Press "Enter" to skip to content

ஸ்டாலின் நாள்கணக்கில் போடும் திட்டத்தை ஒரே நேரத்தில் உடைத்து விடுகிறாரா ரஜினி?

ஒரு ஆர்ப்பாட்டத்தை ஒரு போராட்டத்தை ஒரு சட்டத்திற்கு எதிரான கொள்கையை திமுக தலைவர் ஸ்டாலின் எடுத்து அந்த கொள்கையை மக்களிடம் போய் சேர வைக்க பெரும் பாடு படுகிறார்

குறிப்பாக சிஏஏ சட்டத்திற்கு எதிராக அவர் பல்வேறு போராட்டங்களை நடத்தி சமீபத்தில் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார். இந்த கையெழுத்து இயக்கம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தபோது திடீரென ரஜினி ஒரே ஒரு நிமிடம் இது குறித்து பேசி அனைத்தையும் உடைத்து விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இப்பொழுது மட்டுமின்றி ஸ்டாலின் எந்த ஒரு ஸ்டெப் எடுத்தாலும் அதனை உடைக்கும் வகையில் உடனடியாக ஒருசில நிமிட பேட்டியை ரஜினிகாந்த் அளித்து தனை திசைமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது பிரசாந்த் கிஷோர் ஐடியா சொல்ல வந்த பின்னரும் ரஜினியின் புகழை சாய்க்க முடியவில்லை என்றும் வரும் தேர்தலில் ரஜினிக்கும் ஸ்டாலினுக்கும் தான் கடுமையான போட்டி இருக்கும் என்றும் அந்த போட்டியில் ரஜினி வெற்றி பெற்றாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

The post ஸ்டாலின் நாள்கணக்கில் போடும் திட்டத்தை ஒரே நேரத்தில் உடைத்து விடுகிறாரா ரஜினி? appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »