Press "Enter" to skip to content

கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் நடைபாதை: தமிழக அரசு திட்டம்

சென்னை பாண்டிபஜாரில் மிக அழகாக அமைக்கப்பட்ட நடைபாதையால் அந்த பகுதியே மிகவும் நவீனமாக உள்ளது.

இந்த நிலையில் இதேபோல் சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் லூப் சாலை வரை நடைபாதை அமைப்பது தொடர்பாக, மத்திய அரசு அறிக்கை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்த வழக்கு ஒன்றின் விசாரணை நேற்று நடைபெற்றபோது, நடைபாதை அமைக்கும் திட்டம் குறித்து சென்னை மாநகராட்சியின் விண்ணப்பத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாக, கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்தது.

இதனையடுத்து, மெரினாவை உலகத்தரமிக்கதாக மாற்றும் நோக்கம், எந்த வகையிலும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய பரிந்துரை மீதான நிலைப்பாட்டை, மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் 6 வாரத்தில் அறிக்கையாக தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
The post கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் நடைபாதை: தமிழக அரசு திட்டம் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »