Press "Enter" to skip to content

விஜய் சேதுபதி – நயன்தாரா பாடலை கொண்டாடிய ரசிகர்கள்

விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இமைக்கா நொடிகள் படத்தின் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் இமைக்கா நொடிகள். இதில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கி இருந்தார்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இதில் இவருடன் நயன்தாரா ‘நீயும் நானும் அன்பே…’ என்ற பாடலில் ரொமான்ஸ் செய்யும் பாடல் ரசிகர்களை இன்றும் கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் இப்பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளை அள்ளியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »