Press "Enter" to skip to content

தோனி தக்கவைத்த ‘சேப்பாக்கம் வரலாறு’ – CSK vs SRH போட்டியில் அப்படி என்ன நடந்தது?

பட மூலாதாரம், Sportzpics/BCCI

“வரலாறு முக்கியம்” என்பார்கள். அப்படியொரு முக்கியமான வரலாற்றை சிஎஸ்கே அணி தொடர்ந்து தக்கவைத்து வருகிறது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடந்த ஐ.பி.எல். டி20 போட்டியின் 29-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சிஎஸ்கே அணி கிடைத்த இந்த 4வது வெற்றியின் மூலம், 8 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சிஎஸ்கே அணி கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் சென்னையில் தோல்வி அடைந்தநிலையில், இந்த போட்டிக்காக முழுமையாகத் தயாராகி வந்திருந்தது என்பது பந்துவீச்சு, பீல்டிங், மட்டையாட்டம்கில் தெளிவாகத் தெரிந்தது.

அதிலும் கேப்டன் மகேந்திரசிங் தோனி, ஒவ்வொரு ஓவருக்கும் களத்தில் வீரர்களை மாற்றுவது, சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன் பவுண்டரி, சிக்ஸர் அடித்துவிட்டால் உடனடியாக பீல்டிங்கை மாற்றுவது, ஒவ்வொரு பேட்ஸ்மேனின் பலவீனத்தை அறிந்து பந்துவீச்சாளர்களை மாற்றி, பீல்டிங்கையும் மாற்றுவது என கச்சிதமாக செய்தார்.

அதிலும் சென்னை சேப்பாக்கம் மைதானம், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும், மெதுவாக பந்துவீசும் வீரர்களுக்கு ஒத்துழைக்கும் என்பதால், ஜடேஜா, தீக்சனா, மொயின் அலிக்கு இன்றைய ஆட்டத்தில் அதிக முக்கியத்தை தோனி அளித்தார். அதற்கு ஏற்ற பலனும் கிடைத்தது.

வரலாறு சிஎஸ்கே பக்கம்

சென்னை சேப்பாக்கத்தில் விளையாடும்போதெல்லாம், சன்ரைசர்ஸ் அணிக்கு சிஎஸ்கே அணி சிம்மசொப்னமாகவே இருந்துள்ளது. இதுவரை சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை சன்ரைசர்ஸ் வீழ்த்தியது இல்லை என்ற வரலாற்றை சிஎஸ்கே இந்தப் போட்டியில் தக்கவைத்தது.

அது மட்டுமல்லாமல் சென்னையில் விளையாடும் மற்ற அணிகள் பெரும்பாலும் சிஎஸ்கேவிடம் திணறத்தான் செய்துள்ளன. விதிவிலக்காக சில போட்டிகளில் வென்றுள்ளன. அந்த வகையில் பார்த்தால், சென்னையில் நடந்த 23 ஆட்டங்களில் சிஎஸ்கே அணி 19 போட்டிகளில் வென்று, சூப்பர் கிங்ஸாக வலம் வருகிறது.

டாஸ்வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 மட்டையிலக்கு இழப்புக்கு 134 ஓட்டங்கள் சேர்த்தது. 135 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி, 8 பந்துகள் மீதமிருக்கையில் 3 மட்டையிலக்கு இழப்புக்கு 138 ஓட்டங்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

ரசிகர்களின் மகிழ்ச்சியும், சோகமும்

சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியும், மறுபுறம் சோகமும் இன்றைய ஆட்டத்தின் முடிவில் கிடைத்தது. மகிழ்ச்சிக்குக் காரணம், கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் தோற்ற சிஎஸ்கே இன்று வெற்றி பெற்றதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

சோகத்துக்கு காரணம், ரசிகர்களின் நாயகன் தல தோனி பேட் செய்வதைப் பார்க்க முடியவில்லையே என்பதால் வருத்தத்தோடு மைதானத்தை விட்டு வெளியேறினர்.

தோனி தக்கவைத்த 'சேப்பாக்கம் வரலாறு'

பட மூலாதாரம், Sportzpics/BCCI

ஜடேஜா, கான்வே அதிரடிகள்

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கியக் காரணமாகும். அதிலும் ரவிந்திர ஜடேஜா 4 சுற்றுகள் வீசி 8 டாட் பந்துகளுடன் 22 ஓட்டங்கள் கொடுத்து 3 மட்டையிலக்குடுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.

மட்டையாட்டம்கில் டேவிட் கான்வே 57 பந்துகளில் 77 ரன்களுடன்(12பவுண்டரி, ஒரு சிக்ஸர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கான்வே இந்த பருவத்தில் அடிக்கும் 3வது அரைசதம் இதுவாகும். கான்வேயின் அர்ப்பணிப்பு மட்டையாட்டம் சேஸிங்கை எளிமையாக்கியது.

கடைசிவரை இழுவை எதற்கு?

134 ரன்களை சிஎஸ்கே அணி எளிதாக, குறைந்த ஓவர்களில் சேஸிங் செய்து நிகர ரன்ரேட்டை உயர்த்தி இருக்கலாம். 134 ரன்களை சேஸிங் செய்ய 18 சுற்றுகள் வரை இழுத்திருக்க வேண்டியது இல்லை. ஒருவேளை சிஎஸ்கே அணி 12 ஓவர்களுக்குள் இந்த ஸ்கோரை சேஸிங் செய்திருந்தால், நிகர ரன்ரேட்டில் உயர்ந்திருக்கும். ஆனால், சிஎஸ்கே அணி ரன்ரேட்டைப் பற்றி கவலைப்பட்டதுபோல் தெரியவில்லை.

வெற்றி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி கூறுகையில் “ இது எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிக் கட்டம் என்று பலரும் கூறினார்கள். எவ்வளவுநாள் முடியுமோ நான் விளையாடுவேன். 2 ஆண்டுகளுக்குப்பின் ரசிகர்கள் மைதானத்துக்கு வந்து போட்டியை பார்த்து, ரசித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்கள் எங்கள் மீது அதிகமான அன்பையும், பாசத்தையும் அளிக்கிறார்கள்.

மட்டையாட்டம் செய்ய போதுமான வாய்ப்புகள் இல்லை. பனிப்பொழிவு இல்லை என்பதால், நாங்கள் 2ஆவது பேட் செய்யத் தயங்கினேன். பனிபொழிவுக்கான வாய்ப்பு இருக்கும்போதுதான், 2ஆவது பேட் செய்ய வேண்டும். சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசினர், நல்ல லைன் லென்த்தின் வீசினர். குறிப்பாக பதிரனா சூப்பராக பந்துவீசினார்” எனத் தெரிவித்தார்.

தோனி தக்கவைத்த 'சேப்பாக்கம் வரலாறு'

பட மூலாதாரம், Sportzpics/BCCI

கிளாசனிடம் கொந்தளித்த ஜடேஜா

இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே பந்துவீச்சாளர் ரவிந்திர ஜடேஜாவுக்கும், சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன் கிளாசனுக்கும் இடையே சிறிய உரசல் ஏற்பட்டது. ஜடேஜா வீசிய 14-வது ஓவரின் முதல் பந்தை மயங்க் அகர்வால் எதிர்கொண்டார். நான்-ஸ்ட்ரைக்கர் பகுதியில் கிளாசன் இருந்தார்.

மயங்க் அகர்வால் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க ஜடேஜா முயன்றபோது, கிளாசன் குறுக்கே வந்தபோது ஜடேஜா கேட்ச்பிடிக்க முடியாமல்போனது. இதனால், ஜடேஜா உடனே கோபப்பட்டு கிளாசனிடம் பேச, இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. அங்கிருந்த நடுவர் இருவரையும் சமாதானப்படுத்தினார். அந்த ஓவர் முடிந்தபின்பும் இருவரும் மோதிக்கொண்டாலும், சிஎஸ்கே வீரர்களும், கேப்டன் தோனியும் ஜடேஜாவை சமாதானம் செய்தனர்.

தோனியின் முத்திரை

சிஎஸ்கே-யின் வெற்றியின் தோனியின் பங்களிப்பு இல்லாமலா இருக்கும். இந்த ஆட்டத்தில் தோனி பிடித்த கேட்ச், அகர்வாலுக்கு செய்த மின்னல் வேக ஸ்டெம்பிங் அற்புதமானவை. அதிலும் தீக்சனா வீசிய பந்தில் மார்க்ரம் பேட்டில் எட்ஜ் எடுத்துவந்த பந்தை கச்சிதமாக தோனி பிடித்தார்.

2ஆவதாக ஜடேஜா வீசிய 14வது சுற்றில் மயங்க் அகர்வால் இறங்கி அடிக்க முற்பட்டபோது, மின்னல் வேகத்தில் தோனி ஸ்டெம்பிங் செய்தது அவரின் தனித்திறமையைக் காட்டியது. இதன் மூலம் அதிகமான,அதாவது 280 கேட்சுகளைப் பிடித்த முதல் மட்டையிலக்கு கீப்பர் எனும் பெருமையை தோனி பெற்றுள்ளார்.

தனக்குத்தானே குழிபறித்த மாற்றங்கள்

தோனி தக்கவைத்த 'சேப்பாக்கம் வரலாறு'

பட மூலாதாரம், Sportzpics/BCCI

நன்றாக இருந்த அணியில் பரிசோதனை முயற்சி என்ற பெயரில் பேட்ஸ்மேன்களை மேல்வரிசை, கீழ்வரிசை எனப் பந்தாடியது சன்ரைசர்ஸ் வீரர்களின் நிலைத்தன்மையைக் குலைத்துவிட்டது.

இந்த பருவம் தொடங்கும்போது, அபிஷேக், மயங்க் அகர்வால் ஓபனிங் செய்தனர், ப்ரூக் நடுவரிசையில் களமிறங்கினார். அடுத்தப் போட்டியில் அபிஷேக் நீக்கப்பட்டார். ப்ரூக், அகர்வால் ஓபனிங் செய்ய வைத்தனர். பின்னர், அபிஷேக் அணிக்குள் வரவழைக்கப்பட்டு நடுவரிசையில் களமிறக்கப்பட்டார். இப்போது அபிஷேக்கை ஓபனிங் செய்யவைத்து, 6வது வரிசைக்கு அகர்வாலை தள்ளவிட்டனர். இதுபோன்ற பரிசோதனை முயற்சி நிச்சயமாக பேட்ஸ்மேன்களின் நிலைத்தன்மையைக் குலைத்துவிடும்.

அகர்வால் தனது 6 பந்துவீச்சு சுற்றுஸில் 3வது முறையாக ஒற்றை இலக்க ஓட்டத்தில் வெளியேறியுள்ளார். ப்ளே-ஆஃப் சுற்றுக்கு செல்லத் தேவையில்லை என முடிவு எடுத்து சன்ரைசர்ஸ் விளையாடினால் யாரால் தடுக்க முடியும்.

134 ரன்களை சேர்த்துக்கொண்டு, சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பதுபோன்று சிஎஸ்கே அணியை டிபெண்ட் செய்வது நிச்சயமாக இயலாது என்பதை முதல் சுற்று முடிந்தபோதே அந்த அணிக்குத் தெரிந்திருக்கும்.

சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஹேரி ப்ரூக்(18), அபிஷேக் சர்மா(34), திரிபாதி(21) ஆகியோரைத் தவிர பெரிதாக எந்த பேட்ஸ்மேனும் ஸ்கோர் செய்யாததே குறைவான ஸ்கோர் எடுத்தமைக்கு காரணமாகும்.

சன்ரைசர்ஸ் கேப்டன் மார்க்ரம் கூறுகையில் “ வேதனையாக இருக்கிறது. மட்டையாட்டம்கில் சிறப்பாகச் செயல்படவில்லை, நல்ல பார்ட்னர்ஷிப்பும் அமையவில்லை. 130 ரன்களைவைத்து டிபெண்ட் செய்வது கடினம்தான், 160 ரன்களையாவது எட்டியிருக்கவேண்டும்.

நல்ல பார்ட்னர்ஷிப் அமையாவிட்டால், அணியை முன்னெடுத்துச் செல்வது கடினம். சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் நடுப்பகுதியில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். சிஎஸ்கே சுழற்பந்துவீச்சாளர்கள் துருப்புச்சீட்டாக இருப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் சரியாகத் திட்டமிட்டார்கள், எங்களிடம் இல்லை. எங்களுக்கு வெற்றிகள் தேவை, மட்டையாட்டம்கிலும் வலிமையாக மாற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

7 ஓவர்களில் ஓட்டத்தை அடிக்காத சன்ரைசர்ஸ்

சிஎஸ்கே அணியில் இருந்ததைப் போல் சன்ரைசர்ஸ் அணியிலும் மயங்க் மார்க்கண்டே, வாஷிங்டன் சுந்தர், டாகர் என 3 சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரன்களை கட்டுப்படுத்தினார்களேத் தவிர சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு எந்தவிதத்திலும் நெருக்கடி ஏற்படுத்தவில்லை.

சன்ரைசர்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் மட்டும் இந்த ஆட்டத்தில் 42 டாட் பந்துகளை விட்டுள்ளனர். அதாவது 7 ஓவர்களுக்கு ரன்களே அடிக்கவில்லை எனலாம். மற்ற 13 ஓவர்களில்தான் இந்த 134 ரன்களைச் சேர்த்துள்ளனர்.

இதில் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் சேர்ந்து மொத்தம் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்துள்ளனர். டி20 போட்டி என்றால் அதிரடி, சரவெடி, மின்னல் வேக ரன்குவிப்பு என்று இருக்க வேண்டும். டி20 போட்டி தாத்பரியம் தெரியாமல் சோதனை போட்டியில் விளையாடுவது போன்று சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் விளையாடியுள்ளனர்.

தோனி தக்கவைத்த 'சேப்பாக்கம் வரலாறு'

பட மூலாதாரம், Sportzpics/BCCI

இரு துருவங்கள் சேர்ந்த தருணம்

ப்ரூக்குடன் சேர்ந்து அபிஷேக் சர்மா களமிறக்கி பெரிதாக மாற்றம் எதையும் சன்ரைசர்ஸ் காணவில்லை. இதில் ஸ்வாரஸ்யம் என்னவென்றால், “ 2017ம் ஆண்டு 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக அபிஷேக் சர்மாவும், இங்கிலாந்து கேப்டனாக ஹேரி ப்ரூக்கும் இருந்தனர். இருவரும் எதிரணி கேப்டன்களாக விளையாடிய நிலையில் ஐ.பி.எல். தொடர் இருவரையும் ஒரே அணியில் ஒருங்கிணைத்து இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள்.”

சேப்பாக்கத்தைப் பற்றி தெரியுமா?

சேப்பாக்கம்

பட மூலாதாரம், SPORTSPICS/BCCI

அதுமட்டுமல்லாமல் சன்ரைசர்ஸ் அணியினர் சென்னை சேப்பாக்கம் அணியின் தன்மையை முழுமையாக அறியாமல் களமிறங்கினார்களா என்பது பெரிய கேள்வியை எழுப்புகிறது. வேகம் குறைவாக, மந்தமான ஆடுகளமான சேப்பாக்கத்தில் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் தயாராகவில்லை என்பது மட்டையாட்டம் செய்ததில் இருந்தே தெரிந்துவிட்டது.

சேப்பாக்கம் ஆடுகளம் மிதவேகப்பந்துவீச்சாளர்களுக்கும், ஸ்லோபாலில் ஸ்விங் செய்பவர்களுக்கும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கும்தான் அதிகமாக ஒத்துழைக்கும். சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கு முக்கியத்துவம் தராமல் வீரர்களைத் தேர்ந்தெடுத்ததற்கு விலை கொடுத்துவிட்டது.

சுழற்பந்துவீச்சில் பலவீனம்

குறிப்பாக ஹேரி ப்ரூக்ஸ் வேகப்பந்துவீச்சை சமாளித்து ஆடுவதில் கை தேர்ந்தவர். ஆனால், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவரின் ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் குறைவாக இருக்கிறது. இதைத் தெரிந்துதான் சன்ரைசர்ஸ் அணி அவரை தொடக்க வீரராக களமிறக்கியதா.

இந்த பருவத்தில் சன்ரைசர்ஸ் அணி பவர்ப்ளேயில் மிகவும் குறைவான ஸ்கோர் எடுத்த அணியாக இருப்பதை தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. சன்ரைசர்ஸ் அணி சுழற்பந்துவீச்சுக்கு எதிராக மோசமான ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளது. இப்படி மோசமான ரெக்அட்டை வைத்திருக்கும் சன்ரைசர்ஸ் சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு திறமையாக ஆடும் பேட்ஸ்மேன்களை எடுத்ததாகத் தெரியவில்லை.

தோனி தக்கவைத்த 'சேப்பாக்கம் வரலாறு'

பட மூலாதாரம், Sportzpics/BCCI

கட்டம் கட்டிய சிஎஸ்கே

சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் சுழற்பந்துவீச்சாளர்களை சமாளித்து விளையாடத் திணறுவார்கள் என்பதை அறிந்து சிஎஸ்கே அணி, கேப்டன் தோனி அந்த அணியை கட்டம்கட்டி தூக்கிவிட்டார்.

ரவிந்திர ஜடேஜா, தீக்சனா, மொயின் அலி ஆகியோரைப் பயன்படுத்தி தொடக்கத்தில் இருந்தே நெருக்கடி கொடுத்தது. அதற்கு ஏற்றார்போல், ரவிந்திர ஜடேஜா முதல் ஓவரிலே அபிஷேக் சர்மா மட்டையிலக்குடை வீழ்த்தினார். அதன்பின் அவரின் 2வது சுற்றில் ராகுல் திரிபாதி மட்டையிலக்குடையும், கடைசி சுற்றில் மயங்க் அகர்வால் மட்டையிலக்குடையும் ஜடேஜா சாய்த்தார்.

சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்களான ராகுல் திரிபாதி(21), மயங்க் அகர்வால்(2), அபிஷேக் சர்மா(34) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர்.

சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் பிரையன் லாரா கூறுகையில் “ சன்ரைசர்ஸ் அணிக்கு பிரத்தியேகமாக ஆட்டத்தை முடிக்கும் ஃபினிஷர் பேட்ஸ்மேன் தேவைப்படுகிறார்.

6வது இடத்தில் களமிறங்கும் கிளாசன் விரைவாக ஆட்டமிழந்துவிடுகிறார். அவர் நீண்டநேரம் நிலைத்து பேட் செய்தால், சிஎஸ்கே அணியின் அனுபவமற்ற டெத்ஓவர்களை எளிதாக சமாளித்து ஆட முடியும்” எனத் தெரிவித்திருந்ததையும் கவனிக்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »