Press "Enter" to skip to content

அடுப்பு பற்றவைக்கவே வசதியில்லாத மக்கள் விளக்கேற்ற முடியுமா? – மக்கள் விரும்பத்தக்கதுடர் பட பிரபலம் டுவிட்

அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை பிரதமர் விளக்கை ஏற்ற சொல்வது சற்று பயமாக இருப்பதாக மாஸ்டர் பட பிரபலம் டுவிட் செய்துள்ளார்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று வீடியோ மூலம் உரையாற்றினார். அப்போது, ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு , அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்றுமாறு மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் ’மேயாத மான்’ ’ஆடை’ ஆகிய படங்களை இயக்கியவரும், விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தில் பணிபுரிந்தவருமான இயக்குனர் ரத்னகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது: “வாசலில் நின்று கை தட்ட சொன்னதுக்கு தெருவில் கூட்டம் கூட்டமாக நின்று தட்டை தட்டிய மக்களுக்கு முதலில் வருத்தங்களும், கண்டனங்களும் தெரிவித்திருக்கலாம். இப்போது அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார். சற்று பயமாக தான் இருக்கிறது’ என்று கூறியுள்ளார். ரத்னகுமாரின் இந்த டுவிட்டுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »