Press "Enter" to skip to content

குரூப்பிசம் விரைவில் ஒழிக்கப்பட வேண்டும் – சிம்பு பட தயாரிப்பாளர் ஆதங்கம்

குரூப்பிசம் விரைவில் ஒழிக்கப்பட வேண்டும் என்று சிம்பு பட தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

நெப்போடிசம் போலவே குரூபிசம் என்ற வாசகம் கோலிவிட்டில் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சிம்புவை வைத்து மாநாடு படத்தை தயாரித்து வரும் சுரேஷ் காமாட்சி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

பாலிவுட்டில் மட்டுமல்ல குரூப்பிசம் இங்கும் உள்ளது. நடிகர்களிடம் உள்ளதோ இல்லையோ ஒருசில தயாரிப்பாளர்களிடம் உள்ளது. அவர்களால்தான் மிகப் பழமையான தயாரிப்பாளர்களும் ஒதுங்கியிருப்பதுவும் அதனால்தான்.
தான் மட்டுமே வாழவேண்டும் என நினைக்கும் அந்த பிரபல தயாரிப்பாளர் தன் பலத்தால் சில பல தயாரிப்பாளர்களை உடன் சேர்ந்துகொண்டு பலரை வாழவிடாமல் கெடுத்துக்கொண்டிருக்கிறார்.

ஹீரோக்களுக்கு போன் பண்ணி கெடுத்துவிடுவதும், பைனான்சியர்களை கலைத்துவிடுவதும், படத்தைப் பற்றி கேவலமாக கிளப்பிவிட்டு விநியோகஸ்தர்களிடம் பீதியை உருவாக்குவதுமாக முன்னால் விட்டு பின்னால் செய்யும் வேலையை வெற்றிகரமாக செய்துவருகிறார்.

 அதற்கு சில தயாரிப்பாளர்கள் உடன் பட்டு நிற்பதுதான் வேதனை. வெகுவிரைவில் முகத்திரைகள் கிழியும். அதற்கு நடுவில் பாலிவுட் போல யாரும் தற்கொலை அது இதுன்னு இறங்கிவிடக்கூடாது. குரூப்பிசம் விரைவில் ஒழிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »