Press "Enter" to skip to content

படமாகிறது நயன்தாரா காதல்!

படமாகிறது நயன்தாரா காதல்!

1/29/2020 3:39:45 PM

தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நானும் சிங்கிள்தான்’. நாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்தப் படத்தை Three is a company என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படம் பற்றி இயக்குனர் கோபி கூறியதாவது…

‘‘சிங்கிள் என்ற வார்த்தை தற்போது மிகவும் கேட்ச்சிங்கானது. அதன் அடிப்படையிலே படத்துக்கு டைட்டில் வைத்தோம். டைட்டில் போலவே கன்டென்டிலும் தனிக் கவனம் செலுத்தி இருக்கிறோம்.தமிழ்சினிமாவில் நயன்தாராவின்  காதல் மிகப்பிரபலம். அந்தக்காதலை அடிப்படையாக வைத்தே ஒரு கதையை தயார் செய்துள்ளோம்.  நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி, பலர் ஆசீர்வதிக்கும் ஜோடியாக இருந்தாலும்  இப்போது வரை சிலரால் ஆச்சர்யமாக பார்க்கப்படும் ஜோடியும் கூட.

இந்த படத்தின் ஹீரோவின் லட்சியமே நயன்தாரா போல் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான். தமிழ்சினிமாவில் பெரிதாக கல்லா கட்டிய படமான அஜித்தின் ‘பில்லா’ படத்தில் நயன்தாரா  டாட்டூ குத்தி இருப்பார். அந்த டாட்டூ குத்திய நபராக தினேஷ் வருகிறார். நயனுக்கு டாட்டூ குத்திய ஹீரோ தன் ஹார்ட்டைப் பறிகொடுக்க காதல் பேய் பிடித்துத் திரிவது தான் கதை. இதற்குள் நயன்- விக்னேஷ் சிவன் காதல் சமாச்சாரமும் இருக்கும்’‘ என்கிறார்.

Source: Dinakaran

More from திரையுலகம்More posts in திரையுலகம் »