Press "Enter" to skip to content

“5, 8 பொதுதேர்வு -தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை என்ன?” – நீதிபதி கேள்வி

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லையெனில் அவர்களது நிலை என்ன என இதுகுறித்த வழக்கு ஒன்றில் நீதிபதி கேள்வி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்த ஆணையை ரத்து செய்யக் வேண்டும் என வழக்கறிஞர் லூயிஸ் என்பவர் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது பொதுத்தேர்வு முறையானது மாணவர்களின் கல்வி இடைநிற்றலுக்கு வழிவகுக்கும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு, தேர்ச்சி பெறவில்லை எனில் மறுதேர்வு நடத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மறுதேர்விலும் தேர்ச்சி பெறவில்லை எனில், அந்த குழந்தையின் நிலை என்ன? என அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், பொது தேர்வினை அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்துமா ? அல்லது பள்ளி கல்வி துறை சார்பில் அந்தந்த பள்ளிகளே நடத்துமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த கேள்விக்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், பொதுத் தேர்வு விடைத்தாள்கள் அந்தந்த பள்ளிகளிலேயே திருத்தப்படுமா அல்லது வேறு பள்ளிகளிலா என்பது பரிசீலனையில் உள்ளதாக கூறினார். இதனையடுத்து இது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர், தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர், தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது இந்த வழக்கு பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
The post “5, 8 பொதுதேர்வு -தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை என்ன?” – நீதிபதி கேள்வி appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »