Press "Enter" to skip to content

லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் – மாளவிகா மோகனன்

மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் என்று கூறியிருக்கிறார்.

தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதைத் தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு தியேட்டரில் வெளியாக இருக்கிறது.

இன்று மாளவிகா மோகனன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்காக மாஸ்டர் படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து கூறி புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். இது ரசிகர்களிடையே கவனம் பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலானது.

அதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் மாளவிகா மோகனன். இதில் விஜய் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக குறிப்பிட்டார். மேலும் மாஸ்டர் படத்தில் உங்கள் பெயரென்ன என்று ரசிகர் ஒருவர் கேட்க, ”சி என்ற எழுத்தில் எனது பெயர் தொடங்கும். இதற்கு மேல் சொன்னால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார்” என்று கூறியிருக்கிறார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »