Press "Enter" to skip to content

ரகசிய மொழி மூலம் என்னை படுக்கைக்கு அழைத்தார்கள் – ஷெர்லின் புகார்

ரகசிய மொழி மூலம் என்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று பாலிவுட் நடிகை ஷெர்லின் புகார் கூறியுள்ளார்.

தமிழில், யுனிவர்சிட்டி படத்தில் நடித்தவர் ஷெர்லின் சோப்ரா. இந்தியில் காமசூத்ரா 3டி படத்தில் நடித்து பிரபலமானார். மேலும் பல இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியும் அவரை பிரபலப்படுத்தியது. பட உலகில் படுக்கைக்கு அழைக்க ரகசிய (கோட்) வார்த்தையை பயன்படுத்துகின்றனர் என்று ஷெர்லின் சோப்ரா குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நான் இந்தி படங்களில் நடிக்க ஆரம்பத்தில் எனது புகைப்படங்களுடன் பல பட நிறுவனங்களில் வாய்ப்பு தேடி அலைந்தேன். அப்போது என்னிடம் நள்ளிரவில் டின்னரில் சந்திப்போமா என்று கேட்பார்கள். நள்ளிரவிலா? எப்போது வரச்சொன்னீர்கள்? என்று புரியாமல் கேட்பேன். அதற்கு இரவு 11 அல்லது 12 மணிக்கு வரவேண்டும் என்பார்கள். அந்த நேரத்தில் என்னால் வர இயலாது என்று மறுத்து விட்டேன். அதன் அர்த்தம் தாமதமாகத்தான் புரிந்தது.

இப்படி பல நிறுவனங்களுக்கு வாய்ப்பு தேடி அலைந்தபோது இதே மாதிரி நள்ளிரவு டின்னருக்கு அழைத்தனர். அதன்பிறகு நள்ளிரவு டின்னர் என்பது படுக்கைக்கு அழைக்கும் ரகசிய மொழி என்பது புரிந்தது. உண்மை தெரிந்தபிறகு இதே ‘கோட்’ வார்த்தையை பயன்படுத்துகிறவர்களிடம், ‘உணவு கட்டுப்பாட்டில் இருக்கிறேன், காலை அல்லது மதிய உணவுக்கு வேண்டுமானால் வருகிறேன்’ என்பேன். அதன்பிறகு அவர்கள் அழைப்பது இல்லை.

இவ்வாறு கூறினார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »