Press "Enter" to skip to content

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

இந்த காலிப் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக விரைவில் நிரப்பப்பட உள்ளது.

இந்த நிலையில், அந்தந்த பள்ளிகளே பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமன் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதம் ரூ. 7,500 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 3 ஆயிரத்து 624 இடைநிலை ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய பட உள்ளனர்.

தற்காலிக ஆசிரியர்கள் பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரையில் பணியில் இருப்பார்கள்.
The post அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »