Press "Enter" to skip to content

நடிகைகளுக்கு திரைப்படம் தொழில் பாதுகாப்பானதாக இல்லை – ராதிகா ஆப்தே

நடிகைகளுக்கு சினிமா தொழில் பாதுகாப்பானதாக இல்லை என பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார். ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். திருமணமான பிறகும் துணிச்சலாக கவர்ச்சி வேடங்களில் நடிக்கிறார். 

இவர் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: ’நடிகைகளுக்கு சினிமா தொழில் பாதுகாப்பானதாக இல்லை. எப்போது  வாய்ப்புகள் இருக்கும், எப்போது இல்லாமல் போகும் என்று தெரியாது. நல்ல படங்கள் அமைந்தால் நடிகையாக இன்னும் கொஞ்ச காலம் எங்களை ஞாபகம் வைத்து இருப்பார்கள். அந்த மாதிரி படங்கள் அமையாவிட்டால் மறந்து விடுவார்கள். நான் சினிமா துறைக்கு வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது.

இந்த காலகட்டத்தில் சினிமா, தொடர்கள், சர்வதேச படங்களில் எனது திறமையை வெளிப்படுத்தி நல்ல பெயர் வாங்கி இருக்கிறேன். ஆனாலும் தொழில் ரீதியாக எப்போதும் பயந்து கொண்டேதான் இருக்கிறேன். நாளை எனக்கு வாய்ப்புகள் கிடைக்குமா? என்ற சந்தேகத்திலேயே நாட்களை கடத்துகிறேன்.

வாய்ப்புகளுக்கு பாதுகாப்பு இல்லாத துறை எங்களுடையது. எப்போது எங்கள் கதை முடியும் என்று தெரியாது. ஒவ்வொரு முறையும் புதிய கதைகள் கதாபாத்திரங்கள் கிடைத்து அவற்றில் நடிப்பது என்பது கஷ்டம். அதிர்ஷ்டவசமாக எனக்கு நல்ல கதைகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு முறையும் இப்படி நல்ல கதைகளுக்காகத்தான் காத்து இருக்கிறேன்.

நல்ல கதைகள் கிடைக்காவிட்டால் என்னை மறந்து விடுவார்கள் என்ற பயமும் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது”

இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »