Press "Enter" to skip to content

ராதிகா ஆப்தே இயக்கிய முதல் குறும்படம் – சர்வதேச விருது வென்றது

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே, தான் இயக்கிய முதல் குறும்படத்திற்கு சர்வதேச விருது வென்றுள்ளார்.

தமிழில் கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. மேலும் ஆல் இன் ஆல் அழகுராஜா, தோனி, வெற்றிச்செல்வன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ‘தி ஸ்லீப் வாக்கர்ஸ்’ என்ற குறும்படத்தை இயக்கினார். சஹானா கோஸ்வாமி உள்ளிட்ட சிலர் இந்த குறும்படத்தில் நடித்திருந்தனர். 

தூக்கத்தில் நடக்கும் பிரச்சினைகளை இதில் காட்சிப்படுத்தி இருந்தார். இந்த குறும்படம் தனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றும் தொடர்ந்து படங்கள் இயக்குவேன் எனவும் கூறி இருந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கினால் சர்வதேச குறும்பட விழா இணையதளத்தில் நடந்தது. இதில் ராதிகா ஆப்தே இயக்கிய குறும்படம் சிறந்த நள்ளிரவு குறும்படத்துக்கான சர்வதேச விருதை வென்றுள்ளது. 

இதுகுறித்து ராதிகா ஆப்தே கூறும்போது “எனது குறும்படம் விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஊரடங்கு காரணமாக மக்கள் வெப் தொடர்களை அதிகம் விரும்பி பார்க்கின்றனர். லண்டன் தெருக்களில் நடந்து செல்லும்போது என்னை அடையாளம் கண்டு எனது நடிப்பை பாராட்டுகிறார்கள்” என்றார். லண்டனை சேர்ந்த பெனடிக்ட் டெய்லர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட ராதிகா ஆப்தே தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »