Press "Enter" to skip to content

புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ராஜஸ்தானை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்: அசத்தல் ஃபார்மில் டூப்ளசிஸ்

பட மூலாதாரம், Getty Images

கிரிக்கெட்டில் சென்டிமென்ட் வெகுவாகப் பார்க்கப்படும் என்பது விளையாடும் வீரர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஒரு வீரர் ஒரு பேட்டில் சதம் அடித்துவிட்டால் அந்த பேட்டின் மீது இனம்புரியாத சென்டிமெண்ட் இருக்கும்.

உதாரணமாக, 1983ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி கேப்டன் கபில்தேவ் 175 ஓட்டங்கள் விளாசியது நினைவிருக்கும். அந்தப் போட்டியில் களத்தில் இருந்து பார்த்த இந்திய வீரர்கள் போட்டி முடியும்வரை தாங்கள் அமர்ந்திருந்த இடத்தைவிட்டுக்கூட நகரவில்லை என முன்னாள் வீரர்கள் கூறியுள்ளனர். ஒருவேளை நகர்ந்தால் கபில்தேவ் ஆட்டமிழந்துவிடலாம் என்ற சென்டிமென்டால் நகராமல் போட்டியைப் பார்த்தார்கள் என்று பலபேட்டிகளில் தெரிவித்துள்ளனர்.

அந்த அளவுக்கு கிரிக்கெட்டில் சென்டிமென்ட் பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டத்திலும் ஏப்ரல் 23-ம் தேதி, பச்சை நிற ஜெர்ஸி ஆகியவை ஆர்பிசி அணிக்கும், விராட் கோலிக்கும் பெரிய சென்டிமெண்ட்டை உருவாக்கியது. இந்த சென்டிமென்ட் பொய்த்ததா என்பதை பார்க்கலாம்.

பெங்களூருவில் இன்று நடந்த ஐ.பி.எல். டி20 போட்டியின் 32-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்த பருவத்தில் 3வது வெற்றியை சொந்தமண்ணில் பெற்றுள்ளது.

நிகர ரன்ரேட் அவசியம்

இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது. ஆர்சிபி அணியின் நிகர ரன்ரேட் இன்னும் மைனஸில் இருப்பதால்தான் 5வது இடத்தில் இருக்கிறது. அடுத்துவரும் போட்டிகளில் மிகப்பெரிய வெற்றியை ருசித்தால் நிச்சயமாக நிகர ரன்ரேட்டில் முன்னேற வாய்ப்பு உண்டு.

ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. 7 போட்டிகளில் 3 தோல்வி, 4 வெற்றிகளுடன் 8புள்ளிகளுடன் நிகர ரன்ரேட் உயர்வால் முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்தடுத்த தோல்விகளால் நிகரரன்ரேட்டும் குறைந்துவருவது, ராஜஸ்தான் அணிக்கு நெருக்கடியை அளிக்கும். ஆதலால், அடுத்துவரும் ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றிக்கு திட்டமிடும்.

சொந்த மண்ணில் 3வது வெற்றி

IPL

பட மூலாதாரம், Getty Images

ஆர்சிபி அணியின் அதிரடி பேட்ஸ்மேன், நடுவரிசையின் முதுகெலும்பு கிளென் மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 77 ஓட்டங்கள் விளாசி ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்ததால் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ஆர்சிபி அணியின் வெற்றிக்கு டூப்பிளசிஸ், மேக்ஸ்வெல் இருவரின் மட்டையாட்டம் முக்கியக் காரணம். இருவரும் சேர்ந்து 3வது மட்டையிலக்குடுக்கு 127 ஓட்டங்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

ஆர்சிபி அணி 189 ரன்களைச் சேர்த்து அதை அருமையாக டிபெண்ட் செய்துவிட்டது. சிறியதான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இதுபோன்ற ஸ்கோர் போதாது என்றபோதிலும் அதை டிபெண்ட் செய்தமைக்கு பந்துவீச்சாளர்களே காரணம்.

2023 ஐ.பி.எல். பருவத்தில், ஆர்சிபி அணி 3வது முறையாக தனது ஸ்கோரை டிபெண்ட் செய்து வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

“பட்லரும் டக்அவுட்டும்”

குறிப்பாக இளம் வேகப்புயல் முகமது சிராஜ் தனது முதல் ஓவரிலேயே ஜாஸ் பட்லரை அருமையான ஸ்விங் சீமரில் க்ளீன் போல்ட் செய்து அதிர்ச்சி அளித்தார். இந்த அதிர்ச்சியிலிருந்து ராஜஸ்தான் அணி மீள நீண்டநேரமாகியது. ஆபத்தான பேட்ஸ்மேனான பட்லரை வீழ்த்தியதே ஆர்சிபிக்கு வெற்றிகரமான தொடக்கமாக அமைந்தது.

ஜாஸ் பட்லர் குறித்து இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். ஐ.பி.எல். தொடரில் அறிமுகமாகியபோது பட்லர் டக்அவுட் ஆகினார், அதன்பின் 84 பந்துவீச்சு சுற்றுஸில் ஒருமுறைகூட டக்அவுட் ஆகியதில்லை. கடந்த 3 பந்துவீச்சு சுற்றுஸில் 2வது முறையாக இன்று டக்அவுட்டில் பட்லர் வெளியேறினார் என்பது ஸ்வரஸ்யமான தகவல்.

டி.கே. உங்களுக்கு என்னாச்சு!

இவர்கள் இருவரைத் தவிர அணியில் வேறு எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. குறிப்பாக தினேஷ் கார்த்திக் மீண்டும் சொதப்பலாக பேட் செய்தார். கடந்த இரு பருவம்களிலும் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக ஆடிய தினேஷ் இந்த முறை தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார்.

அதிலும் இன்றைய ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தது கொடுமையானது. சந்தீப் வீசிய 20வது சுற்றில் ஆஃப் சைடில் விலக்கி வீசப்பட்ட பந்தை அதன்போக்கில் தட்டிவிடாமல், அதை லெக் சைடில் மடக்கி அடித்து லாங்-ஆனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அனுபவமிக்க டி.கே.விடம் இருந்து மோசமான ஷாட் தேர்வாக இருந்தது.

38 வயதிலும் மிரட்டல் ஃபார்ம்

ஆனால், அணிக்கு தூணாக இருந்த, டூப்பிளசிஸ் 39 பந்துகளில் 62 ஓட்டங்கள் சேர்த்தும், மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 77 ஓட்டங்கள் சேர்த்தும்(4சிக்ஸர்கள்,6பவுண்டரிகள்) ஆட்டமிழந்தனர். இந்த ஐபிஎல். பருவத்தில் டூப்பிளசிஸ் 7 போட்டிகளில் அடிக்கும் 5வது அரைசதம் இதுவாகும்.

38வயதிலும் மிரட்டலான ஃபார்மில் இருக்கும் டூப்பிளசிஸ் இந்த பருவத்தில் 400 ரன்களை எட்டியுள்ளார். இதுவரை எந்த பேட்ஸ்மேனும் 300 ரன்களை எட்டாதநிலையில் டூப்பிளசிஸ் ஓட்டத்தை மெஷினாக மாறியுள்ளார்.

மேக்ஸ்வெலின் தரமான சம்பவம்

ஆர்சிபி அணி, மேக்ஸ்வெலை ரூ.11 கோடிக்கு வாங்கி, அவரைத் தக்கவைத்ததில் இருந்து அவர் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாகவே செய்து வருகிறார். ஆர்சிபி அணியின் நடுவரிசை மட்டையாட்டம்கிற்கு முதுகெலும்பாக இருக்கும் மேக்ஸ்வெல், கடந்த 2021ம் ஆண்டு பருவத்தில் இருந்து 1,000 ரன்களை குவித்துள்ளார். 2021 பருவத்தில் 513 ஓட்டங்கள்(42.75சராசரி),2022 பருவத்தில் 301ரன்கள்(27சராசரி), 2023 பருவத்தில் 210 ரன்களுடன் மேக்ஸ்வெல் விளையாடி வருகிறார்.

முதுகெலும்பில்லாத நடுவரிசை

IPL

பட மூலாதாரம், Getty Images

இந்த ஆட்டத்தில் இருவரும் சேர்ந்து அடித்த ஓட்டங்கள்தான் ஸ்கோர் உயர முக்கியக் காரணமாகும். இருவரும் ஆட்டமிழந்தசென்றபின் ஆர்சிபி ரன்ரேட் வேகமாகச் சரி்ந்தது. ஆர்சிபி அணி கடைசி 6 ஓவர்களில் 41 ரன்களுக்கு 7 மட்டையிலக்குடுகளை இழந்தது வேதனைக்குரியது.

மேக்ஸ்வெல், டூப்பிளசிஸ், விராட் கோலி ஆகிய 3 பேர் மட்டுமே ஆர்சிபி அணியின் மட்டையாட்டம் வரிசைக்கு முதுகெலும்பாகத் திகழ்ந்து வருகிறார்கள். இந்த 3 பேட்ஸ்மேனக்ளில் இருவர் களத்தில் நின்றால்தான் பெரிய ஸ்கோரை எட்ட முடிகிறது, வெற்றியும் பெற முடிகிறது. இவர்கள் 3 பேரும் சொதப்பும்பட்சத்தில் ஆர்சிபியின் நடுவரிசை முதுகெலும்பு இல்லாத அணியாக மாறிவிடுகிறது. நடுவரிசை மிகவும் வலுவிழந்தநிலையில்தான் இருக்கிறது.

விராட் கோலியைப் பொறுத்தவரை 2வது போட்டிக்கு கேப்டனாக செயல்பட்டார். ஆனால், பச்சைநிற ஜெர்ஸிக்கும் கோலிக்கும், ஆர்சிபிக்கும் ஆகவே ஆகாது போலிக்கிறது. விராட் கோலி பச்சை ஜெர்ஸியை ஆர்சிபிக்காக அணிந்து தொடர்ந்து 2வது முறையாக டக்அவுட்டில் வெளியேறினார்.

ஏப்ரல் 23ஆம் தேதியும் கோலியும்

அதிலும், ஐ.பி.எல். டி20 தொடரில் விராட் கோலி இன்று கோல்டன் டக்கில் ஆட்டமிழந்ததைச் சேர்த்து 7வது முறையாக ஆட்டமிழந்தார். டிரன்ட் போல்ட் வீசிய முதல்ஓவர், முதல்பந்தில் கால்காப்பில் வாங்கி கோலி வெளியேறினார்.

7 முறை கோல்டன் டக்கில் ஆட்டமிழந்த கோலி, அதில் 3 முறை ஏப்ரல் 23-ம் தேதி நடந்த போட்டியில் ஆட்டமிழந்துள்ளார் என்பது சற்றே வியப்புக்குரியதுதான்.

2017, ஏப்ரல் 23-ம் தேதி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிராகவும், 2022,ஏப்ரல் 23ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராகவும் கோலி கோல்டன் டக்கில் ஆட்டமிழந்தார் என்பது ஸ்வரஸ்யம்.

பச்சை சென்டிமெண்ட்

கடந்த 2011ம் ஆண்டிலிருந்து பச்சை நிற ஜெர்ஸியை ஆர்சிபி அணி அணிந்து விளையாடி வருகிறது. இந்த பச்சை நிற ஜெர்ஸி அணிந்து, 12 முறை(இன்றையபோட்டி) ஆர்சிபி அணி விளையாடியுள்ளது.

இதில் இதுவரை 2011, 2016, 2022 ஆகிய ஆண்டுகளில் நடந்த போட்டியில் மட்டுமே வென்றது, இன்று 4-வது முறையாக வென்றுள்ளது. ஆனாலும், 12 முறை பச்சை நிற ஜெர்ஸியை அணிந்து ஆர்சிபி களமிறங்கி வெறும் 4 வெற்றிகளை மட்டுமே ருசித்துள்ளதால், பச்சை சென்டிமெண்ட் பொய்க்கவில்லை என்றே தெரிகிறது.

ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்கள்தான் தங்கள் கடமையை சரியாகச் செய்ததால்தான் இந்த ஸ்கோரை டிபெண்ட் செய்து வெற்றி பெறவைக்க முடிந்தது. குறிப்பாக, 11வது சுற்றில் இருந்து 14வது ஓவரை ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டனர். ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் நெருக்கடியாகப் பந்துவீசினர்.

IPL

பட மூலாதாரம், Getty Images

சபாஷ் பந்துவீச்சாளர்கள்

இந்த 4 ஓவர்களில் பவுண்டரி ஏதும் அடிக்காமல் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் பயணித்ததுதான், கடைசி நேரத்தில் பெரிய நெருக்கடியில் தள்ளியது. இதுபோன்ற பெரிய ஸ்கோரை சேஸிங் செய்யும்போது, ஓவருக்கு ஒரு பவுண்டரி குறைந்தபட்சம் எடுப்பது அவசியமாகும்.

ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் இன்று மொத்தமாக 39 டாட் பந்துகளை அதாவது, 6 ஓவர்களில் ஓட்டத்தை ஏதும் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை அடிக்கவிடாமல் ஆட்டத்தை தங்கள் பக்கம் இழுத்துப் பிடித்ததுதான் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

டேவிட் வில்லே, ஹர்சல் படேல், ஹசரங்கா ஆகியோர் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். கடைசி சுற்றில் ஹர்சல் படேல் பவுண்டரி வழங்கினாலும் அதன்பின் துல்லியமாகப் பந்துவீசி அஸ்வின் மட்டையிலக்குடை சாய்த்து வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

ஆர்சிபி வெற்றிக்கு, மேக்ஸ்வெல், டூப்பிளசிஸ், ஹர்சல் படேல், சிராஜ் ஆகியோர் முக்கியமான பங்களிப்பு செய்தார்கள்.

தோல்விக்கான காரணங்களும், கேள்விகளும்

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை பேட்ஸ்மேன்களின் தோல்வி என்றுதான் குறிப்பிட முடியும். தொடக்கத்திலே பட்லர் ஆட்டமிழந்தநிலையில் 2வது மட்டையிலக்குடுக்கு ஜெய்ஸ்வால், படிக்கல் ஜோடி 98 ஓட்டங்கள் பாட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர்.

ஆனால், இதை பின்வரிசையில் வந்த பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தத் தவறிவிட்டனர். குறிப்பாக கேப்டன் சஞ்சு சாம்ஸன், இந்த பருவத்தில் மோசமான ஃபார்மில் உள்ளார், 7 போட்டிகளில் ஆடிய சாம்ஸன் 2 அரைசதங்களுடன் 181 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்துள்ளார். கேப்டனாக இருக்கும் சாம்ஸன், அடுத்தடுத்துமட்டையிலக்குடுகள் விழாமல் அணியை வழிநடத்தியிருக்க வேண்டும்.

ஆனால், மோசமான ஷாட்டை ஆடி சாம்ஸன் 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். கடைசி 10 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிக்கு 98 ஓட்டங்கள் தேவைப்பட்டது. நிச்சயமாக இது சேஸிங் செய்யபடக்கூடிய ஸ்கோர்தான். ஆனாலும் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டம் ராஜஸ்தான் வெற்றியைக் கோட்டைவிட்டது.

பெரிய ஷாட்களை அடிக்கக்கூடிய சிம்ரன் ஹெட்மயர் களத்தில் இருந்தபோது, ராஜஸ்தான் வெற்றிக்கு 28 பந்துகளில் 65 ஓட்டங்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக ஓட்டத்தை அவுட் ஆகியது ஆர்சிபி அணியை வெற்றிக்கு அருகே அழுத்துச் சென்றது.

IPL

பட மூலாதாரம், Getty Images

ஹோல்டருக்கு ஏன் வாய்ப்பில்லை

ராஜஸ்தான் தோல்விக்கான காரணங்களை பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம். ரவிச்சந்திர அஸ்வின் டி20க்கு ஏற்ற பேட்ஸ்மேன் கிடையாது. 12 பந்துகளில் வெற்றிக்கு 33 ஓட்டங்கள் தேவைப்பட்டநிலையில் அஸ்வினை களமிறக்கியதற்கு பதிலாக ஹோல்டரை களமிறக்காதது ஏன் எனத் தெரியவில்லை. அஸ்வினைவிட, பெரிய ஷாட்களை ஹோல்டரால் அடிக்கமுடியும், பலமுறை மே.இ.தீவுகள் அணியை இதுபோன்ற நேரத்தில் வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அது மட்டுமல்லாமல் அஸ்வின் ஆட்டமிழந்தபின்புகூட ஹோல்டரைக் களமிறக்காமல், அறிமுக வீரர், அனுபவமில்லாத இம்பாக்ட் வீரர் அப்துல் பாசித்தை ஏன் களமிறக்கினார்கள் எனத் தெரியவில்லை.

ராஜஸ்தானின் தோல்விக்கு காரணம்

அது மட்டுமல்லாமல் ஜூரேல் 19வது ஓவரின் கடைசிப் பந்தில் 2 ஓட்டங்கள் அடித்திருக்க வேண்டியதில்லை ஒரு ஓட்டத்தை எடுத்து ஸ்ட்ரைக்கை தக்கவைத்திருக்க வேண்டும். ஏனென்றால் செட்டில் பேட்ஸ்மேன் ஜூரேல், அவர் கடைசி ஓவரை எதிர்கொண்டால் பெரிய ஷாட்களை அடிக்க முடியும்.

ஆனால், 19வது ஓவரின் கடைசிப்பந்தில் 2 ஓட்டங்கள் சேர்த்து அஸ்வினுக்கு ஸ்ட்ரைக் கொடுத்தது ராஜஸ்தான் அணியின் தற்கொலை முடிவாகவே பார்க்கப்படுகிறது. ஏன் அஸ்வினுக்கு ஸ்ட்ரைக் கொடுக்கப்பட்டது என்ற கேள்வியும் எழுகிறது.

கடைசி சுற்றில் அதிர்ஷ்டவசமாக அஸ்வின் 2 பவுண்டரிகளை ஹர்சல் படேல் சுற்றில் அடித்தாலும், ஸ்லோவர் பந்தை அவரால் எதிர்கொள்ள முடியாமல் ஆட்டமிழந்தார்.

3 பந்துகளில் 10 ஓட்டங்கள் தேவை என்றரீதியில் இருந்தபோதுகூட ஹோல்டரை களமிறக்காதது ராஜஸ்தான் தோல்விக்கு மிகப்பெரிய காரணமாகும்.

என்ன சொல்கிறார் சாம்ஸன்

தோல்வி குறித்து ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்ஸன் கூறுகையில் “ இந்த மைதானத்தில் இதுபோன்ற ஸ்கோர் சேஸிங் செய்யக்கூடியதுதான். நாங்கள் இன்னும் கூடுதலாக பவுண்டரி, சிக்ஸர்களை அடித்திருக்க வேண்டும். வழக்கமாக ஹெட்மெயர் அதிரடி ஆட்டம் ஆடுவார், இன்று ஜூரேல் அந்தப் பணியைச் செய்தார். பெரிய ஷாட்களை ஆடுவது என்பது, யார் பந்துவீசுகிறார்கள், சூழல் என்ன, சேஸிங் செய்யக்கூடிய இலக்கா என்பதைப் பொறுத்து இருக்கிறது.

அஸ்வின் தனது அனுபவத்தை கடந்த இரு ஆட்டத்திலும் வெளிப்படுத்தினார். ஐபிஎல் போட்டியில் வெற்றியும், தோல்வியும் சிறிய ஓட்டங்கள் வித்தியாசத்தில் நடக்கிறது. எங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »