே பறந்து சென்ற பந்து ருதுராஜ் கெய்க்வாடின் கைகளில் சென்று அழகாக அமர்ந்தது. 36 பந்துகளில் 63 ரன்களை எடுத்து கில் வெளியேறினார். அடுத்தபடியாக ராகுல் தெவாதியா களமிறங்கினார். இன்னும் ஒரேயொரு மட்டையிலக்குடை எடுத்துவிட்டால், குஜராத் அணியில் மட்டையாட்டம் செய்ய ஆள் இல்லை என்ற நிலை நிலவியது.

15 ஓவர் இறுதியில் நான்கு மட்டையிலக்குடுகளை இழந்து 138 ரன்களை எடுத்திருந்தது குஜராத். களத்தில் விஜய் சங்கர், ராகுல் தெவாதியா ஆடிக் கொண்டிருந்தனர். இப்போதும்கூட ஆட்டத்தை குஜராத் தனது கைகளிலேயே வைத்திருந்தது. கடைசி நான்கு ஓவர் பாக்கியிருந்த நிலையில் குஜராத் 34 ரன்களை எடுக்க வேண்டியிருந்தது.

திபக் சாஹர் 17வது சுற்றில் களமிறங்கி நான்கு ரன்களை கொடுத்திருந்தார். மூன்று சுற்றுகள் பாக்கியிருந்த நிலையில் குஜராத் 149 ரன்களை எடுத்திருந்தது. அடுத்த 18 பந்துகளில் 30 ஓட்டங்கள் இலக்கு என்ற நிலையில் இருந்தது. 10.59 என்ற ரன்ரேட் அந்த அணிக்குத் தேவையாக இருந்தது.

இந்நிலையில், ஹங்கர்கேகர் 18வது சுற்றில் பந்துவீசினார். மிக மிக முக்கியமான ஓவராக கருதப்படும் இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் டாட் பாலாக வீசினார் ஹங்கர்கேகர்.

IPL 2023

பட மூலாதாரம், Indian Premier League/Twitter

மூன்றாவது ஓட்டத்தில் ஒரேயொரு ஓட்டத்தில் கொடுத்து ஓட்டத்தை ரேட்டை 11க்கும் மேல் அதிகரிக்க வைத்து குஜராத் அணிக்கு அழுத்தத்தைக் கொடுத்தார். ஆனால், அதற்கு அடுத்த பந்தில் ஒரு பெரிய சிக்ஸ் அடித்து அந்த சுற்றில் ஏற்பட்ட அழுத்தத்தை அசால்டாக குறைத்தார்.

ஆனால், அவருக்கு ஈடுகொடுத்துப் போராடிய ஹங்கர்கேகர், விஜய் சங்கரின் மட்டையிலக்குடை வீழ்த்தினார். அவருடைய பந்துவீச்சில் விஜய் சங்கர் ஷாட்டை மிட்செல் சான்ட்னர் கேட்ச் பிடித்தார். அவருக்கு அடுத்ததாக ரஷீத் கான் களமிறங்கினார். ஆனால், 10 பந்துகளை எதிர்கொண்டு 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார் ராகுல் தெவாதியா.

இன்னும் இரண்டு ஓவர்களே பாக்கியிருந்தன. 19வது சுற்றில் ஐந்து பந்துகளில் 15 ரன்களை எடுத்துக் காட்டினார் ரஷீத் கான். விஜய் சங்கர் மட்டையிலக்குடை இழந்ததும் வெற்றிக்கான கதவு மூடிவிடவில்லை என்பதைக் காட்டும் விதமாக ரஷீத் கான் களத்தில் சிக்ஸ், ஃபோர் எனப் பறக்கவிட்டுக் கொண்டிருந்தார்.

கடைசி சுற்றில் 8 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் குஜராத் மட்டையாட்டம் செய்துகொண்டிருந்தது. மிக முக்கியமான நேரத்தில் துஷார் தேஷ்பாண்டே வைட் பால் வீசினார். அதுவரைக்கும் பெரிய ரன்களை எடுக்காமல் இருந்த ராகுல் தெவாதியா 20வது சுற்றில் சிக்ஸ் அடித்து சாவகாசமாக ஆட்டத்தை முடிக்க உதவினார்.

இறுதியாக 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »