Press "Enter" to skip to content

ப்ரியங்கா சோப்ரா மறைக்காமல் இருப்பதே அழகு: பிரபல நடிகை

Samayam Tamil | Updated:

கிராமி விருது விழாவுக்கு படுகவர்ச்சியாக உடை அணிந்து சென்ற ப்ரியங்காவுக்கு பாலிவுட் நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

ப்ரியங்கா சோப்ரா

image

பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் ப்ரியங்கா சோப்ரா கிராமி விருது விழாவுக்கு படுகவர்ச்சியான உடை அணிந்து சென்றார். ப்ரியங்காவின் உடையை பார்த்த இந்திய ரசிகர்கள் அவரை கிண்டல் செய்ததுடன், கடுமையாக விமர்சித்துள்ளனர். வர, வர ப்ரியங்காவுக்கு உடை அணிவது என்றாலே கஷ்டமாக இருக்கிறது. படுக்கையறை உடையை எல்லாம் விருது விழாவுக்கு அணிந்து வருகிறார் என்று விமர்சித்தார்கள். இந்நிலையில் ப்ரியங்காவுக்கு ஆதரவாக ஒரு குரல் எழுந்துள்ளது.

சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி

image

பாலிவுட் நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி ப்ரியங்கா சோப்ராவுக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார். அந்த போஸ்ட்டில் அவர் கூறியிருப்பதாவது, தன் தொப்பையை ப்ரியங்கா பர்ஸை வைத்து மறைக்காமல் இருப்பது தான் இந்த புகைப்படத்தை மிகவும் அழகாக்கியுள்ளது. அவர் ஒரு ராக்ஸ்டார். அவரின் நம்பிக்கை மற்ற பெண்களுக்கு முன்னுதாரணம் என்று தெரிவித்துள்ளார்.

ரசிகை

image

நான் ப்ரியங்காவின் ரசிகை கிடையாது. ஆனால் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகையாகிவிட்டேன். ஆண்களுக்கு பிடித்தது போன்று இருக்க முடியாது. அசிங்கமான ஆண்களே, நாங்கள் வெறும் உடம்பு மட்டும் அல்ல. யாராவது ஆண்களின் தொப்பை அல்லது உருவத்தை இப்படி கிண்டல் செய்தது உண்டா?. இந்த உலகில் உள்ள அனைத்து பெண்களும் தங்களின் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளட்டும் என்று தெரிவித்துள்ளார் சுசித்ரா.

தொப்பை

image

கிராமி விருது விழாவில் எடுத்த புகைப்படங்களில் ப்ரியங்கா மறைக்க வேண்டியதை மறைக்காமல் இருந்ததாக விமர்சிக்கப்பட்டது. மேலும் அவரின் தொப்பையை பற்றியும் பலரும் கிண்டல் செய்தார்கள். நடிகையாக இருந்து கொண்டு இப்படி தொப்பை வைத்திருக்கிறீர்களே என்று ஆளாளுக்கு கலாய்த்ததை பார்த்து தான் சுசித்ரா பொங்கி எழுந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: samayam

More from திரையுலகம்More posts in திரையுலகம் »