Press "Enter" to skip to content

கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையமாகும் ஷாருக்கானின் அலுவலகம்

மும்பையில் உள்ள தனது 4 மாடி அலுவலகத்தை கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்றுவதற்காக நடிகர் ஷாருக்கான் வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் நிவாரண பணிகளுக்கு நடிகர்-நடிகைகள் நிதி வழங்கி வருகிறார்கள். பிரதமரின் நிவாரண நிதிக்கும் பணம் கொடுக்கிறார்கள். இந்தி நடிகர் ஷாருக்கானும் நிவாரண நிதி திரட்டி வருகிறார். அறக்கட்டளை மூலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் பணியிலும் ஈடுபட்டு உள்ளார். அவர் கூறும்போது, “இந்த இக்கட்டான நேரத்தில் உங்களை சுற்றி இருப்பவர்கள், நாங்கள் தனியாக இல்லை என்பதை உணர வைக்க வேண்டியது முக்கியம். இந்தியர்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்பதை உறுதிப்படுத்துவோம்” என்றார்.

இந்த நிலையில் மும்பையில் தனக்கு சொந்தமாக உள்ள நான்கு மாடிகள் கொண்ட அலுவலகத்தை கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையமாக பயன்படுத்திக்கொள்வதற்கு வழங்குவதாக ஷாருக்கானும், அவரது மனைவி கவுரியும் அறிவித்து உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்கள், முதியோர்கள், குழந்தைகள் தங்கள் அலுவலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மும்பை மாநகராட்சிக்கு இருவரும் தெரிவித்து உள்ளனர். இதற்காக மும்பை மாகராட்சி ஷாருக்கானுக்கும், கவுரிக்கும் டுவிட்டரில் நன்றி தெரிவித்து உள்ளது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »